Monday, 24 November 2014

கணினிமுன் பணிபுரிபவர்கள் கவனத்திற்கு


(Source everypageispageone)


கணினிமுன் தொடர்ச்சியாக அமர்ந்து பணிபுரிபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாம் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டெழுந்து நடந்து வந்து பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் அளவுக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கணினியில் தொடர்ந்து பணிபுரிவதைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது இடைவேளை விடுவதாகக் கூறிக்கொண்டு ஏராளமாகக் காபியைக் குடிக்க வேண்டாம். அதுவே உடல்நிலையைப் பாதிக்கலாம்.

தொடர்ந்து நாள் முழுவதும் பணிசெய்வதற்காகக் கணினியின் திரையைக் கண்களால் பார்த்துக் கொண்டே இருப்பதால் கண்ணுக்குச் சோர்வும் கண்ணின் ஈரப்பசை காய்ந்தும் இருக்கும். அதனால் அரைமணிநேரத்துக்கு ஒருமுறை கண்களைப் பத்துமுறை மூடிதிறந்திறங்கள்.

நாம் பணிபுரியும் கணினியும் நாம் அமரும் நாற்காலியும் சரியான முறையில் அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் முதுகுவலியும் கழுத்துவலியும் இலவசமாக வந்துசேரும்.

பணி இடைவேளையில் சமோசா போன்றவைகளை உண்பதும், கோக்கோ கோலா போன்றவைகளை அருந்துவதையும் தவிர்த்துப் பழங்களை உண்ணும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

வெப்ப மிகுந்த அறைகளிலிருந்து ஈரப்பதம் அதிகமாகவுள்ள கணினி வைத்துள்ள அறைக்குள் சென்றிடும்போது சிறிதுநேரம் நம்முடைய உடல் அம்மாற்றங்களை ஏற்குமாறு நின்று நிதானித்துச் செல்லுங்கள்.

கூடியவரை இயற்கையான சூரியஒளி காற்றோட்டம் போன்றவை அலுவலக அறைக்குக் கிடைக்குமாறு அமைத்திடுங்கள்.



No comments:

Post a Comment