Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Tuesday, 29 September 2015

தொடருந்துவில் (இரயில்) பயணம் செய்வோர் குறைய கரணம் என்ன?


தொடருந்துவில் என்னதான் பயணக்கட்டணம் குறைவு, பயண அலுப்பு குறைவு, இடவசதி அதிகம், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணம் செய்யலாம் போன்ற மற்றும் பல வசதிகள் இருந்தாலும்கூட மக்கள் தொடருந்துவில் பயணம் செய்வதை படிப்படியாகக் குறைத்துக்கொண்டு வருகிறார்கள். ஒரே ஆண்டில் ஒரு கோடி அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளகூடிய விசயம் அல்ல. இதோ அதற்கான காரணங்கள்.

1.       புறப்படும் நேரம்
ஒரு நாளைக்கு நூறு தொடருந்துகள் இயக்கப்பட்டால் அதில் தொண்ணுறு தொடருந்துகள் குறைந்தபட்சம் 3௦ நிமிடங்கள் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாக புறப்படுகிறது. இதுவே பயணிகளுக்கு மொட்டைத் தலையில் பச்சை மிளகாயை அரைத்தது போன்று ஆகிவிடும்.

2.       பயணச்சீட்டு குளறுபடி
நமது பயணத்திற்குத் தேவையான பயணச்சீட்டுகளை பதிவு செய்வதற்குள் நமக்கு மூன்றாம் எண் நெஞ்சு வலியே வந்துவிடும். அப்பொழுதுகூட பயணச்சீட்டு பதிவு செய்திருக்க முடியாது. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே தொடருந்தில் பயணச்சீட்டு என்ற ரீதியில் இருக்கிறது நிலைமை.

3.       சுகாதாரம்
பெரும்பாலான தொடருந்துகளில் எலிகள் மகிழ்ச்சியாக ஓடி பிடித்து விளையாடிக்கொண்டு இருக்கும். தூசுகள் மண்டி கிடக்கும்.

நாம் அமர்திருக்கும் இருக்கைகள் உண்மையாகவே இருக்கைதானா அல்லது கல்லா என்று உட்கார்ந்த அடுத்த நொடியே யோசிக்க வைக்கும் பிறகு எப்படி அதில் இரண்டு நாட்களுக்கு மேல் பயணம் செய்வது யோசித்தால் மறுபடியும் தொடருந்தில் வரக்கூடாது என்று யோசிப்போம் அல்லவா.

அடுத்து கழிவறையும் அதில் தண்ணீர் பிரச்சனையும் அவசர காலங்களில் இந்த பிரச்சனை எதிர்கொண்டவர்கள் கண்டிப்பாக அடுத்த முறை தொடருந்தில் பயணம் செய்யமாட்டார்கள். கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு குறிபிட்ட வசதிகள்கூட இல்லை என்றால் மேல்தட்டு மக்களோ அடித்தட்டு மக்களோ யாரும் சகித்துக்கொள்ளமாட்டார்கள்.

4.       திருட்டு பயம்
எல்லா மாநிலங்களிலும் சில குறிபிட்ட இடங்களில் திருடர்கள் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது இதை மாநில அரசோ, தொடருந்து காவலர்களோ கண்டுகொள்வதே இல்லையா என்று தெரியவில்லை. மேலும் இரவில் துணை இல்லாமல் குழந்தைளுடன் அல்லது தனியாக பயணம் செய்யும் பெண்களின் நிலையை யோசித்தே பார்க்கமுடியாது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் மின்சார தொடருந்தில் நான்காயிரம் மதிப்புள்ள கைபேசிக்காக ஒரு பெண்ணை தொடருந்தில் இருந்து தள்ளிவிட்ட கொடுமையை மறக்கமுடியாது.  

5.       விபத்து ஏற்பட்டால்?
விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது ஒன்றும் செய்ய முடியாது அப்படியே சாக வேண்டியதுதான், ஆம் சமிபத்தில் தமிழக கர்நாடக எல்லையான பன்னேரிகட்டா என்ற இடத்தில் விரைவு தொடருந்து ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சிலர் மாண்டனர் பலர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். விபத்து நடந்தது உறுதி படுத்திக்கொண்டு அந்த இடத்தை அடையவே மூன்று மணி நேரம் மேல் ஆகிவிட்டது மீட்பு குழுவிற்கு. அதுமட்டுமல்ல விபத்து நடந்த இடத்தையே கண்டுபிடிக்க முடியாமல் மீட்பு குழுவினர் கையை பிசைந்துகொண்டு இருந்தது வேறு கதை. சரி ஒரு விபத்து நடக்கிறது, அந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக வெளியில் இருந்துதான் உதவிகள் வரவேண்டிய நிலைமை என்றால் ஒன்றுமே செய்யமுடியாது. சிலர்(அல்லது பலர்) உயிர் போகலாம், பலர் காயம்(அல்லது படுகாயம்) அடையளாம். எனவே குறிப்பிட்ட தொடருந்தில் பயணம் செய்தவர்களோ அல்லது விபத்தில் சிக்கியவர்களோ வெளியில் இருப்பவருக்கு(1௦8, நண்பர்கள், உறவினர்கள்) தகவல் சொன்னால்தான் விசயம் வெளியேத் தெரியும். உதவிகள் கிடைக்கும் இல்லையென்றால் அதிர்ஷ்டம் இருப்பவர்கள் பிழைக்கலாம் இல்லையேல் அது அவர்கள் விதி.

6.       தொலைதொடர்பு
மேலே சொன்ன பன்னேறிகட்டா விபத்து நடந்தது அடர்ந்த வன பகுதி அங்கே எந்த செல்பேசியும் வேலை செய்யாது. அதனால்தான் விபத்து மீட்பு குழுவிற்கு விபத்து எங்கே நடந்தது என்றே தெரியாமல் திக்கற்று நின்றார்கள். அந்த தொடருந்தில் பயணம் செய்த பயணிகள் முற்றிலும் யாருடனும் தொடர்புகொள்ள முடியாதபோது அவர்களுக்கு யாரால் உதவி செய்யமுடியும்.


இன்னும் எத்தனையோ காரணங்கள் இருகின்றன போர்கால அடிப்படையில் இங்கு மேலே சொன்ன காரணங்களை கருத்தில்கொண்டு உடனே இந்த பிச்சனைகளை சரிசெய்தால் மீண்டும் ஏழைகளின் ரதம் என்ற தொடருந்து தொடர்ந்து ஓடும் இல்லையேல் சத்தமில்லாமல் தொலைந்து போகும்.  

Friday, 18 September 2015

துள‌சி‌த் தே‌நீ‌ர்


து‌ளி‌சி‌யை‌க் கொ‌‌ண்டு தே‌நீ‌ர் தயா‌ரி‌த்து‌க் குடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் பலரு‌க்கு‌ம் உ‌ண்டு. இ‌ந்த துள‌சி தே‌நீ‌ர் வெறு‌ம் உ‌‌ற்சாக‌த்‌தையு‌ம், ந‌ல்ல வாசனையையு‌ம் ம‌ட்டு‌ம் அ‌ளி‌க்க ‌வி‌ல்லை.

உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம், நோ‌யி‌ல் இரு‌ந்து கா‌ப்பா‌ற்றுவத‌ற்கான ச‌க்‌தியையு‌ம் அ‌ளி‌க்‌கிறது.

துள‌சி‌யை எ‌ந்த முறை‌யி‌ல் உ‌ட்கொ‌ண்டா‌லு‌ம் அது உட‌லி‌ன் ஆரோ‌க்‌‌கிய‌த்தை‌க் கா‌க்‌கிறது. ச‌க்‌தியை அ‌ளி‌க்‌கிறது. நோயை எ‌தி‌ர்‌க்கு‌ம் ஆ‌ற்றலையு‌ம், நோயை குண‌ப்படு‌த்து‌ம் ஆ‌ற்றலையு‌ம், நோ‌யி‌ல் இரு‌‌ந்து கா‌க்கு‌ம் ஆ‌ற்றலையு‌ம் து‌ள‌சி‌த் தே‌நீ‌ர் தரு‌கிறது.

துள‌சி இலைகளை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி எடு‌த்து அவ‌ற்றை ‌நீ‌ங்க‌ள் போடு‌ம் தே‌நீ‌ரி‌‌ல் கூட சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். அ‌ல்லது கடை‌க‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌க்‌ரீ‌ன் டீ போ‌ன்றவ‌ற்‌றி‌ல் துள‌சி சே‌ர்‌த்ததை வா‌ங்‌கி வ‌ந்து அரு‌ந்தலா‌ம். 

Thursday, 6 August 2015

Pro Kabaddi – தமிழர்களின் உச்சகட்ட அவமானம்


தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான கபடி போட்டியானது தமிழகத்தில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு மிகப்பெரிய உதாரணம்தான் இந்த Pro Kabaddi போட்டி.

இந்த முறையும் தமிழகத்தின் சார்பில் எந்த அணி இடம் பெறவில்லை சரி போகட்டும் தமிழக வீரர்கள் மற்ற அணியில் விளையாடுகிறார்ளா என்றால் அதுவும்கூட இல்லை. அவ்வளவுதான் நமது தமிழகத்திற்கு இருக்கும் மரியாதை போலும் கபடியில்.

கபடி போட்டியானது தமிழர்களின் அடையாளங்களில் என்று ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால் அடையலாம் அழிக்கப்பட்டுவிடும் போல் தெரிகிறது. தமிழர்களாகிய நாம் தொலைக்காட்சியில் மற்ற அணிகள் விளையாடுவதைப் பார்த்து Pro Kabaddi போட்டி அமைப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சேர்வதற்கு மட்டுமே பயன்படுகிறோம்.

எந்த ஒரு தனியார் அமைப்புகூட முன்வரவில்லை ஒரு அணியை முன்னிலைப்படுத்த, தமிழகத்தில் கபடி விளையாட்டு வீரர்களா இல்லை. ஒரே ஓர் நாளில் ஓர் விளம்பரம் கொடுத்தால்கூட போதும் ஆயிரக்கணக்கான கபடி வீரர்கள் திரண்டுவிடுவர்கள். இவர்களை ஓர் அணியாக உருவாக்கி முன்னிலைப் படுத்த ஒரே ஒரு அமைப்புகூட இல்லாமல் போனது வருத்தத்தையும்விட மிகவும் அவமானத்தைதான் உண்டாக்குகிறது.


அடுத்தமுறையாவது தமிழகத்தின் சார்பில் ஓர் அணியை முன்மொழிய ஓர் அமைப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் இல்லையென்றால் வழக்கம்போலவே அடுத்தமுறையும் அவமானப்பட வேண்டியதுதான்.

Tuesday, 26 May 2015

தலைவா... துணிந்து DTH - ல் உங்கள் படத்தை வெளியிடுங்கள் – ஒரு ரசிகனின் கடிதம்.



அன்புள்ள தலைவனுக்கு(சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்),

நாங்களும் “லிங்கா” திரைப்படம் குறித்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று காத்திருந்தோம் ஆனால் சில பணம் திண்ணி பருந்துகள் வேண்டுமென்றே உங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இவர்கள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்று வெகு விரைவிலேயே தெரிந்துவிடும் அதனால் நீங்களோ அல்லது நாங்களோ சிறிதும் கவலைப்படத் தேவையில்லலை. அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்.

நீங்கள் கவலையே படாமல் அடுத்து “அட்டகத்தி”,”மெட்ராஸ்” இயக்குனர் இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தை DTH ல் வெளியிடுங்கள். இதுவரையில் உங்களைத் திரையில் காணவேண்டி சராசரியாக அதிகபட்சமாக ரூபாய் 2௦௦௦ வரை ஒரு குடும்பத்திற்கு செலவு செய்கிறோம். அதாவது முதல்நாள் டிக்கெட்டின் விலை மிகக்குறைந்தபட்சம் ரூபாய்.250 என்ற அளவில் இருக்கிறது. நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கே டிக்கெட்டின் விலை மட்டுமே ரூபாய் 1௦௦௦ வருகிறது. பெரும்பாலான திரையரங்கில் தண்ணீர்கூட கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. திரையரங்கில் சாதாரணமாகவே இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்துதான் தின்பண்டங்கள் விற்கிறார்கள். மேலும் நங்கள் வரும் வாகனத்திற்கு பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையே அடிக்கிறார்கள். வாரநாட்களில் பகல் நேரத்தில் படம் பார்க்க வேண்டும் என்றால் அலுவலகத்தில் லாஸ் ஆப் பே பிடித்தம் செய்வார்கள், அதுவும் செலவுதான். இரவில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப ஆட்டோ கிடைக்காது, கிடைத்தாலும் இரு மடங்கு வசூல் செய்வார்கள்.

மொத்தத்தில்

டிக்கெட் கட்டணம் 1௦௦௦ + தின்பண்டங்கள் + பார்க்கிங் + போக்குவரத்து செலவு (பேருந்து/ ஆட்டோ/ கால் டேக்சி) + பெட்ரோல்/ டிசல் (குறைந்தபட்சம் 2 லிட்டர்) செலவு + வண்டித் தேய்மானம் + லாஸ் ஆப் பே (ஏற்படலாம்) + இதர செலவுகள்(ஏற்படலாம்).

இத்தனைக்கும் கணக்கு பார்த்தால் சாதாரணமாகவே நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கே குறைந்தபட்சம் ரூபாய் 1500 மற்றும் அதிகபட்சமாக ரூபாய் 2000 செலவு பிடிக்கும். அதுவே ஐந்து பேர் அல்லது அதற்கும்மேல் உள்ள குடும்பம் என்றால் ரூபாய் 3௦௦௦ செலவு ஆகுமே(நாங்கள் பாவம் அல்லவா!). மாதத்திற்கு ரூபாய் 15௦௦௦ முதல் 2௦௦௦0 வரை சம்பளம் வாங்குபவர்கள் என்றால் இதற்கே ரூபாய் 3௦௦௦ கரைந்துவிடும். அதற்கும் கீழே சம்பளம் வாங்கினார்கள் என்றால் என்றால் அவர்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். ரூபாய் 20000 மேல் சம்பளம் என்றால் சமாளித்துவிடுவார்கள் ஆனால் எல்லோருக்கும் அந்த குடுப்பினை அமைவதில்லையே!. இவ்வளவு செலவு செய்யவேண்டுமா என்ற கேள்வி எழலாம்தான் தமிழ்நாட்டில் வேறு பொழுதுபோக்கு அம்சம் என்ன இருக்கிறது அப்படியே இருந்தாலும் இதைவிட அதிகமாகத்தான் செலவு ஆகிறதே!.

சரி விசயத்திற்கு வருவோம், ரூபாய் 1௦௦௦ கட்டணம் என்ற முறையில் DTH ல் ஒளிபரப்பினால்கூட எங்களுக்கு ரூபாய் 500 முதல் 2௦௦௦ வரை மிச்சமாகும். குடும்பத்தில் எத்தனைப்பேர் இருந்தாலும் பிரச்சினை இல்லை சமாளித்துவிடலாம். அதேவேளையில் இரண்டவது முறை பார்க்கவேண்டும் என்று நினைத்தால் ரூபாய் 500 என்ற கட்டணத்தில் ஒளிபரப்பலாம். மூன்றாவது முறை என்றால் ரூபாய் 200 என்ற ரீதியில் கட்டணம் வசூல் செய்துகொள்ளலாம். இதுபோன்று நாங்கள் திரையங்கில் சென்று இரண்டு முறை, மூன்று முறை குடும்பத்துடன் படம் பார்க்க ரூபாய் 1௦௦௦௦ வரை செலவு ஆகுமே!.

இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமாக DTH சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் இதில் மாதந்தோறும் தவறாமல் ரீசார்ஜ் செய்வோர் 3.5 கோடி முதல் 4 கோடி சந்தாதாரர்கள் என்று TRAI நிறுவனம் கூறுகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்சம் சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தினால்கூட முதல் மூன்றே நாட்களில் ரூபாய் 200 முதல் 250 கோடி வசூல் ஆகும்.

தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் இடங்கள் என்று பார்த்தால்
1.தமிழ்நாடு
2.ஆந்திரம்(ஆந்திரா, தெலுங்கானா)
3.கேரளம் மற்றும் கர்நாடகம்
4.வடமாநிலங்கள்
5.வெளிநாடுகள் (அங்கேகூட DTH ல் வெளியிடலாம்).

வேறு மாநிலங்களில் அல்லது நாடுகளில் அந்தந்த மொழிகளில்கூட மொழிமாற்றம் செய்து DTH ல் வெளியிடலாம். தமிழ்மொழி படங்களுக்கு வேறு மொழி பேசும் மக்களிடமும் ஒரு சந்தை உருவாக ஒரு வாய்ப்பு அமையும்.

ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 80 கோடி செலவு செய்து வெளியிட்டால்கூட முதல் முறை பார்வையாளர்களை சென்றடைந்தாலே ரூபாய் 100 முதல் 120 கோடி வரையில் வசூல் ஆகும். DTH நிறுவனங்களே விளம்பரபடுத்திவிடுவர்கள், விளம்பர செலவு மிச்சம்.

தியேட்டரில் வேலை செய்பவர்கள் சிறுக சிறுக வேறு வேலைகளுக்கு மாறிவிடுவார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் இதுவரை சம்பாரித்தது போதும் அவர்கள் காம்ப்ளெக்ஸ் கட்டிக்கொண்டுவிடுவார்கள். விநியோகஸ்தர்களும் இதுவரை சம்பாரித்து சொத்து சேர்த்தது போதும். நாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை வரைமுறைகள் இல்லாமல் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விழுங்கியது போதும்.

எங்கள் வீட்டிலேயே உட்கார்ந்த இடத்திலேயே குறைந்த செலவில் நாங்கள் விரும்பும் நொறுக்குத்தீணிகலோடு லாஸ் ஆப் பே இல்லாமல் போக்குவரத்து செலவு இல்லாமல் பார்க்கிங் கட்டணம் இல்லாமல் பெட்ரோல் டிசல் செலவு இல்லாமல் இதையெல்லாம்விட எத்தனைப்பேர் வேண்டுமானாலும் திரைப்படத்தைப் பார்க்கலாம். இதைவிட எங்களுக்கு என்ன வேண்டும்?  

நன்றி

ராஜேஸ் ராவ் rajeshrao180@gmail.com

Sunday, 11 January 2015

லிங்கா'படத்தை கொலை செய்தவர் சிங்காரவேலன் ராக்லைன் வெங்கடேஷ் கண்ணீர்


‘லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் சார்பில் சென்னையில் 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுற்றது.

உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன், 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷின் அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உடன் வேந்தர் மூவிஸ் சார்பில் சிவாவும் பங்கேற்றார்கள். அச்சந்திப்பில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசியது

"'லிங்கா' வெளியாகி 4வது நாள், 5வது நாள் வசூல் இல்லை நாங்கள் 8 கோடி கொடுத்தோம் என்று எல்லாம் பேசி இருக்கிறார்கள். படத்தின் விளம்பரத்திற்காக நாங்களே மதுரை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு விளம்பரம் தேடியதாக சொல்லியிருக்கிறார். டிசம்பர் 12ம் தேதி வெளியிட்டது தப்பு என்றும் பேசியிருக்கிறார்.

நான் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு லட்ச லட்சமாய் செலவு பண்ணி, இறுதியில் 10 கோடி கட்டச் சொன்னார்கள். அதையும் கட்டியிருக்கிறேன். இந்த விளம்பரம் எனக்கு தேவையா? நான் பண்ணியிருக்கிறது ரஜினி சார் படம். அந்த மாதிரியான படத்திற்கு இந்த மாதிரியான விளம்பரங்கள் பண்ண வேண்டும் என்று எனக்கு எப்படி தோன்றும். சிங்காரவேலன் பேசுவது சரியில்லை. இப்படி பேசாதீங்க.

டிசம்பர் 12ம் தேதி படம் வெளியாகும் என்பது நான் 11ம் தேதி சொல்லவில்லை. படப்பிடிப்பிற்கு பூஜை போட்ட அன்றே, ரஜினி சார் பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா என்று எல்லாம் கேட்கிறார். நாங்கள் முன்னரே சொல்லிவிட்டோம் டிசம்பர் 12ம் தேதி வெளியீடு என்று, இவ்வளவு தெரிந்திருந்தும் பின்னே ஏன் படத்தை வாங்கினீர்கள்?. உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வந்து படத்தை வாங்கியே ஆகவேண்டும் என்று மிரட்டினார்களா, கட்டாயப்படுத்தினார்களா? யாரும் பண்ணவில்லையே.

'பாபா', 'குசேலன்' உள்ளிட்ட படங்களில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு அழைத்து ரஜினி சாரால் என்ன முடியுமோ அதை கொடுத்து சந்தோஷப்படுத்தினார். படம் வெளியாகி 4, 5 வாரங்கள் கழித்து 10 பேரிடம் உட்கார்ந்து பேசி வந்திருந்தார்கள் என்றால் இழப்பீடு குறித்து மனிதாபிமான அடிப்படையில் கொடுத்திருப்போம்.

அதை பண்ணாமல், தினமும் பேசிப் பேசி படத்தை சாவடித்துவிட்டார் சிங்காரவேலன். ரஜினி சாரோட பெயரையும் உபயோகித்து அவரையும் அசிங்கப்படுத்துகிறார்கள். ஒரு ஷோ கூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்கிறார்கள். இதை எப்படி நம்ப முடியும். சிங்காரவேலன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். தினமும் தன்னை டி.வியில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார். 'லிங்கா' படத்தையும் ரஜினி சார் பற்றியும் பேசினால் தான் மீடியாவில் இருந்து நாலு பேர் வருகிறார்கள், அவருடைய பேச்சைக் கேட்கிறார்கள். அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்று முடிவு எடுத்து சினிமா தொழிலை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்திற்காக நிறையப் பேர் அதிகமாக உழைத்திருக்கிறார்கள். ரஜினி சார் தூங்காமல் கண் விழித்து நடித்து கொடுத்தார். மழை வந்தால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம், தப்பாகி விடும் என்று நடித்துக் கொடுத்தார். வீட்டிற்கு கூட போகவில்லை. அந்த மாதிரி கஷ்டப்பட்டு பண்ணிய படத்தை கொலை செய்துவிட்டார் சிங்காரவேலன். நிஜத் தயாரிப்பாளருக்கு தான் அந்த வலி என்ன என்று தெரியும்.

மறுபடியும் இந்த மாதிரியான வாய்ப்பு ஒன்று எனக்கு கிடைக்குமா?. இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார் என்று நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 4 வாரம் பொறுத்திருக்க என்ன ஆனது உங்களுக்கு. ரஜினி சார் மாதிரி நல்ல குணம் என்னிடம் இல்லை என்றாலும், அவரிடம் இருந்து சில நல்ல குணங்களை நான் கற்றுக் கொண்டேன். அவரை மாதிரி நல்ல மனதோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

எங்களிடம் வந்து பேசியிருந்தால், சந்தோஷப்படுற மாதிரி பண்ணியிருப்போம். நான், இயக்குநர், ரஜினி சார் எல்லாரும் ஃபீல் பண்றது என்னவென்றால் இப்போது தான் படம் போச்சே. 'லிங்கா'வை கொலை செய்துவிட்டார்கள். எதற்காக இப்படி பண்ணினார்கள் என்று தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் எனக்கு போன் பண்ணி "தயவு செய்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். எந்த ஒரு விநியோகஸ்தருக்கும் பணம் கொடுத்து திரையுலகை பாழாக்கி விடாதீர்கள். நாளை மற்றொரு படத்திற்கும் இதே போல செய்வார்கள். இது தொடர்கதையாகி விடும்" என்று சொல்லுகிறார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். 220 கோடி கொள்ளையடித்து விட்டு போய்விட்டேன் என்று சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன். 45 கோடி செலவு செய்து 220 கோடி சம்பாதித்து விட்டார்கள் என்னிடம் கணக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். திரையுலகில் சிங்காரவேலன் சாருக்கு யார் இஷ்டமோ அவர்களில் ஒரு 10 பேரை கூப்பிட்டு அவர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் கணக்கைக் கொடுங்கள். என்னையும் கூப்பிடுங்கள் நானும் வருகிறேன்.

கணக்கு வழக்கைப் பார்த்து எல்லாம் சரிபார்த்து முடித்தவுடன், ஒரு வேளை உண்மையாக இருந்தால் அந்த 10 பேர் என்ன சொல்கிறார்களோ அதை அந்த இடத்தில் நான் கேட்கிறேன். சிங்காரவேலன் பேசிப் பேசி மீடியாவை, மக்களையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லுவது சரி, நீங்கள் கொடுக்க வேண்டும் என்றால் நான் அந்த இடத்திலேயே கொடுத்துவிடுகிறேன். அது பொய் என்றால் நான் ஒண்ணும் கொடுக்க வேண்டாம். நான் பேசியது தவறு. கணக்கும் தவறு, மன்னித்து விடுங்கள் என்று சொல்லட்டும். அது போதும் எனக்கு " என்றார்.

Saturday, 10 January 2015

2016 தேர்தலுக்கு ரஜினியும் லிங்காவும் முதல் பலி


முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ அவர்கள் ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டப் பட்டபோது. இனிமேல் தமிழகத்தை வழிநடத்த யார் இருகிறார்கள் என்று தமிழக ஊடகங்கள் மாறி மாறி கேள்விகளை கேட்டது.

திராவிடக்கட்சிகள் வலுவிழந்துவிட்டது, தேசிய கட்சிகளுக்கும் தமிழகத்தில் பலம் இல்லை, இவர்களுக்கு மாற்றாக நினைத்தவர்களும் சரியாய் சோபிக்கவில்லை. அடுத்து யார் என்று மறுபடியும் கேள்வி எழுந்தது.

இந்த நிகழ்சிகள் நடக்கும்போது ரஜினி தனது “லிங்கா” படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். உடனே சுதாரித்த ஊடகங்கள் வழக்கம்போல் ரஜினி “தேரை” இழுத்து தெருவில் விட்டு வேடிக்கை பார்த்தது. ரஜினியும் வழக்கம்போல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துவிட்டார்.

ரஜினியை ஜென்ம எதிரியாக நினைக்கும் ராமதாஸ் “ரஜினி ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

திடிரென்று சீமான் ரஜினி அரசியலுக்கு வரவேக்கூடாது. அப்படி வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று சம்பந்தமேயில்லாமல் அறைகூவல் விடுத்தார். அதையும் வழக்கம்போல் ரஜினி காதிலே கூட போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

பி.ஜெ.பி மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ரஜினி எங்கள் நண்பர் இல்லை இல்லை ரஜினி எங்கள் நண்பர் எங்களுக்குத்தான் ஆதரவு தருவார் என்று அறிக்கைகளை அடுக்கியது.

ஆனால் ரஜினியோ சொன்ன தேதியில் “லிங்கா” படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார்.
கடந்த டிசம்பர் 12ஆம்  தேதி படம் வெளியாகி நல்ல வசூலை கொடுத்துகொண்டு இருக்கிறது. 

ஆனால் அடுத்த நான்காவது நாளில் படம் ஓடவில்லை என்று ஒரு கும்பல் youtube, whatsapp முலம் செய்திகளை பரப்பியது. கிறிஸ்மஸ் தினத்தில் நான்கு படங்கள் வந்தும் “லிங்கா” திரைப்படம் திரையங்கில் ஓடுகிறது.


இன்று திடிரென்று சீமான் மற்றும் வேல்முருகன் லிங்கா படத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளது பலத்த சந்தேகத்தை உண்டுபண்ணுகிறது. இது 2016 தேர்தலை முன்னிறுத்தி செய்யப்படும் அரசியல் தாக்குதலா என்று சந்தேகப்பட வைக்கிறது. 

Monday, 29 December 2014

மீண்டும் "மருதநாயகம்"


1997-ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கப்போவதாக பிரமாண்டமான முறையில் தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. இப்படத்தின் தொடக்க விழாவில்கூட இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'. ஆனால் விதி யாரை விட்டது.

நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் அதோடு நின்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு "அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் 'மருதநாயகம்' குறித்த கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ள கமல்ஹாசன், லண்டனில் உள்ள தனது நண்பர் தொழிலதிபர் ஒருவர் அப்படத்தை தயாரிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். பட்ஜெட் அதிகமாச்சே என்று கேட்டேன். அது என் கவலை. அத்தனை செலவையும் அந்தப் படம் தாங்கும். நானும் தான்" என்று கூறியிருக்கிறார்.


கமல்ஹாசனின் இந்த பதிலால், 'மருதநாயகம்' எந்த நேரத்திலும் தொடங்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கமல்ஹாசன், அப்படத்தின் முதல் 30 நிமிட காட்சிகளை காட்சிப்படுத்திவிட்டார். மீதமுள்ள காட்சிகளைத் தான் காட்சிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இன்னும் இரண்டு வருடத்தில் “மருதநாயகம்” திரைப்படத்தை வெள்ளித்திரையில் பார்க்கலாம் நம்பலாம்.

Thursday, 11 December 2014

இந்தியாவில் சியோமி(Xiaomi) மொபைல் போன்களை விற்க தடை


இந்தியாவில் சியோமி(Xiaomi)  மொபைல் போன்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் சியோமி  மொபைல் போன்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்தது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்த போன்கல் இனி இந்திய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் கூட விளம்பரம் செய்யக் கூடாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய ஏர் இந்திய உழியர்கள் பயன் படுத்த அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிட்டப்பட்டது.

Wednesday, 10 December 2014

2டி அனிமேஷனில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’


தமிழ்மொழியில் வரலாற்று நாவல்களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு நட்சத்திரத் தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.
இப்படைப்பை இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறார்கள்.
‘பொன்னியின் செல்வனை’ அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அனிமேஷன் திரைப்படமாகிறது .
இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. ஒரு தொண்டு நிறுவனமான வளமான தமிழகம் ஆதரவுடன் ‘பைவ் எலிமெண்ட்ஸ்’ நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது.
இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா. நமது OnlineArasan குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.

மிடியாக்கள் மீது குமுறும் ஸ்வேதா பாசு


எனக்கு சின்ன வயதிலிருந்தே பத்திரிகைகாரர்கள் மீது மரியாதை உண்டு. எங்கோ எல்லைப் பகுதியில் இருந்தபடி போர்ச்செய்திகளைத் தரும், மோசமான கால நிலையில் இருந்தபடி இயற்கைச் சீற்றங்களைப் பற்றி செய்திகள் தரும், பயங்கரவாதத்தின் நுனியில் நின்றபடி, அதன் கோரங்களைப் படம் பிடிக்கும் அந்த செய்தியாளர்களை என் வாழ்க்கையின் ஹீரோக்களாக நினைத்தேன். அதனால்தான் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பட்டமும் பெற்றேன். ஆனால் அதே பத்திரிகையாளர்கள்தான் என் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டனர். என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றும் அடுத்தடுத்த நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்தன என்பது புரிகிறது. ஆனால் நான் சொல்லாத, வெளியிடாத அறிக்கையையெல்லாம் கற்பனையாக எழுதி என் பெயரில் வெளியிட்டு என் வாழ்க்கையை மேலும் சிதைத்தன மீடியாக்கள். இந்த அறிக்கையைப் பாருங்கள்: "என் வாழ்க்கையில் மோசமானவற்றை தேர்வு செய்துவிட்டேன். என்னிடம் பணம் இல்லை. என் குடும்பத்தை காப்பாற்றவும், வேறு சில நல்ல விஷயங்களுக்காகவும் பணம் தேவைப்பட்டது. எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில், விபச்சாரத்தில் இறங்கினால் நிறைய பணம் கிடைக்கும் என சிலர் வழிகாட்டினர். எனக்கு வேறு எந்த உதவியும் கிடைக்காத நிலையில் விபச்சாரத்தில் இங்கினேன். நான் ஒருத்தி மட்டுமல்ல, என்னைப் போல பல நடிகைகள் விபச்சாரச்சில் ஈடுபட்டுள்ளனர்..." - ஏதோ 80களில் வெளிவந்த சினிமா வசனம் மாதிரி உள்ள இந்த அறிக்கையை சத்தியமாக நான் வெளியிடவில்லை. நீங்கள் எப்பேர்ப்பட்ட பத்திரிகைகாரராக இருநாதாலும், தயவு செய்து இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். நல்ல வேளை என் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இதனை நம்பவில்லை. நான் அப்படியெல்லாம் பேசமாட்டேன் என அவர்களுக்குத் தெரியும். இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள அத்தனைப் பேருக்கும் நான் சொல்லிக் கொள்கிறேன், இப்படி ஒரு அறிக்கையை நான் வெளியிடவே இல்லை. யாருக்கும் அப்படி பேட்டி கொடுக்கவுமில்லை. என்னதான் என்மீது இரக்கப்பட்டு, ஆதரவு தெரிவித்தாலும், இந்த 23 வயதில் சொந்தக் காலில் இந்தப் பெண் நிற்கிறாளா என்ற பலரது சந்தேகம்தான் நமது சமுதாயத்தில் உள்ள பிரச்சினையே... என்னை மதிக்க வேண்டும், விரும்ப வேண்டும் என யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. நடந்த எதுவும் என் கட்டுப்பாட்டை மீறியது. என்னைக் கைது செய்ததும் நேராக பெண்கள் இல்லத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். அங்கு 59.5 நாட்கள் காவலில் இருந்தேன். இந்த நாட்களில் எனக்கு நாளிதழ் வாசிக்கவோ, டெலிவிஷன் பார்க்கவோ, இணையதளம் பார்க்கவோ அனுமதியில்லை. என் அம்மாவுக்கு மட்டும் இரு முறை செல்போனில் பேசினேன். மீதி நேரத்தில் அந்த போனை வாங்கி வைத்துக் கொண்டனர். இதில் எங்கே எப்போது யாருக்கு நான் அப்படி ஒரு அறிக்கை கொடுத்திருக்க முடியும்! அக்டோபர் 30-ம் தேதி மும்பை திரும்பிய பிறகு அத்தன் நாளிதழ்களின் செய்திகள், இணையதளச் செய்திகளைப் படித்தேன். அவற்றைப் படித்த பிறகு வருத்தப்பட்டதை விட, ரொம்ப வேடிக்கையாக உணர்ந்தேன். இப்படி ஒரு அறிக்கையை நானும் தரவில்லை. ஹைதராபாத் போலீசும் வெளியிடவில்லை. அவர்கள் இதை என்னிடம் உறுதியாகத் தெரிவித்தனர். அப்படி ஏதாவது அறிக்கை வெளியாகியிருந்தால் அது சட்டவிரோதமானது. சரி, என்னுடன் யாரோ ஒரு தொழிலதிபர் இருந்ததாக கதை விட்டார்கள் அல்லவா... என்னைக் கைது செய்த போது உடனிருந்த அந்த தொழிலதிபர் யார் என்பதையும் வெளியிட்டிருக்கலாமே.. யார் அவர் என்ற விவரம் இருக்கிறதா... இருந்தால் நிரூபிக்கலாமே! அந்த இல்லத்தில் நான் உண்மையிலேயே சந்தோஷமாகத்தான் இருந்தேன். குழந்தைகளுக்கு இந்தி கற்றுக் கொடுத்தேன். இந்துஸ்தானி இசை கற்றுத் தந்தேன். 2 மாதங்களில் 12 புத்தகங்கள் படித்தேன். உண்மையில் நான் ஹைதராபாத் வந்தது சந்தோஷம் விருது விழாவுக்காக. அவர்கள்தான் எனக்கு டிக்கெட் போட்டு வரவழைத்தனர். எந்த புரோக்கரும் அல்ல.. நான் வணிக ரிதீயான விபச்சாரத்தை ஆதரிப்பவளும் அல்ல. அந்த ஹோட்டலில் என்னுடன் இருந்தவர்கள், விழாவுக்கு வந்த விருந்தினர்கள் மற்றும் விழாக்குழுவினர்தான். பணமில்லாமல் நான் கஷ்டப்பட்டதாகக் கூறுவது பெரிய அபத்தும். அதேபோல வாய்ப்புகளின்றியும் நான் இல்லை. என் பெற்றோர் எனது கல்வியில்தான் அக்கறையாக இருந்தனர். 2005-ம் ஆண்டு இக்பால் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றேன். அதன் பிறகு என்னை படிக்க வைப்பதில் அக்கறை காட்டினர் பெற்றோர். எனது 21வது வயதிலேயே ரூட்ஸ் ஆன் இந்தியன் க்ளாஸிக்கல் மியூசிக் என்ற தலைப்பில் ஏ ஆர் ரஹ்மான், ஹரிபிரசாத் சவுராசியா போன்ற இசை மேதைகளை பேட்டி கண்டு ஆவணப் படம் செய்தேன். இந்த ஆண்டு நசுருத்தீன் ஷாவுடன் இணைந்து நான் நடித்த குறும்படம் இன்டர்நேஷனர் நைட் கபே, பல சர்வதேச விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது. பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில்தான், நான் இப்படி தவறான தண்டனைக்குள்ளானேன். இதில் வாய்ப்புகளில்லாததால் விபச்சாரத்தில் விழுந்ததாகக் கூறப்படுவது எத்தனை பொய்யானது? டிசம்பர் 5-ம் தேதி நாம்பள்ளி நீதிமன்றம் என் மீது எந்தத் தவறும் இல்லை, போலீஸார் போட்டது பொய் வழக்கு என்று திட்டவட்டமாக அறிவித்து விடுதலையும் செய்துவிட்டனர். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி. அதேநேரம், ஒரு தப்பான, பொய்யான அறிக்கையை தீவிரமாகப் பரப்பிய மீடியாக்களின் செயலை நினைத்து வேதனைப்படுகிறேன்."

இவ்வாறு ஸ்வேதா பாசு தன் உள்ள குமுறலை வெளிபடுத்தினார்.

Tuesday, 9 December 2014

ரஜினி பெயரில் புதிய அரசியல் கட்சி டிசம்பர் 12 அறிவிப்பு



திருப்பூரில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கம் மற்றும் மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவராக எஸ்.எஸ். முருகேஷ் பொறுப்பு வகிக்கிறார். 

இவர் 14 மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை வருகிற 12–ந்தேதி திருப்பூரில் கூட்டுகிறார்கள். இந்த கூட்டத்தில்தான் புது கட்சி பற்றி அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கட்சி பெயர், கொடி சின்னம் போன்றவைகளும் அறிவிக்கப்படுகிறது. 

கட்சி துவங்கும் முடிவு பற்றி ரசிகர் மன்ற தலைமைக்கு விளக்க கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.எஸ். முருகேஷ் கூறும்போது ரஜினி பிறந்த நாளான 12–ந்தேதி அன்று பொது, தொழிலாளர் சங்கத்தை அரசியல் கட்சியாக அறிவிக்க உள்ளோம். கட்சி ஆரம்பிக்க தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. 

கடந்த 6 மாதமாக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி கட்சி துவங்கும் முடிவை எடுத்துள்ளோம். விரைவில் மதுரை அல்லது கோவையில் மாநாடு நடத்தப்படும் என்றார். 


Friday, 5 December 2014

கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க விண்ணப்பிக்கும் முறை


சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.
மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும். எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான். யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.
ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும். வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.


Tuesday, 2 December 2014

லட்சங்களை அள்ளி வழங்கிய விஜய்


இளையதளபதி விஜய் தானுண்டு, தன் நடிப்பு உண்டு என்றில்லாமல், ஏழை எளியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை வாரி வாரி வழங்கி வருகின்றார். அறக்கட்டளை மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கின்றார். மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உதவி மேல் உதவி செய்து வருகின்றார்.
இப்படி சமீபத்தில் சத்தமே இல்லாமல் விஜய் ஒரு உதவி செய்துள்ளார். அதுவும் தமிழக மக்களுக்கு இல்லை ஆந்திர மக்களுக்கு.
சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் ஏற்ப்பட்ட ஹுட் ஹுட் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பலர் தங்கள் வீடுகளை இழந்து கஷ்டப்பட்டு வந்தனர்.

இதற்கு பல நடிகர்கள் உதவி செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் ரூ.5 லட்சம் நன்கொடை செய்துள்ளார். தன் மாநில மக்களுக்கு மட்டுமில்லாமல் அண்டை மாநில மக்களுக்கும் உதவி செய்யும் விஜய்யின் இந்த செயல், அவரின் உயர்ந்த குணத்தை நினைத்து மெய்சிலிர்க்க வைக்கின்றது.

மாணவன் அடித்ததில் ஆசிரியை காது கிழிந்தது


மதுரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36) என்பவர் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம். அப்போது பிளஸ் 2 மாணவன் ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டாராம். இதனால் அந்த மாணவனை ஆசிரியர் லட்சுமி கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் ஆகாஷ், திடீரென ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதனால் ஆசிரியை லட்சுமி நிலை தடுமாறி இருந்ததை  பார்த்த சமமாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பள்ளிக்கு வந்த ஆசிரியை, தனக்கு காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காது ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரி சுவாமிநாதன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மாணவர் ஒருவர் ஆசிரியையை கன்னத்தில் அறைந்து காது ஜவ்வு கிழந்த சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லதா ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சி


மீடியா ஒன் குளோபல் என்டர்டென்மெண்ட் மற்றும் எரோஸ் இண்டர் நேஷனல் இணைந்து நவீன தொழில்நுட்பத்தில் தயாரித்து வழங்கிய திரைப் படம் கோச்சடையான். இது கோவாவில் நடைபெற்ற 45&வது அகில இந்திய திரைப்பட விழாவில் திரை யிடப்பட்டது.

மீடியா ஒன் நிறுவனம், ஆட் பீரோ அட்வடைசிங் நிறுவனத்திடமிருந்து படம் வெளியாகும் முன் 33 கோடி ரூபாய் கடன் வாங்க «பச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் ஆட் பீரோ வாக்குறுதியின்படி ரூ.30 கோடியை ஏற்பாடு செய்ய தவறி விட்டது. ஆட் பீரோ ரூ.10 கோடி மட்டுமே கொடுத்தது. இதனால் படம் மே.9, 2014 அன்று வெளியாக வேண்டியது தள்ளி வைக்கப்பட்டது.

மீடியா ஒன் 10 கோடி ரூபாயில், 4.75 கோடியை திருப்பி செலுத்திய நிலை யில், மற்றொரு 4 கோடி வங்கி வரைவோலையாக செலுத்தியது. மீதமுள்ள தொகை மற்றும் வட்டிக்கு, சொத்து ஆவணங்களை பிணையாக கொடுக்க சம்மதித்துள்ளது.

ஆட் பீரோ 10 கோடி ரூபாய்க்கு 6 மாத காலத் திற்கு 4 கோடிக்கும் அதிகமான வட்டியும் கேட்டது. மேலும் இந்த தகவலை பத்திரிக்கைக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்தி, நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் லதா ரஜினி காந்த்தை அவமானப்படுத்தியது.

இந்த பண பரிவர்த்தனையில் லதா ரஜினி காந்த் ஒரு போதும் தலையிடவில்லை. ஆட்பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த் கொடுக்கவில்லை. அவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே  கையெழுத்திட்டுள்ளார்.  அவை இந்த பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை. 


இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்தை சம்பந்தப்படுத்த காரணம் அவருக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.



அப்பாவாக என்னைத் தத்தெடுத்தார் ரஜினி



‘‘நான் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படத்தின் இயக்குனர் ராஜா விழாவில் கலந்த கொள்ள வந்து கூப்பிட்டார். ஒரு முறைக்கு 10-முறை அழைத்தார். ஒருமுறை வந்து கூப்பிட்டாலே வந்து விடுவேன் என்று அவரிடம் கூறிவிட்டு விழாவிற்கு வந்தேன்.

ரூ 30 கோடி என்னைப் பற்றி இங்கு பலர் புகழந்து பேசினார்கள். எனது சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் எனக்கு விருதுடன் 30 கோடி ரூபாய் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை அங்குள்ள தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை செய்தேன். அது நான் சம்பாதித்த பணம் அல்ல. மேலும் எனக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே, நான் அதை நன்கொடை செய்தேன்.


இந்த நேரத்தில் எனது அம்மா சொன்ன அறிவுரைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அவர், ‘வாழ்க்கையில் பேராசை கூடாது. ஒரு நாளைக்கு ஒரு உயிருக்காவது உதவி செய்ய வேண்டும். சம்பாதிக்கிற பணத்தில் 10-ல் ஒரு பங்கை நல்ல காரியங்களுக்கு செலவழிக்க வேண்டும்' என்றார். எனது அம்மா சொன்னதை நான் கடைபிடித்து வருகிறேன். பென்சன் பணம் நான் ஓய்வு பெறும்போது எனக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்தது. எனக்கு குழந்தை இல்லாததால் அந்த பணத்தை நன்கொடை செய்தேன்.

எனக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி, 'எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பா தான் இல்லை. ஆகவே, பாலம் கல்யாணசுந்தரத்தை தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன்' என்று கூறினார்.

குழந்தைகள் இல்லாத நான் நன்கொடை செய்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால், குழந்தைகள் உள்ள ஒருவர் இது போல் நன்கொடை செய்துள்ளார். ஆனால், அவர் பெயர் வெளியே தெரியவில்லை,'' இவ்வாறு பாலம் கல்யாணசுந்தரம் உரையாற்றினார். 

Monday, 1 December 2014

பொய் சொன்னால் கண்டுபிடித்து விடலாம்

(Image belladepaulo)
பொய் பேசும்போது நம்மை அறியாமல் கண்சிமிட்டல் அதிகரிக்கும், குரலில் இருக்கும் மாற்றங்கள், கண்மணி விரிவடைதல் போன்ற தடயங்கள் அடையாளமாக காட்டிகொடுத்துவிடும்.
பொய் சொல்வதில் உள்ள சிக்கல், நமது ஆழ்மனம் தன்னிச்சையாகவும், பொய் வார்த்தைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால் நமது உடல்மொழி காட்டிக் கொடுத்து விடுகிறது. இதனால் தான் அரிதாக பொய் சொல்பவர்கள் எவ்வளவு நம்பும்படியாக சொன்னாலும் பிடிபட்டு விடுகிறார்கள். அவர்கள் சொல்ல ஆரம்பித்த உடனேயே அவர்களது உடல் முரண்பாடான சைகைகளை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை என்பது தெரிகிறதுவிடும்.
பொய் கூறும்போது அவர்களது ஆழ்மனம் அனுப்பும் நரம்பு சக்தி ஒரு சைகையாக வெளிப்பட்டு வாய் வார்த்தைகளோடு முரண்படுகிறது. அரசியல்வாதிகள், வக்கீல்கள், நடிகர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் போன்ற தொழிலில் உள்ளவர்கள் பொய் பேசும்போது தங்கள் உடல் அசைவுகளை நன்கு பயன்படுத்துவதால் அவர்கள் கூறும் பொய்யைக் கண்டறிவது கடினம்.
புன்னகை
புன்னகை பொய் சொல்வதற்கான அடையாளம் என்று பெரும்பாலானவர்கள் நினைப்பதால், அவர்கள் தாங்கள் பொய் சொல்வதைக் குறைத்து விடுகிறார்கள். ஒரு உண்மையான புன்னகையை விட, பொய்யான புன்னகை வேகமாக வெளிபடுகிறது. நீண்ட நேரம் நீடிக்கிறது. பொய் பேசுபவன் புன்னகைக்கும் போது, முகமுடி அணிந்ததை போல் தோன்றுகிறது. ஒரு பொய்யான புன்னகை முகத்தின் ஒரு பக்கத்தை விட மறுபக்கத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. முளையின் இரண்டு பக்கங்களுமே புன்னகையை உண்மையாக்க முயல்வதால், இப்படி ஏற்படுகிறது. முகபாவங்களை கையாளும் பகுதி முளையின் வலது பக்கத்தில் இருப்பதால், உடலின் இடது பக்கத்திற்கே தகவல்களை அனுப்புகிறது. இதனால் முகத்தின் வலது பக்கத்தை விட இடது பக்கத்தில் தான் பொய்யான உணர்வுகள் அதிகமாக வெளிப்படுகின்றன. உண்மையான முகத்தின் இரண்டு பக்கங்களையும் கட்டுபடுத்துகின்றன. பொய் பேசுபவர்கள் பொதுவாக, சில வெளிப்படையான சைகைகளை வெளிபடுத்து கின்றனர்.
வாயை முடுவது
பொய்யான வார்த்தைகளை அழுத்தி விடும்படி ஆழ்மனம் கட்டளையிடுவதால் வாயை கை முடுகிறது. சில சமயம் சில விரல்கள் அல்லது முஷ்டியால் இறுக்க முடுவதன் முலம் வாயை மறைக்கலாம். ஆனால், அர்த்தம் ஒன்றுதான். இப்படி வாயை முடும் சைகையை மறைக்க சிலர் பொய்யாக இருமுவார்கள். யாராவது பேசும்போது இப்படி செய்தால் அவர்கள் பொய் சொல்லலாம். நீங்கள் பேசும்போது அவர் தன் வாயை முடிக் கொண்டால் நீங்கள் எதையோ மறைப்பதாக அவர் நினைப்பதாக அர்த்தம்.
வாயை முடுவதை உதடுகளின் மேல் சுட்டு விரலை வைத்து `உஷ்என்பது போலும் செய்யலாம். இப்படி செய்பவரின் அம்மாவோ, அப்பாவோ அடிக்கடி இப்படி செய்திருக்கலாம். தான் நினை ப்பதை கூற வேண்டாம் என்று அவர் தனக்குத் தானே கட்டளையிட இப்படி செய்யலாம். உள்ளே மறைத்ததை வெளியே காட்டுவதற்காகவே இப்படி செய்கிறார்கள். உங்கள் பெற்றோரோ அல்லது ஆசிரியரோ நீங்கள் குழந்தையாக இருக்கும் போது இவ்வாறு செய்திருப்பார்கள்.
காலரை இழுப்பது
பொய் கூறுவதால், முகம் மற்றும் கழுத்தின் கீழுள்ள திசுக்களில் குறுகுறுவென்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. அப்போது, தேய்க்கும் போதோ அல்லது சொறியும்போதோ தான் அதைத் திருப்தி செய்ய முடியும். இதனால் தான் நிச்சயமற்ற நிலையில் உள்ளவர்கள் கழுத்தை சொறிவார்கள். இதனால், பொய் சொல்பவர்கள், தங்களை பிறர் கண்டுபிடித்து விட்டார்கள் என்று சந்தேகிக்கும்போது காலரை இழுக்கிறார்கள். ஏமாற்றுவதால், ரத்த அழுத்தம் அதிகமாவது, கழுத்தில் வியர்ப்பது போன்றவற்றின் முலம் அவர் பொய் சொல்வது உங்களுக்கு தெரிந்து விடும்.
காட்டிக் கொடுக்கும் சைகைகள்
பொய் சொல்பவர்கள் தங்கள் முக்கிய உடல் சைகைகளை வேண்டுமென்றே கட்டுபடுத்தி விட்டாலும், பல சிறிய அசைவுகள் அதையும் மீறி வெளிபட்டு விடும். முக தசை சுருக்கம், கண்மணி சுருங்கி விடுதல், வியர்த்தல், கன்னம் சிவத்தல், கண்ணைத் தேய்ப்பது, நிமிடத்திற்கு பத்து முறை கண்சிமிட்டுவது 50 முறை கண்சிமிட்டுவதாக அதிகரிப்பு, முக்கைத் தொடுவது போன்ற சில சிறு சைகைகள் பொய்யை வெளிபடுத்தி விடும். இந்த சிறிய அசைவுகள் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தோன்றி மறையலாம். நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் விற்பனை பிரதிநிதிகள், மிகவும் நுட்பமானவர்களால் மட்டுமே இவற்றை உணரமுடியும். சரி இனிமேல் இந்த யுத்தியை வைத்து பொய்யை கண்டுபிடியுங்கள்.

நாடு முழுவதும் புதிய 8+4+3 கல்வி முறை வருகிறது


இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. 
அதன்படி, 8+4+3 எனவிரைவில் கல்வி முறை மாற உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குமூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது.


அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில்ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக்ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படிதற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில்
விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.

மேலும் பதிவுகள்

பப்பாளியின் மருத்துவப் பயன்கள்

டிசம்பர் 2 முதல் 5ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அட்ரஸ் ப்ரூப் இனி கவலை வேண்டாம்