இந்த பாடல் வரிகள் தற்போதுள்ள சூழ்நிலையில் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. பெரும்பாலனவர்கள்
“இவனுக்கு வந்த நல்ல நேரத்த பாரேன்” என்று புலம்பிக்கொண்டு இருந்தாலும்,
சிவகார்த்திகேயன் தன் வேலைகளை சிறப்பாகச் செய்து நாளுக்குநாள் தமிழ் சினிமா
இரசிகர்களின் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துவிட்டார் என்றால் அது மிகையாகாது.
மெரினா – மனம் கொத்திப் பறவை
மெரினா – மனம் கொத்திப் பறவை இந்த இரண்டு படங்கள் வந்த புதிதில் நிச்சியமாக
சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு உயர்ந்து நிர்ப்பார் என்று மெரினா இயக்குனர்
பாண்டி ராஜ் மற்றும் மனம் கொத்திப் பறவை இயக்குனர் எழில் என இருவரும்
நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள், அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயனே கூட
நினைத்துப் பார்க்காத அந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.
“அதிர்ஷ்டம் அதான் வந்துட்டான்”
மேலே சொன்ன வார்த்தைகள் அவரைப் பற்றி சொல்வதுண்டு. இப்படி சொல்பவர்கள்
கண்டிப்பாக உழைக்காமல் பணம் சம்பாரிக்க வேண்டும் பேர்வழிகள்தான் மற்றும் இவரை
தவறாக எடை போட்டவர்கள்தான். சரி இவர்கள் இப்படியே புலம்பிக்கொண்டு இருக்கட்டும்
விடுங்கள்.
சர்வர் சுந்தரம்(நாகேஷ்) – எதிர்நீச்சல்(சிவகார்த்திகேயன்)
மெரினா மற்றும் மனம் கொத்திப் பறவை படங்கள் வரை நடிகர் சிவகார்த்திகேயன்
என்பவர் நகைச்சுவை நடிகராத்தான் எல்லோரும் பார்த்தார்கள். சர்வர் சுந்தரம்
படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்ததுபோல் எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன்
கதாநாயகனாக(இரண்டு படங்களில் கதாநாயகன் மற்றும் 3 படத்தில் இடைவேளை வரை
நகைச்சுவை,துணை நடிகர்) நடித்தார், மாபெரும்வெற்றியாக அமைந்தது.
3 மாபெரும்வெற்றி
எதிர்நீச்சல் படத்தைத் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் மான்
கராத்தே என தொடர்ந்து மூன்று மாபெரும்வெற்றிப் படங்கள். சினிமா வாழ்கையில் அடுத்த
கட்டத்தில் உயர்ந்து நிற்கிறார் சிவா.
காக்கிசட்டையில் அதிரடி
காக்கிசட்டை படத்தின் முன்னோட்டம் பார்த்தவர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு
அதிரடியில் கலக்கியிருக்கிறார். எதிர்மறையான விமர்சனங்கள் வர வாய்ப்புகள் இல்லை
என்றேத் தோன்றுகிறது.
தமிழ் சினிமாவில் இடம் பிடிக்க
தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில் நகைச்சுவை, அதிரடி, குடும்பம் என இந்த மூன்று
விசயங்களில் கவனம் செலுத்தினால் தாக்குபிடித்துவிடலாம். பொது பார்வையாளர்கள்
மற்றும் குழந்தைகளை கவர நகைச்சுவை இயல்பாகவே வருகிறது. அதிரடியிலும் நல்ல
முன்னேற்றம் தெரிகிறது மோசமில்லை. குடும்ப பார்வையாளர்களுக்கு பிடித்த நடிகராக
இருந்தால் சுமாரான படத்தைக்கூட “சூப்பர்ஹிட்” ஆக்கிவிடுவார்கள். ஆனால் இவர் பேசும்
இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை தரக்குறைவாக வசனம் பேசுவது என தன் தலையில் தானே
மண் அள்ளிப்போட்டுகொள்கிரரோ என்று தோன்றுகிறது. பெண் பார்வையாளர்களை கவர தவறினால்
தமிழ் சினிமாவில் தாக்குபிடிக்க முடியாது. நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த
யுத்தியை பயன்படுத்துவதால்தான் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத கூட்டம் அவர்
படத்திற்கு வருகிறது.
இதையெல்லாம் மனதில் வைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் நல்ல கதைகளை தேர்வு
செய்து, பார்ப்பவர்கள் முகம் சுளிக்காவண்ணம் நடித்தால் நடிகர் சிவகார்த்திகேயன்
அடுத்த பத்து வருடங்களுக்கு மிகப்பெரிய ஆளுமையாக வளர்ந்து நிர்ப்பார். இதைவிடுத்து
வெறும் நகைச்சுவை மற்றும் ஜனரஞ்சக படமாகவே நடித்தால் அடுத்த மூன்று வருடங்கள் கூட
தாக்குபிடிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
No comments:
Post a Comment