ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் யாருக்கும் பயப்படாத குணம் படைத்தவராகவும் விளங்கும் ஆற்றல்கொண்ட ரிஷப ராசிக்காரர்களே! உங்கள் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளும் ஏற்படுக்கூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கைகூடும். ஆண்டின் தொடக்கம் சற்று சாதகமின்றி இருந்தாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன வரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். உத்தியோ கஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களைப் பெற்று உயர்பதவிகளைப் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவு, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. இந்த ஆண்டு எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நல்ல அனுகூலமான பலனைப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை அடையமுடியும்.
ஆரோக்கியம்
இந்த ஆண்டு முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு, கை, கால்களில் அசதி, எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படவியலாத நிலை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். மனைவிக்கும் எதிர்பாராத வகையில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 05-07-2015-ல் ஏற்படும் குரு மாற்றத்தால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். அன்றாடப் பணிகளிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்திலுள்ளவர்களை ஆண்டின் தொடக்கத்தில் அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. கணவன் மனைவியிடையேயும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உறவினர்கள் அனுசரித்துச் செல்லமாட்டார்கள். இந்த வருடம் சனி சாதகமின்றி சஞ்சரித்தாலும், கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் பிற்பாதியில் குரு 4-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுபகாரியங்கள் கைகூடும்.
வேலை
எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நினைத்த இலக்கை அடைந்துவிடமுடியும். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமுடன் பேசுவது, உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது நன்மையளிக்கும். இந்த வருடம் குரு சஞ்சாரமும் சுமாராக இருப்பதால் பணியில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். உயரதிகாரிகள் உங்களின் திறமைகளைப் பாராட்டுவதால் மனநிம்மதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். உங்கள்மீதிருந்த தேவையற்ற பழிச்சொற்கள் மறையும்.
தொழில், வியாபாரம்
கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. வேலையாட்களாலும் வீண் வம்பு, வழக்குகளை சந்திக்கநேரிடும். தொழில்ரீதியாக நண்பர்களும் எதிரியாவார்கள். தொழிலிலும் மந்தமான நிலையிலேயே நடைபெறும் என்றாலும், போட்ட முதலீட்டினை எடுக்கும் அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூட்டாளிகளிடமும் கலந்தாலோசித்துச் செயல்படுவது அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள உதவும்.
பெண்கள்
இந்த ஆண்டானது அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கணவரிடம் பிரச்சினை, உறவினர்களிடையில் அடிக்கடி வீண் வாக்குவாதம் போன்றவை உண்டாகி, மனநிம்மதி குறையும். திருமண வயதை எட்டியவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஒற்று மையும் நிம்மதியும் சிறக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.
பணம்
பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் உறவினர்கள் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்பவர்களுக்கும் நல்ல லாபம் அமையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைகளை முதலீட்டிற்குப் பயன்படுத்தும்போது கவனம் தேவை.
அரசியல்வாதிகள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, எதிலும் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றி அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயர்பதவிகளும் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சியடைவீர்கள்.
விவசாயிகள்
மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலைபோகும். ஆண்டின் தொடக்கத்தில் பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தன வரவுகளும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவையும் நிறைவேறும்.
கலைஞர்கள்
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பொருளாதாரரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் குரு மாற்றத்திற்குப் பின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். வராமலிருந்த பணவரவுகளும் தடையின்றி வந்துசேரும்.
மாணவர்கள்
கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல் பட்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். உடன்பழகும் நண்பர் களிடம் கவனமுடன் செயல்படுவதும், பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டுநடப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த ஆண்டு 7-ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வதும் நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் வழிபடலாம். குரு பகவானும் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதால் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. வாழ்த்துக்கள்.
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த ஆண்டு 7-ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வதும் நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் வழிபடலாம். குரு பகவானும் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதால் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment