Thursday, 27 November 2014

லிங்கா படத்தை ரூ 32 கோடிக்கு வாங்கியது ஜெயா தொலைக்காட்சி


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தை ரூ 32 கோடிக்கு வாங்கி அசர வைத்துள்ளது ஜெயா தொலைக்காட்சி.
இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கும் இவ்வளவு பெரிய தொகை விலையாகத் தரப்பட்டதில்லை.
இந்தப் படத்தை வாங்க சன் டிவி பெரும் முயற்சி மேற்கொண்டது. ரூ 28 கோடி வரை விலை பேசினார்கள். இந்த நிலையில் ரூ 32 கோடி கொடுத்து லிங்காவின் தொலைக்காட்சி உரிமையைப் பெற்றுவிட்டது ஜெயா தொலைக்காட்சி.
தெலுங்கு, இந்தி மொழிப் பதிப்புகளும் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளன.

இந்திய சினிமாவில் இவ்வளவு பெரிய தொகை இதுவரை எந்தப் படத்துக்கும் தரப்பட்டதில்லை. அந்த வகையில் இதுவும் லிங்கா படத்தின் புதிய சாதனையாகும்.

No comments:

Post a Comment