Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Friday, 26 December 2014

கண்களுக்கு கீழே கரு வளையம் காரணங்கள் மற்றும் தீர்வுகள்

(Image WikiHow)
கண்களுக்கு கீழே கரு வளையம் வந்தால் பெண்கள் படும் வருத்தம் கொஞ்சம் அதிகம்தான், சரி அதற்க்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் இதோ...
தூக்கமின்மை, போதியளவு ஓய்வு இல்லாமல் இருத்தல்,  கண்களுக்கு அதிக வேலைப்பளு, டென்ஷன், இரவில் வேலை பார்த்தால் போன்ற காரணங்களால் கண்களின் கீழ் கருவளையம் ஏற்படுகின்றது.
இந்த பிரச்சினை இருப்பார்கள் இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கரட், பீட்ரூட் பழ ஜீஸ்கள், கீரை வகைகள், பப்பாளி, மாம்பழம் போன்றவற்றை உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், உப்புக்கலக்காத எண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.
கற்றாழையின் சோற்றுப்பகுதியை பன்னீருடன் கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவிவர படிப்படியாக குறையும்.
விளக்கெண்ணைய்யை கண்களின் மீது தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நல்ல முனேற்றம் தெரியும்.


Thursday, 4 December 2014

சிறுநீரகக் கற்களை சுலபமாகவே கரைக்கலாம்

(Image Kidneystoners)

நம்மில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால் அது கடுமையான அவதியைக் கொடுத்துவிடும் என்பது, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் சில சித்தவைத்திய முறைகள் இருக்கின்றன. இந்த முறைகளை பயன்படுத்தி சுலபமாகவே கற்களை கரைத்து விடலாம்.
வாழைச்சாறு
சரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து, ஒரு சிறிய பாலிதீன் பை அல்லது சிறிய பிளாஸ்டிக் கன்டைனரில் அந்த வேர்கள் இருக்கும்படி வைத்துக் கட்டிவிட்டு அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால் வேரின் வழியாக சாறு வடிந்திருப்பதை காணலாம். அதை அப்படியே குடித்துவிட்டால் போதும்.
வாழைத்தண்டு பொரியல்
வாழைத்தண்டு சிறியதாக நறுக்கி பொரியலாக செய்துகூட சாப்பிடலாம், இதுவும் நல்ல பலனைத் தரும்.
பிரஞ்சு பீன்ஸ்
இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்துவிட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்த வேண்டும். இதனால் நாளடைவில் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளி வரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது. நீர் அதிகம் குடித்தால் சீக்கிரம் வெளிவந்து விடும்.
மாதுளை
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும். அத்திப்பழம்: இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்
துளசி

துளசி இலையின் சாறு எடுத்து அதனு டன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும்.

Tuesday, 2 December 2014

தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்

(Image northshoremedispa)

பொதுவாகவே பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில் அதிக அளவு முடி வளர்வதற்குக் காரணமே, ஹார்மோன் மாற்றங்களும் பழக்க வழக்கங்களும் தான். த்ரெடிங், வாக்ஸிங் போன்றவற்றைச் செய்யும் போது முடி வளராமல் தடுக்கவும் சில சிகிச்சைகள் இருக்கின்றன. 

சுட்ட வசம்புத்தூள், குப்பைமேனி கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரி மஞ்சள் பவுடர். இந்த நான்கையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி, அழகைக் கொடுக்கும் அசத்தல் மிக்ஸ் இது! மஞ்சள் பூசிக் குளிப்பது போல் இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை நன்றாக தேய்த்து குளியுங்கள். 

புருவத்தில் இந்த பவுடர் படுவதால் முடி உதிர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். வாரம் இருமுறை குளித்து வந்தாலே முகம், உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் நிறம் மாறி, பின் உதிர்ந்துவிடும். மிருதுவான ப்யூமிக்ஸ்டோனை (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) வாங்குங்கள். 

கலந்து வைத்திருக்கும் மிக்ஸை குழைத்து ப்யூமிக்ஸ்டோனில் தடவி, முடி இருக்கிற பகுதிகளில் லேசாகத் தேயுங்கள். இதை தினமும் செய்து வந்தாலும் முடி உதிரும். மேற்கொண்டு முடி வளராது. 

த்ரெடிங், வாக்ஸிங் என்று அடிக்கடி பியூட்டி பார்லர் பக்கம் போகிறவர்கள் தினமும் முகம், கை, கால்களை கழுவும்போதெல்லாம் சோப்புக்கு பதிலாக இந்த மிக்ஸை பயன்படுத்தலாம். இதனால் முடியை அகற்றியதால் ஏற்பட்ட கருமையும் புள்ளிகளும் மறைவதுடன் சருமமும் மருதுவாகும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்


பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள்.
எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கும்.
பெண்களுக்கு
ஞாயிறு எண்ணெய் தேய்த்து குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும். 
உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.
விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணெய் குளியலை சனியன்று செய்வது நல்லது. பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை.
செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது
திங்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் அதிகப் பொருள் சேரும். *செவ்வாய் எண்ணெய் தேய்த்து குளித்தால் துன்பம் வரும். 
புதன் எண்ணெய் தேய்த்து குளித்தால் மிக புத்தி வந்திடும். 
வியாழன் எண்ணெய் தேய்த்து குளித்தால் உயரறிவு போய்விடும். *வெள்ளி எண்ணெய் தேய்த்து குளித்தால் செல்வம் மிகும். 
சனி எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆயுள் அதிகமாகும். 
மேற்கண்டவையாவும் பெண்களுக்கு.
ஆண்களுக்கு
சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும்.
ஆண்கள் சனி, புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது 
ஆண்களுக்கு, திங்கட்க்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும் 
செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும். 
வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும். 
வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும். நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விட அறிவினையும்,உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள்- மதித்தார்கள். 
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்க வேண்டும்.


Monday, 1 December 2014

பப்பாளியின் மருத்துவப் பயன்கள்



பப்பாளியில் நிறைய மருத்துவ பலன்கள் எராளமாக இருக்கிறது அவை பின் வருமாறு.
 நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து.
பித்தத்தைப் போக்கும்.
உடலுக்குத் தென்பூட்டும்.
இதயத்திற்கு நல்லது.
மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
கல்லீரலுக்கும் ஏற்றது.
கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.
கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.
முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்.
 மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.
 பப்பாளியிலுள்ள பப்பாயின்என்சைம்களில் ஆர்ஜினைன்என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.
உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் பட்டினிச் சிகிச்சைமேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
ஆண்டிபயாடிக்மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

Sunday, 30 November 2014

புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் ஜூஸ்


நாம் பார்க்க இருக்கும் இந்த ஜூஸ் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று சமிபத்தில் மருத்துவர்கள் கண்டுபிடித்ததுள்ளார்கள். OnlineArasan வாசகர்களுக்ககாகவே பிரத்யோகமாக வழங்குகிறோம்.

தேவையான பழங்கள்
ஒரு ஆப்பிள்(Apple)
ஒரு பீட்ரூட்(Beatroot)
ஒரு காரட்(Carrot)
ஒரு எலிமிச்சை பழம்(Lemen)

செய்முறை
குளிர்சாதனப் பெட்டியில் வைக்காத, புதிய பழங்களை நன்றாக கழுவி எந்த பழத்திலும் தோலை எடுக்காமல், சிறு சிறு கூறுகளாக வெட்டி மிக்ஸ்சியிலோ, ஜூஸ்சரிலோ நன்றாக மைய்ய அரைத்து அப்போதே குடித்துவிடுங்கள்.

பலன்கள்
1.       நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றை பாதுகாத்து அது சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுத்து வயிற்றில் ஏற்படும் எரிச்சல்(Ulcers) வராமல் பாதுகாப்பு தருகிறது.
2.       கண்பார்வையை பலபடுத்தும், கண்பார்வை குறைபாடுகளுக்கு நல்ல நிவாரணி.
3.       சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
4.       உடல் சோர்வை போக்கும்.
5.       உங்கள் தோலின் வயதாகும் தன்மையை குறைக்கும்.
6.       உயர் இரத்த அழுத்தம் சீராக்கும்.
7.       உடலின் சகல வலிகளையும் போக்கும் தன்மை கொண்டது.
8.       உடல் செல்லின் வயதாகும் தன்மையை குறைக்கும்.
9.       ஜீரண குறைபாடுகளையும் சரி செய்யும்.
10.   முக்கியமாக புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் பேராற்றல் கொண்டது.

மேலும் பயனுள்ள பதிவுகள்

டிராவல் ஏஜென்சி சின்ன முதலீடு பெரிய லாபம்

வாழ்வில் வெற்றி பெற இந்த பழக்கங்கள் தேவை

30 வயதிற்குள் சாதித்தவர்கள் என்ன செய்தார்கள்

இந்தியப் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகள்


Saturday, 29 November 2014

உங்களின் உடலைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

(Source medindia)

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது.
இரண்டு மணி நேரம் முடிந்ததும்  மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்ல வேண்டும்.
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும்.
காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும்.
இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளைஇணைக்கும் பாதை.
இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.


மார்பக புற்றுநோய் சுயபரிசோதனை

(Source healthxwellness)
மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண்களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.
சுயபரிசோதனை மூலம் தொடக்கத்திலே ஓரளவு கட்டறிய வாய்ப்பிருக்கிறது. பெண்கள் 20 வயதில் இருந்தே இதை செய்து வர வேண்டும். குளிக்க தயாராகும்போது கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு நுனி விரல்களால் மார்பகம் முழுவதையும் மென்மையாக வருடிப்பார்த்தால் கட்டி ஏதாவது இருந்தால் கண்டுபிடித்து விடலாம்.
கைகளை மேலே உயர்த்தியபடி நின்றால், கண்ணாடியில் மார்பக அளவுகளில் வித்தியாசங்கள் இருந்தால் தெரிந்து கொள்ள முடியும். காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்த பகுதி சருமங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலும் கண்டு பிடித்துவிடலாம். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மார்பகங்களில் நீர்கட்டிகள் தோன்றி மறையும்.
அதை புற்றுநோய் கட்டியாக நினைத்து பயந்து விடக்கூடாது. அதனால் மாதவிலக்கு முடிந்த பத்து நாட்கள் கழித்து சுயமார்பக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வரும் அபயம் உள்ளது அதனால் ஆண்களும் முயற்சி செய்வது நல்லது.

40 நாட்களில் புற்றுநோய்யை விரட்டும் மூலிகை

(Source inventorspot)

தலைப்பைப் பார்த்ததும் என்ன கதை விடுகிறீர்களா என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால் இது போலி மருத்துவர்களின் வாக்குறுதி அல்ல உண்மையான மருத்துவர்களால் கண்டுபிடித்தது பரிசோதனையும் வெற்றி பெற்ற கதை.

நமது இந்த பூமியில் கிடைக்கும் ஒரு வித மூலிகையானது “புற்றுநோய் கொல்லி” என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதை புற்றுநோய்க்கு உள்ளன எலிகளுக்கு கொடுத்து நாற்பது நாட்கள் வரை சோதித்துப் பார்த்ததில் இந்த மூலிகை புற்றுநோய்யை இருந்த அறிகுறியே இல்லாத அளவிற்கு நாற்பது நாட்களில் முழுவதுமாக போக்கிவிடுகிறது என்று புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதை தற்போது புற்றுநோய் பாதிகப்பட்ட மனிதர்களுக்கு கொடுத்துப் பார்க்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மூலிகையின் பெயர் “லீய் காங் டெங்(சீன பெயர்)”, “துண்டேர் காட் வின்(ஆங்கிலப் பெயர்)” அல்லது “புற்றுநோய் கொல்லி மூலிகை(தமிழில்)”. இது சீனாவில் அதிகஅளவில் காணப்படும் ஒரு வகை மூலிகை, பண்டைய சீன மருத்துவர்களால் மிகவும் அதிக அளவில் இந்த மூலிகை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மின்னேஸ்சொட்டா மசொனிக் பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் நடந்த ஆராய்ச்சியில், “புற்றுநோய் கொல்லி மூலிகையானது எலியின் உடலில் எவ்வித புற்றுநோய் அறிகுறிகள் இல்லாமல் அகற்றிவிட்டது மேலும் இந்த சிகிச்சையினை நிருத்தியபின்பும் புற்றுநோய் அறிகுறியே தோன்றவில்லை என்பது மற்றுமொரு ஆச்சர்யமான தகவல்” என்று Science Translational Medicine என்ற இதழில் வெளியிட்டிருந்தது.

இந்த புற்கள் வகை “புற்றுநோய் கொல்லி” மூலிகையானது அதிக அளவில் Triptolide என்ற மூலப்பொருளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூலப்பொருள்தான் தற்போது புற்றுநோய்யை கட்டுப்படுத்தும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மூலிகையைப்பற்றி பல வருடங்களுக்கு முன்பே தெரிந்தாலும் மருந்து நிறுவனங்கள் போதிய ஆர்வத்தை காட்டவில்லை என்பதே உண்மை. காரணம் இவர்கள் இவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தது. லாபம் குறைந்துவிடும் என்பதால் இதில் ஆராய்ச்சி செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். இந்த “புற்றுநோய் கொல்லி” போலவே “இஞ்சி” கூட புற்றுநோய்க்கு அருமையான மருந்தாகும்.
சில மருத்துவர்களால் உலகம் முழுவதும் சில இடங்களில் ஆராய்ச்சி செய்து FDA விடம் அனுமதிக்காக காத்திருக்கிறது. இந்த மூலிகை சீனாவில் அதிக அளவில் இருக்கிறது, அதனால் நிச்சியமாக இந்தியாவிலும் ஏன் தமிழ்நாட்டிலும்கூட இருக்க வாய்ப்புகள் அதிகம். 

Friday, 28 November 2014

உடலிலன் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் சக்தி வாய்ந்த எளிய வழி


தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது பல வகைகளில் நமக்கு தீமைகளை விளைவிக்கும்.
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது. இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்


எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் கு ணமாக்கும்.பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெ ட்டிப்படும்.

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்புதளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழைபழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக்கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.

திருமணமான தம்பதியினர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Saturday, 22 November 2014

ஆண்மைக்குறைவு போக்கும் அற்புத சித்த மருந்துகள்

(Source genericviagra123)

1- நிலப்பனங்கிழங்கு
2- தண்ணீர் விட்டான் கிழங்கு
3- இலவம் பிசின்
4- நெருஞ்சில் விதை
5- நீர்முள்ளி விதை
6- பெரும் பூனைக்காலி விதை
7- பனங்கற்கண்டு

இந்த 7 –ம் சமஎடை அளவு எடுத்து இடித்து சூரணம் செய்து கொள்ளவும்.
இதில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து 2௦௦ மிலி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவில் உணவிற்குப் பின் சாப்பிடவும்.
இது போல் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட விந்து அணுக்கள் பெருகும். ஆண்மை அதிகரிக்கும்.

குறிப்பு 
மேற்கண்ட மருந்துகள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.








கருச் சிதைவு ஏற்படக் காரணங்கள்

(Source cambridgesemantics)


கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தாயின் உடல்நிலையும், கரு வை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கியகாரணமாக கூறப்படுகிறது. 

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச் சிதைவு அபாயம் ஏற்படும்.

கருவானது கருப்பையில் சரியான முறையில் தங் காமல் இருந்தா லும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் கருச்சிதைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டுவிடும். இதேபோல் கருப்பை சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. கருப்பையில் சில கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. தொற்று நோய்களால் பாதிக்கப்படும் போது கருச்சிதைவு ஏற்படுகிறது.

சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன.

நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றன. இதன் காரணமாகவே கருவுற்று மூன்று மாதங்களுக்கு கர்ப்பிணிகள் பாது காப்பாக இருக்கவேண்டும் பயணங்களை தவிர்க்க வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிக மென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக மன இறுக்கமின்றி இருக்கவேண்டும். அதிக களைப்புதரக்கூடிய பணி களைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும் ஓய்வும் தேவை.


நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உயர் ரத்தஅழுத்தம்,  நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் சுயவைத்தியம் செய்யக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறை களை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம்.