Friday 28 November 2014

காவியத்தலைவன் திரை விமர்சனம்


இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிய படம் காவியத்தலைவன். படம் வெளியாகும் முன்பே படத்தைப்பற்றி நல்ல வாய்மொழியாக கருத்துகள் சொல்லப்பட்டது. அதற்கேற்ப படமும் அமைந்திருகிறது. குறிப்பாக நடிகர் சித்தார்த் நடிப்பு கூடுதல் பலம்.       

இந்த படம் 20ஆம் நுற்றண்டுகளுக்கு முன் நடப்பதாக காட்டபடுகிறது. ஒரு நாடக கோஷ்டியில் இருக்கும் இரண்டு நண்பர்கள் (சித்தார்த், பிரிதிவிராஜ்), அவர்களின் குரு நாசர் இடையே நடக்கும் கதைதான் இந்த காவியத்தலைவன் திரைப்படம். திறைமைசாலிகளான இரண்டு நண்பர்கள் தங்களின் திறமையின் காரணமாக போட்டி போடுகிறார்கள் அதுவே தவறாக செல்கிறது மிண்டும் அவர்கள் பழைய நண்பர்களாக மாறினார்களா? என்பதுதான் முழுக்கதையும்.     

சித்தார்த், பிரிதிவிராஜ் இவர்களின் நடிப்பு திறமை அபாரமாக இருக்கிறது. மேலும் நடிகை வேதிகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் மிளிர்கிறார், நடிப்பில் கச்சிதம். நாசர், பொன்வன்வன், தம்பி ராமையா தங்களின் கதாபாத்திரத்தித்தை வழக்கம்போல் சிறப்பாக செய்துள்ளார்கள்.

A.R.ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

வசந்தபாலனின் திரைக்கதை சிறப்பாக அமைத்து அனைவரின் பாராட்டைப் பெறுகிறார்.

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா திரையில் மாயாஜாலமே காட்டியிருக்கிறார் கண்டிப்பாக திரையங்கில் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

ஒரு கடந்தகால படத்திற்கு சிறந்த படத்தொகுப்பை வழகியிருக்கிறார் பிரவீன் KL.

முக்கியமாக இடைவேளை மற்றும் பட இறுதியில் வரும் வசனங்கள் சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் இந்த படம் சிறந்த காவியத்தலைவன்.


மேலும் இன்றைய சூடான பதிவுகள்

ரஜினி அரசியலுக்கு வந்தால் மோதிப்பார்க்கத் தயார் – சீமான்

உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் 'லிங்கா'

ரூ.80 கோடிக்கு லிங்கா உரிமத்தை வேந்தர் மூவிஸ் கைப்பற்றியது

ஆன்டிராய்டு லாலிபாப் புதுசா என்ன இருக்கு

பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும்

Micromax Canvas Tab P666



No comments:

Post a Comment