Friday 2 January 2015

ஆண் பெண் வயதுக்கு வருவதென்றால் என்ன


நமது இந்திய நாட்டைப் பொருத்தமட்டில் பெண்கள் வயதுக்கு வந்தால் நிறைய சடங்குகள், விருந்து என்று அமர்க்களமாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் எங்களது வீட்டில் திருமணத்திற்கு தயாராக ஒரு பெண் இருக்கிறாள் எனவே பெண் கேட்க வருவோர் வரலாம் என்று மறைமுகமாக ஊருக்கே சொல்லப்படும்.

ஆனால் வயதுக்கு வரும் விசயத்தில் ஆண்களை யாருமே கண்டுகொள்வதில்லை என்று தெரியும். எல்லா ஆண்களுக்கும் ஒரு குறுகுறுப்பு இருக்கும் அதாவது பெண்கள் வயதுக்கு வருவதென்றால் என்ன என்று, ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லத்தான் யாரும் தயாராக இருக்கமாட்டார்கள்.

பெண் வயதுக்கு வருவது

பெண் வயதுக்கு வருவதென்றால் அவர்களின் மார்பகங்கள் வளர்ச்சி ஆரம்பிக்கும் தருணம் ஆகும். இது பெண்களே தங்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதுமட்டுமல்ல தங்கள் அடிவயிற்றில் வலி ஏற்ப்பட்டு பிறப்புறுப்பில் உதிரப்போக்கு இருக்கும் இதை மையப்படுத்திதான் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டதாகவும் அறியப்படுகிறது. ஆனால் பெண்கள் வயதுக்கு வருவதென்பது அவர்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடையும்போதே நிகழ்ந்துவிடும். பிறப்புறுப்பில் உதிரம் வருவது அந்த பெண் உடலுறவுக்கு மற்றும் தாய்மை அடையவும் தயாராக இருப்பதைக் குறிக்கும்.

ஆண்கள் வயதுக்கு வருவது


பெண்களைப் போல் வெளிக்காட்டும் அறிகுறிகள் என்று ஆண்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். உண்மையில் ஆண்கள் வயதுக்கு வருவதென்பது அவர்களின் விரைப்பை வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும் தருணத்தைதான் ஆண்கள் வயதுக்கு வருவது என்பது சொல்லப்படும். 

எனவே இப்போது ஆண்களோ பெண்களோ வயதுக்கு வருவது என்பதைப்பற்றி தெளிவு கிடைத்திருக்கும்.

No comments:

Post a Comment