Monday, 24 November 2014

பிஎஸ்என்எல் ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் (JAO) 962 காலிப் பணியிடங்கள்


பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட் என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் (JAO) காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யதற்குரிய போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்: 962

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.காம். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சி.ஏ.வோ காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டண்ட்டாகவோ கம்பனி செகரட்டரியாகவோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 2015 ஜனவரி 1 அன்று 20-30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை உண்டு.

போட்டித் தேர்வு: போட்டித் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. முதலில் தாளில் ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகியவை பற்றிய அறிவும், இரண்டாம் தாளில் நிதி நிர்வாக அறிவும் சோதிக்கப்படும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். இரண்டு தாள்களுக்கும் தலா மூன்று மணி நேரம் கால அவகாசம் தரப்படும். இரண்டு தாள்களும் சேர்ந்து மொத்த மதிப்பெண்கள் 450.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ரூ. 1000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட இயலும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு தேர்வுக் கட்டண விலக்கு உண்டு.
உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.externalexam.bsnl.co.in/ என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடங்கும் நாள் 2014 டிசம்பர் 1 (மாறுதலுக்குட்பட்டது).

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2014

கூடுதல் விவரங்களுக்கு: http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/pdf/jao_advertisement_2014.PDF


போட்டித் தேர்வு: 22-02-2015

No comments:

Post a Comment