Sunday, 11 January 2015

சிங்காரவேலன் கொடுத்ததே 75 லட்சம்தான் - ராக்லைன் வெங்கடேஷ்



ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "நாங்க படத்தை வித்தது எம்.ஜி.முறைப்படி. உண்மையா சட்டப்படி அவருக்கு நஷ்டஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. சட்டப்படி ஒப்பந்தம் இருக்கு.

ஆனா இப்போ அவங்க திருப்பிக் கேக்குறாங்க.. அதுலேயும் சிங்காரவேலன் எட்டு கோடி ரூபாய்க்கு திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவை வாங்கியிருக்கேன்'னு சொல்லியிருக்காரு. அதுல அவரோட பங்கு வெறும் ஒன்றே கால் கோடிதான். மீதியெல்லாம் தியேட்டர் அதிபர்கள் மற்றும் அவரோட நண்பர்கள் கொடுத்தது. அதைத்தான் வேந்தர் மூவிஸ்ல கொடுத்திருக்காரு. 

இன்னும் ஒரு விஷயம்.. சிங்காரவேலன் தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டிய ஒன்றே கால் கோடி ரூபாய்ல 55 லட்சம் ரூபாயை கடைசி வரைக்கும் அவர் தரவேயில்லை. இன்னும் பாக்கி வச்சிருக்கார். வெறும் 75 லட்சம் ரூபாய்தான் அவரோட முதலீடு. இதன்படி பார்த்தால்கூட நாங்க அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. அவர் இதுக்கு மேலேயே சம்பாதிச்சிட்டாரு..", என்றார்.

No comments:

Post a Comment