லிங்கா படப்பிரச்சினை தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக மாறிவிட்டது.
நாளுக்கு நாள் லிங்காவின் பிரச்சினை வேறு விதமாக அதிரடியாக மாறிக்கொண்டே
இருக்கிறது. தற்போது ஒரு முன்னணி நடிகர் பெயர் திடிரென்று அடிபடுகிறது.
போட்டிகள் இருந்தால்தான் எந்த ஒரு தொழிலுக்கும் நல்லது, அதுமட்டுமல்லாமல்
அதுதான் ஆரோக்கியமான போக்கு. ஆனால் பொறாமையும் சேர்ந்துகொண்டால் பாதிப்பு என்பது
சம்பந்தப்பட்ட இருவருக்கும்தான்.
கடந்த இரண்டு நாட்களாகவே டிவிட்டர் மற்றும் பேஸ்புக் என்று ஒரு செய்தி
அரசல்புரசலாக காட்டுதீபோல் பரவுகிறது. அதாவது சில மூத்த பத்திரிகையாளர்கள்
வாய்மொழித் தகவலாக லிங்கா விஷயத்தில் ஒரு முன்னணி நடிகரின் உள்குத்து உள்ளதாக
தெரிவித்தாலும். யாரும் வெளிப்படையாக பேசாமல் இருந்தனர்.
ஆனால் நேற்று குறிப்பிட்ட பத்திரிகையாளர் ஒருவர் தனது பேஸ்பூக் பதிவில் “லிங்கா
படம் நஷ்டம் ஆன விசயத்தில் ஒரு முன்னணி நடிகர் மூளையாக செயல் படுகிறார் என்றும்
போராட்டக்காரர்கள் உடன் முன்னணி நடிகருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தொலைபேசி
வாயிலாகவும், நேரடியாகவும் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியதாகவும் நம்பத்தகுந்த
வட்டாரங்கள் தெரிவிகின்றன” என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் “அவருக்கு நெருக்கமானவர்கள்தான் சில அமைப்பைச் சேர்ந்தவர்களை
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களம் இறங்கச்செய்துள்ளார்கள்” என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
இதில் எந்தஅளவிற்கு உண்மை இருக்கிறது என்று உடனடியாக கண்டுபிக்க முடியவில்லை.
நமது குழுவின் சார்பில் சில மூத்த பத்திரிகையாளர்களை அணுகி விசாரித்தோம் ஆனால்
பெரியஇடத்து விவகாரம் என்பதால் அவர்கள்
வெளிப்படையாக எதையும் கூற முன்வரவில்லை.
No comments:
Post a Comment