தமிழில் கடந்த 2014ஆம் ஆண்டு தனுஷ், அமலா பால், விவேக் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'வேலையில்லா
பட்டதாரி' திரைப்படம்
தெலுங்கில் 'ராகவன் பி.டெக்' என்ற பெயரில் தெலுகில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த புத்தாண்டு தினத்தில் வெளியானது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. வெளியான முதல் நாளிலேயே ரூ.1கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த டப்பிங் பட லிஸ்ட்டில் ராகவனும் சேர்ந்து கொண்டது.
வேல்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தெலுங்கில் ஷரவந்தி மூவீஸ் என்ற நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. வெறும் ரூ.9 கோடி பட்ஜெட்டில் தயாரான வேலையில்லா பட்டதாரி தமிழில் மட்டும் ரூ.60 கோடி சம்பாதித்தது. தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர் தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

No comments:
Post a Comment