Saturday, 25 April 2015

என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும்?

இந்த கேள்விதான் பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் மனதை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கோடிக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் படிப்பு முடிகிறதோ இல்லையோ வேலை கிடைத்துவிடவேண்டும். பெற்றோர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.
இந்தியாவில் நாளுக்குநாள் மாணவர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறைய வாய்ப்பு இல்லை அதனால் போட்டிகள் மிகவும் கடுமையாகப் போகிறது என்பது நிதர்சனம்.

இந்த படிப்பை படித்தால் வேலை கிடைக்காது என்ற படிப்பு என்று எதுவும் இல்லை அனைத்து படிப்பிற்கும் வேலை நிச்சயம். எந்த துறையை சார்ந்த படிப்பை படித்தோமோ, அதற்கு எங்கே வரவேற்பு கிடைக்குமோ, அங்கே அங்கேபோய் தேடவேண்டும் இல்லையென்றால் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பட்டயப்படிப்பு என்று எதைப் படித்தாலும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவேண்டியதுதான். வாய்புகள் உங்களைத்தேடி வராது நீங்கள்தான் வாய்ப்பு கிடைக்கும் இடத்தைத்தேடி செல்லவேண்டும் அல்லது உருவாக்க வேண்டும். 


கல்லூரியில் உள்ள பாடப்பிறிவுகள் மட்டும் உங்களுக்கு வேலைவாய்ப்பு தந்துவிடாது, அத்துடன் சான்றிதழ் படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தால் விரைவாக வேலை கிடைக்கலாம். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து அதனுடன் Tally கற்றுக்கொண்டு மாதம் 1௦௦௦௦ மேல் சம்பரிக்கவும் செய்கிறார்கள் அதேபோல் பொறியியல் படித்துவிட்டு மாதம் 5௦௦௦ சம்பளமாவது கிடைக்காதா ஏங்குபவர்களும் இருகிறார்கள். ஏதோ கல்லூரிக்குச் சென்றோம், என்னமோ படித்தோம், எங்கேயோ சுத்தினோம் என்று இருந்தால் நிச்சயம் படிப்பு முடிந்தவுடன் கடுமையான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டிவரும். இது தேவையில்லாத மனஉளைச்சலைதான் தரும்.

No comments:

Post a Comment