Showing posts with label Online Money Making. Show all posts
Showing posts with label Online Money Making. Show all posts

Friday, 19 December 2014

வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாரிக்கலாம் வாங்க

(Image Courtesy jobsamerica)

வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாரிக்கலாம் வாங்க” 

என்ன பாஸ் இந்த வார்த்தையைக் கேட்டு கேட்டு உங்கள் காதுகள் புளித்துவிட்டதா? சரி கவலையே வேண்டாம் நாங்கள் உண்மையிலேயே நீங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்து எப்படி சம்பாரிக்கலாம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் கண்டிப்பாக சில திறமைகள் வேண்டும்.

இணையத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது, ஆனால் சரியான கதவுகளை நாம் தட்டுகிரோமா என்பதில்தான் நமது வெற்றி இருக்கிறது. சரி இணையத்தில் எப்படி பதில் யோசனைகளை கூறுவதின் மூலமாக பணம் சம்பாரிக்க முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

நம்மிடம் இயற்கையாகவே சில திறமைகள் இருக்கும் ஆனால் நாம்தான் அதை பெரிதாக கண்டுபிடித்து பயன்படுத்திக்கொள்வதில்லை, இதனால் நஷ்டம் நமக்குத்தான். சரி உங்களிடம் யாராவது “உன்னிடம் யார் பேசுவார்கள் என்ன கேட்டாலும் அதற்கு ஒரு பதிலை வைத்திருபாய்” என்று சொல்வார்களா?, உங்களுக்கு தெரிந்தவர்கள் யோசனை(Idea) கேட்க தேடும் நபர் நீங்களா? இந்த இரண்டு கேள்விகளில் ஒரு கேள்விக்கு ஆம் என்று உங்கள் பதில் இருந்தால் உங்கள் முதுகை நீங்களே தட்டிகொடுங்கள் ஏனென்றால் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்! சந்தேகமேயில்லை உங்களை நம்புங்கள்.

சிறப்பு தகுதிகள் என்ன வேண்டும்?

1.   புதிய தொழில்நுட்பதைப்(New Technology) பற்றி நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும்.
2.   தற்போதைய நிலவரங்களைப்(Trending) பற்றி நல்ல புரிதல் இருக்கவேண்டும்.
3.   வித்தியாசமான முறையில் சிந்திக்கத்தெரிந்திருக்கவேண்டும்.
4.   கேட்கும் கேள்விகளுக்கு நாகரீகமாக பதில் கூறவேண்டும்.
5.   முக்கியகமாக ஆங்கில மொழியில் நல்ல இலக்கணம், பிழையின்றி எழுதுதுதல் வேண்டும்.
6.   முத்தாய்ப்பாக நேர்மறை எண்ணம் மற்றும் விடாமுயற்சி.

மேற்சொன்னவை சில விஷயங்கள் கொஞ்சம் பின்தங்கிய நிலையில் நீங்கள் இருப்பதாக நினைத்தால் கொஞ்சம்கூட யோசிக்காமல் அதற்க்குண்டான பயிற்சியில் இறங்கி ஆரம்பியுங்கள்.

சரி இனிமேல் எந்தெந்த இணையதளங்கள் உங்கள் பதிலுக்கும், யோசனைகளுக்கும் பணம் தர காத்திருக்கிறது என்று பார்ப்போம்.


இந்த தளத்திற்கு சென்று உங்களைப் பற்றிய விபரங்களை பதிந்துகொள்ளுங்கள். பின்பு யோசனை தேவையான நபருக்கு நீங்கள் கூறலாம் நீங்கள் விருப்படும் நேரத்தில் அதற்கு விலையை நிர்ணயம் செய்யலாம்.


இந்த தளத்தின் மூலம் தேவையான நபருக்கு நீங்கள் மின்அஞ்சல்(Email) மற்றும் தொலைபேசியில் யோசனைகளை கூறலாம், இதற்கு நீங்களே விலையும் நிர்ணயம் செய்யலாம்.


இந்த தளத்தின் மூலமாக உங்கள் அனுபவங்கள், திறன்களை மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம் இதற்கு பணமும் கிடைக்கும் நீங்களும் நிறைய விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்ளாலாம்.


இந்த தளமானது facebook, twitter, போன்று செயல்படுகிறது. இங்கும் உங்கள் திறனை மற்றவர்களுடன் பகிர்ந்து அதற்கு பணமும் பெறலாம் புதிய நட்பும் கிடைக்கும்.


முதலில் நீங்கள் Expert Contributor ஆக விண்ணப்பம் செய்து ஒரு எழுத்துத் தேர்வை நிறைவு செய்யவேண்டும். உங்களை ஏற்றுக்கொண்டால் உங்கள் யோசனைகள், சிறிய வேலைகளுக்கு பணமும் கிடைக்கும் முக்கியகமாக உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுத்து திறமை வேண்டும். 


சமூக வலைதளமாக செயல்படும் இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய வல்லுனர்கள், மாணவர்கள் , என்று நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்களும் உங்களை பதிவு செய்துகொண்டு உங்கள் கருத்துகளை தேவைபடுபவருக்கு கூறலாம்.


இந்த தளமானது நிறைய கேள்விகள் அடங்கியது, நீங்கள் உங்கள் துறையை தேர்ந்தெடுத்து பதில் கூறலாம். அதற்கு பரிசுகளும் உண்டு.


நீங்கள் வியாபார துறையில் நிபுணர்கள் என்றால் உங்களுக்கான தளம் இது. வியாபார அனுபவம், நுணுக்கம், கருத்துகூட பகிரலாம்.


இந்த தளமானது ஒரு தர நிறுவனம், முதலில் நீங்கள் உங்களை பதிவு செய்துகொண்டு உங்கள் திறமையை தொகுத்து கூறவேண்டும் பின்பு அவர்கள் உங்களுக்கு ஏற்ற துறையில் தங்களில் தர உறுதி குழுவின் உறுப்பினராக சேர்த்துக்கொள்வார்கள்.


மிகச்சிறந்த தளங்களில் இதுவும் ஒன்று, வாடிக்கையாளர்கள் உங்கள் பதிலை ஏற்றுக்கொண்டால் குறைந்தபட்சம் $5 முதல் அதிகமாக $25 வரை கிடைக்கும். இந்த தளத்தின் மூலமாக நிறையவே சம்பாரிக்கலாம்.

முயற்சி... பயிற்சி... வெற்றி... இதுதான் தாரகமந்திரம் முயற்சி செய்து பயிற்சியின் துணைகொண்டு வெற்றி பெறுங்கள், OnlineArasan சார்பாக வாழ்த்துக்கள்.

குறிப்பு:

இந்த மேற்சொன்ன தளங்களில் இருந்து நீங்கள் அடையும் லாபம் மற்றும் நஷ்டம் ஆகியவற்றிற்கு OnlineArasan குழு எந்த விதத்திலும் பொறுப்பேர்க்காது. வாசகர்கள் விவேகத்துடன் செயல்ப்படுவது நல்லது.

Wednesday, 5 November 2014

ஆன்லைனில் சம்பாதிக்க வழிமுறைகள்

ஆன்லைனில் சம்பாதிக்க வழிமுறைகள்



வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் இன்டர்நெட் மூலமாக எளிதாக பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. ஆனால், பலர் டேட்டா என்ட்ரி, ஜாப் ஒர்க், எம்எல்எம், எஸ்எம்எஸ் என்று ஏதாவது ஒன்றின் மூலமாக தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதால் ஆன்லைன் ஜாப் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள்.

'
ஆன்லைன் சர்வீஸ்' மூலமாக டிக்கெட் புக்கிங், பில் பேமண்ட், மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், என வீட்டில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் செய்து முடிக்கக்கூடிய வசதிகள் வந்து விட்டது. ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்கனவே தொழிலில் இருப்பவர்கள் தான். அதாவது மேல் வருமானத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சேவையை ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, மின்சார கட்டணம், அட்வான்ஸ் என முதலீடு அதிகரிக்கும். அதே வேளையில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது (நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்க வேண்டும். வீட்டின் முன்புறம் கடைபோல அல்லது ஒரு கம்ப்யூட்டர் வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது.
1. டிக்கெட் புக்கிங்:

டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் ரயில், பஸ், சினிமா போன்றவைகள் முக்கியமானவை. ரயில் முன்பதிவு இப்போது அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இதற்கான சேவை வழங்கும் மையங்கள் குறைவு தான். எனவே ரயில் டிக்கெட் புக்கிங்கை தைரியமாக செய்யலாம்.

சேவை தளங்கள்:

1. IRCTC - www.irctc.co.in. irctc
என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய அனுமதி வாங்கிய நிறுவனம். மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால், irctc தளத்தை வீட்டில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டுமென்றால் நிறுவனத்தில் இருந்து ஏஜென்சி எடுக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டும் சேவை செய்து சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல் நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக பணம் செலுத்தினால் போதும்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு கூட்டு சேவை அளிக்கும் நிறுவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கும்.

பேருந்து முன்பதிவு:

பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை. அதனால், தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்வதற்கு ticketgoose.com, redbus.in ஆகிய இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்னணி இணையதளங்கள் ஆகும். இவர்களிடம் முன்பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும். இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.

சினிமா டிக்கெட்:

சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், டிக்கெட் விலையை விட இணையதள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக தேவை இருக்கும் போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள்

1. www.ticketnew.com
2. www.shanticinemas.com
3. www.thecinema.in

பில் பேமண்ட்:

இப்போது அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமண்டுகளை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்து விட்டன. அதனால், இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.
2. சேவை துறைகள்:

1.
இன்சூரன்ஸ்
2.
தொலைபேசி கட்டணம்
3.
மின் கட்டணம்

இவற்றில் இன்சூரன்ஸ் மற்றும் தொலைபேசி கட்டண சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம். மின்கட்டணம் செலுத்தும்படி எந்த நிறுவனமும் இதுவரை உரிமம் பெறவில்லை. ஆனால், நீங்கள் அரசு இணையதளத்திலேயே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்து விட்டது. 

அரசு இணையதள முகவரி: www.tnebnet.org/awp/tnep/ உங்கள் வீட்டில் இருந்து மின்கட்டணம் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம். ஒரு கார்டுக்கு 15-20 வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள் வீட்டு மின் கட்டணத்தையோ, இன்டெர்நெட் பில்லையோ கட்டி விடலாம்.

அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:

கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது மொபைல்ரீசார்ஜ், டிடிஎச்ரீசார்ஜ், பேருந்து முன்பதிவு, ரயில் முன்பதிவு, விமானம் முன்பதிவு, தொலைபேசி கட்டணம் போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை. அவை www.onestopshop.in, www.mysuvidhaa.com. www.itzcash.com, www.icashcard.in, www.beam.co.in ஆகியவையாகும்.

கவனிக்க:
ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும் உரிமம் வாங்கி நஷ்டம் அடைந்து விட வேண்டாம். முதலில் இன்டெர்நெட் பேங்கிங் வழியாக பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதியானால் மட்டும் உரிமம் பெறவும்.
உரிமம் பெரும் முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை 2 மணி நேரம் செய்தாலே போதுமான அளவு லாபம் பார்க்க முடியும்)

இனிவரும் காலங்களில் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் இது நிச்சயம் எதிர்காலம் உள்ள தொழில் தான்.

மேலே கூறப்பட்ட சேவைகள் தவிர்த்து பள்ளி, கல்லூரி தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்பு பதிவுகள், புதுப்பித்தல் என பல சேவைகள் உள்ளன. திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அணுகு முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.

உதவிகரமான மருத்துவ செய்திகளுக்கு இந்த சுட்டியில் சென்று பார்க்கவும்
For more helpful medical related posts, please click this link


எண்கணித முறைப்படி உங்கள் குணநலன்களை காண இந்த சுட்டியில் பார்க்கவும்

சினிமா நட்ச்சத்திர நடிகைகள் புகைப்படங்கள் காண இந்த சுட்டியில் சென்று பார்க்கவும்


சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 – 2017 வரை காண இந்த சுட்டியில் சென்று பார்க்கவும்