Showing posts with label GovtJobs. Show all posts
Showing posts with label GovtJobs. Show all posts

Wednesday, 3 December 2014

ஏர் இந்தியாவில் 238 காலிப் பணியிடங்கள் 9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்


ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் வடக்கு அல்லது தெற்கு மண்டலங்களில் ஏதேனும் ஒரு மண்டலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பணி: டிரெய்னி கேபின் க்ரூ வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 238 
தெற்கு மண்டலம்(ஆண்கள்): 10 
தெற்கு மண்டலம்(பெண்கள்): 30 
வடக்கு மண்டலம் (ஆண்கள்): 40 
வடக்கு மண்டலம் (பெண்கள்):158 

தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்டில் 3 வருட பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் ஹாஸ்பிட்டலிட்டி மேனேஜ்மெண்ட் பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விகிதம்: 31,500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 9, 2014 மொழி அறிவு: இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பலமை பெற்றிருக்க வேண்டும். (அயல்நாட்டு மொழி தெரிந்திருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்) 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏதாவதொரு மண்டலத்தில் முதல்கட்ட நடத்தப்படும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 600 

விண்ணப்பிக்கும் முறை: ஏர் இந்தியா இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



Tuesday, 2 December 2014

டி.என்.பி.எஸ் 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


டி.என்.பி.எஸ் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முழுக்க, முழுக்க பெண்களுக்கான வேலைவாய்ப்பான இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

மொத்த இடங்கள்: 117

கல்வித்தகுதி: ஊட்டச்சத்து, ஹோம் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது கிராமப்புற அபிவிருத்தி குறித்த பிரிவில் முதுநிலை பட்டத்தினை காந்திகிராம பல்கலைகழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்ச்சி அளிக்கப்படும்.

சம்பள விகிதம்: 9300/- முதல் 34800/- வரை + 4500/- தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு + நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சியின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26, 2014

Monday, 24 November 2014

பிஎஸ்என்எல் ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் (JAO) 962 காலிப் பணியிடங்கள்


பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட் என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் (JAO) காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யதற்குரிய போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்: 962

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.காம். பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சி.ஏ.வோ காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டண்ட்டாகவோ கம்பனி செகரட்டரியாகவோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 2015 ஜனவரி 1 அன்று 20-30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை உண்டு.

போட்டித் தேர்வு: போட்டித் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. முதலில் தாளில் ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகியவை பற்றிய அறிவும், இரண்டாம் தாளில் நிதி நிர்வாக அறிவும் சோதிக்கப்படும் வகையில் கேள்விகள் அமைந்திருக்கும். இரண்டு தாள்களுக்கும் தலா மூன்று மணி நேரம் கால அவகாசம் தரப்படும். இரண்டு தாள்களும் சேர்ந்து மொத்த மதிப்பெண்கள் 450.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ரூ. 1000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட இயலும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு தேர்வுக் கட்டண விலக்கு உண்டு.
உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.externalexam.bsnl.co.in/ என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடங்கும் நாள் 2014 டிசம்பர் 1 (மாறுதலுக்குட்பட்டது).

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2014

கூடுதல் விவரங்களுக்கு: http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/pdf/jao_advertisement_2014.PDF


போட்டித் தேர்வு: 22-02-2015