Saturday 10 January 2015

உங்கள் பெயரின் முதல் எழுத்தில்தான் உங்கள் வாழ்கையே இருக்கு


A

நீங்கள் எதிலும் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்தும் தன்மை கொண்டவர் நீங்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும். இயல்பாகவே நீங்கள் மாபெரும் வீரராக இருப்பீர்கள்.

B

உங்கள் வாழ்கை பயணம் அற்புதமாக இருக்கும், நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

C

பல துறைகள் பற்றிய அறிவு, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள். அனைவரையும் கவர்வதில் நீங்கள் கில்லாடி.

D

அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள். இதனால் உங்களுக்கு கடல் கடந்தும் நட்புகள் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

E

பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை. அடுத்து என்ன என்று சென்றுவிடுவீர்கள்.

F

திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள். உங்களைசுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

G

நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் பேசும் திறன் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

H

நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள். இதனால் நீங்கள் மிகவும் செல்வந்தராக திகழ்வீர்கள் ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

I

நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். இதனால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிவரும். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

J

நீங்கள் மிகப்பெரிய லட்சியவாதியாக இருப்பீர்கள். உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட மேன்மையான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

K

உங்கள் வாழ்கை சற்று போராட்டமாக இருக்கும், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

L

வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும். ஆனால் குடும்ப வாழ்கை கேள்விக்குறிதான்.

M

நீங்கள் தைரியம், அறிவு மற்றும் கடின உழைபு உள்ளவராக இருப்பீர்கள். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வீர்கள்.

N

மிகவும் துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

O

அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள். இதனால் சண்டை சச்சரவுகள் வரலாம்.

P

வாழ்க்கையை நன்றாக வாழத்தெரிந்தவர் நீங்கள், திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

Q

நீங்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராக வர வாய்புகள் அதிகம். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பீர்கள். உங்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். உங்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.

R

காந்தம் போல அனைவரையும் கவர்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள். காதல் விசயத்தில் நீங்கள் சுமார் மூஞ்சு குமார் தான். ஆனால் உங்கள் கனவனை அல்லது மனைவியை கண்முடித்தனமாக காதலிப்பீர்கள்.

S

உங்களுக்கு கவர்ச்சி கவர்ச்சியாக இருக்க பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம். அந்த விசயத்தில் நீங்கள் பலே கில்லாடிகள்.

T

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வருத்தம் உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் போராடி முன்னேற்றம் அடைவீர்கள்.

U

அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவீர்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் உங்களுடன் வழ்வது உங்கள் துணைக்கு சற்று கடினம்தான். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு முன்பே பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும் வாய்ப்பு அதிகம்.


நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள். இதனால் சில மன உறுத்தல்கள் வந்துபோகும்.

W

கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். உங்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் நீங்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

X

சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக மற்றவர்கள் வழி நடத்துவார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிந்துகொண்டு இருப்பீர்கள்.

Y

நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை சந்திக்க தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வீர்கள்.

Z

நீங்கள் அழகானவர், உங்களை அனைவருக்கும் பிடிக்கும். உங்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறந்த கவுன்சிலராக இருப்பீர்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வீர்கள்.

No comments:

Post a Comment