(Source Dreamdth)
ஸ்டார்விஜய் தொலைக்காட்சி
கார்த்தி, லஷ்மி
மேனன் நடித்துகொண்டிருக்கும் “கொம்பன்” திரைப்படத்தை 16 கோடிக்கு ஸ்டார்விஜய்
தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது. மேலும் மீகாமன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கடும்
போட்டிகளுக்கு இடையில் விஜய் டிவி பெரும்தொகையைகொடுத்து
கைப்பற்றியுள்ளது. விதார்த் நடித்த “காடு”, வைபவ் நடித்து ஷங்கர் தயாரித்த “கப்பல்”
மற்றும் விஜய் சேதுபதி நடித்த “வன்மம்” போன்ற படங்களை ஸ்டார் விஜய் பெரும்
தொகைகளுக்கு வாங்கியிருக்கிறது.
ஜி தமிழ் தொலைக்காட்சி
சித்தார்த்தின் “எனக்குள்
ஒருவன்” திரைப்படத்தை ஜி தமிழ் தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது.
சன் தொலைக்காட்சி
பிரிதிவிராஜ், சித்தார்த்,
வேதிகா நடித்த “காவியத்தலைவன்”, S.J.சூர்யா நடித்து இசையமைத்த “இசை” மற்றும் தனுஷ்
நடித்து K.Vஆனந்த் இயக்கிய “ஆனேகன்” போன்ற படங்களை சன் தொலைக்காட்சி
வாங்கியிருக்கிறது.
ஜெயா டிவி
ஒரு பெரும்
தொகைக்கு “சியான்” விக்ரம் நடித்து, ஷங்கர் இயக்கிய “ஐ”, இளையதளபதி விஜய்
தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் “விஜய்58” திரைப்படம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து
K.S.ரவிக்குமார் இயக்கிய “லிங்கா” திரைப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு ஜெயா டிவி
வாங்கியிருக்கிறது.
No comments:
Post a Comment