Tuesday 18 November 2014

நீங்கள் பயன்படுத்துவது தேங்காய் எண்ணையே இல்லை

(Source Organicfacts)

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. 


தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. 

மினரல் ஆயில் என்றால் என்ன ? 

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும். கச்சா எண்ணையிலிருந்து அதீதகடைசி பொருளே இந்த மினரல் ஆயில்ஆகும் .

கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள்எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “ஆயில்’. இதற்கு நிறமோ,மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்தவகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம்.

எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல்ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள்.

மினரல் ஆயில் சேர்த்தல் பக்கவிளைவுகள் வருமா ?


1.தோல் வறண்டு போகும்முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.
2.முடி கொட்டும், முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும்.

ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.

குறிப்பு 

நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளரவைக்கும். கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர, கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

No comments:

Post a Comment