Showing posts with label TechNews. Show all posts
Showing posts with label TechNews. Show all posts

Friday, 31 July 2015

”ஆங்ரி பேர்ட்ஸ் 2” அறிமுகம்


ஸ்மார்ட் போன்களில் பல கேம்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் பலரை அடிமையாக்கிய விளையாட்டுகளில் முதன்மையான ஆங்ரி பேர்ட்ஸ்”(Angry Birds) இன்று மேம்படுத்தப்பட்டு ஆங்ரி பேர்ட்ஸ் 2” ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமான ஆங்ரி பேர்ட்ஸ் கேம், அறிமுகமான சில நாட்களிலேயே அனைவரின் மனதையும் கவர்ந்து, அடிமையாக்கியது. சிறிய சிவப்பு உருண்டை உருவம், கோபமான கண்கள், வெறிக் கொண்ட பற்கள் என அதம் ஒவ்வொரு அம்சத்தையும் கேம் பிரியர்கள் ரசித்தனர்.

மேலும் ஆங்ரி பேர்ட் புகைப்படம் பொறிக்கப்பட்ட உடைகள், காலணிகள், காதணிகள் என உபயோகிக்கும் ஒவ்வொரு அத்யாவசிய பொருட்களிலும் ஆங்ரி பேர்ட்ஸின் உருவம் ஆதிக்கம் செலுத்தியது. 

ஆங்ரி பேர்ட்ஸ் போன்று பல கேம்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதிகார பூர்வமாக எந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு  அதிகாரப்பூர்வ ஆங்ரி பேர்ட்ஸ் 2” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்ரி பேர்ட்ஸ் 2 பதிப்பு ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இயக்குதளங்களுக்கு மட்டுமே இன்று வெளியாகியுள்ளதாகவும், விண்டோஸ் பயனர்களுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பதிப்பில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்ரி பேர்ட்ஸ் 2” வெளியான முதல் நாளிலேயே அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விண்டோஸ்-10 வெளியீடு : அப்கிரேட் செய்யப்போறிங்களா ஓர் நிமிடம்!


மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்ரோசாஃப்டின் கடைசி பதிப்பான விண்டோஸ் 10 இன்று வெளியிடப்பட்டது. லேப் டாப், டெஸ்க்டாப், 'டேப்லட்' கணினி பயனர்கள், விண்டோஸ் 10 பதிப்பை இலவசமாக அப்கிரேட் (upgrade) செய்துக் கொள்ளலாம். மொபைல்களுக்கான பதிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.   

இந்த பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் இருந்தாலும், சில வரம்புகளும் (limitations ) உள்ளதாக தி வேர்ஜ்என்னும் ஆய்வு நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது. எனவே விண்டோஸ் பயனர்கள் புதிய பதிப்பிற்க்கு அப்கிரேட் செய்வதற்க்கு முன்னர் அதன் குறைப்பாடுகளை பற்றி தெரிந்துக் கொள்வது அவசியம்.  

விண்டோஸ் 10 பதிப்புக்கு அப்கிரேட் செய்யும் போது ஏற்கெனவே உள்ள சில சாஃப்ட்வேர்ஸை, பயனர்கள் இழந்து விட வாய்ப்பு இருக்கிறது. 
மேலும் சில குறைப்பாடுகள்,

1. விண்டோஸ் மீடியா சென்டர் (Windows Media Center) நீக்கப்படும்.

2. ஹார்ட்ஸ் சீட்டு விளையாட்டு (The card game Hearts) நீக்கப்படும்.

3. விண்டோஸ் 7 டெஸ்க்டாப் கேஜெட்டுகள் (Windows 7's desktop gadgets) நீக்கப்படும்.

4. ஃப்ளாப்பி டிஸ்க் பயன்படுத்துவோர் விண்டோஸ் 10 க்கு அப்கிரேட் செய்யும் போது புதிய இயக்கிகளை (Drivers) இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.

5. டிவிடிகள் பார்ப்பதற்கு "தனி பின்னணி மென்பொருள்" (separate playback software) தேவைப்படும்.

விண்டோஸ் 10 பல சிறப்பம்சங்களை கொண்டு இருந்தாலும், ஒரு சில குறைப்பாடுகள் உள்ளது விண்டோஸ் பயனர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதாக மென்பொருள் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே விண்டோஸ் 10 பதிப்பை பெறுவதற்கு முன்னர் கணிணியில் உள்ள அனைத்து மென்ப்பொருள்களையும் வேறு கருவியில் சேமித்து வைத்துக் கொள்வது அவசியம். 



Wednesday, 29 July 2015

விண்டோஸ் 10 பதிப்பு வெளியானது


#windows10 #Microsoft #OS #OnlineArasan
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் புதிய பதிப்பான விண்டோஸ் 1௦ பதிப்பை இன்று வெளியிட்டுள்ளது. மேலும் 32பிட் மற்றும் 64பிட் என்று இரண்டு விதமாக விண்டோஸ் 1௦ பதிப்பு இலவசமாக பயனாளர்களுக்கு இன்றுமுதல் கிடைகிறது. கீழே உள்ள சுட்டியை தெரிவு செய்து மைக்ரோசாப்ட் தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

http://www.microsoft.com/en-us/software-download/windows10

Thursday, 11 December 2014

இந்தியாவில் சியோமி(Xiaomi) மொபைல் போன்களை விற்க தடை


இந்தியாவில் சியோமி(Xiaomi)  மொபைல் போன்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் சியோமி  மொபைல் போன்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்தது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்த போன்கல் இனி இந்திய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் கூட விளம்பரம் செய்யக் கூடாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய ஏர் இந்திய உழியர்கள் பயன் படுத்த அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிட்டப்பட்டது.

Wednesday, 3 December 2014

YotaPhone 2


The YotaPhone 2, which sports two displays, has been officially announced. The primary display is a 5-inch AMOLED panel with full-HD resolution and at the back you will find an always-on 4.7-inch e-paper display.

The e-paper display, just like the e-ink display on Amazon's Kindle readers, shows notifications, clock, weather, etc and the front display can be used for regular use. The smartphone features a Snapdragon 800 chipset with 2GB of RAM, 32GB of internal storage, an 8MP camera, and a 2,500mAH battery. The smartphone will run on Android 4.4 KitKat with no word a Lollipop update.

Specs

5-inch Full HD AMOLED display 
4.7-inch always-on E-paper display 
Gorilla Glass 3 
Snapdragon 800 SoC 
2GB of RAM 
32GB of storage 
Android 4.4 
8MP rear-facing camera 
2.1MP front-facing camera 
Bluetooth 4.0 
NFC 

2,500mAh battery 

Saturday, 29 November 2014

Huawei Glory 6


Huawei’s newest handset will be unveiled on December 16th, the company confirmed it. Glory 6 Plus’ price, the device will cost 3,299 Yuan ($537) unless all the rumors thus far have been totally off. 

Most importantly, it seems like the second leak of the day revealed the processor which will be powering this handset, Huawei’s very own HiSilicon Kirin 925 octa-core chip will quite probably power on this beast. Something else to note here is the display resolution, the latest rumor says that it might be 1800 x 1080 instead of full HD 1920 x 1080, though I somehow doubt that. Either way, we’ll find out soon, the device will launch on December 16th in China. 

Glory 6 Plus will sport a 5.5-inch display 1920 x 1080 or 1800 x 1080 in resolution, my guess is the former. 3GB of RAM will come pre-installed on this device as well, for all your multitasking needs and 32GB of internal storage will be available as well. 

The Glory 6 Plus will be powered by a 1.8GHz octa-core processor (most probably Kirin 925, as mentioned above) and will ship with a dual 8-megapixel cameras on the back of the device, which will be used for 3D capture or some sort of a refocus feature like we’ve seen on the HTC One M8. 

Google’s Android 4.4 KitKat will ship with this device with Huawei’s Emotion UI on top of it. The device will quite probably support 4G LTE connectivity and will measure 150.46 × 75.68 × 7.5mm while it will weight 165 grams.

Friday, 28 November 2014

ஆன்டிராய்டு லாலிபாப் புதுசா என்ன இருக்கு

(Source geek)

ஈஸ்டர் எஃகு கேம் உங்க போனில் இருக்கும் லாலிபாப் படத்தை தொடர்ந்து அழுத்தினால் சிறிய ஆன்டிராய்டு கேம் லோட் ஆகும்

சர்ச் செட்டிங்ஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் அதிகமாக அதன் செட்டிங்ஸ் மெனுவும் மாறி கொண்டே வருகின்றது, தேடலுக்கு புகழ் பெற்ற கூகுள் நிறுவனம் லாலிபாப் செட்டிங்ஸ் மெனுவை எளிதாக்கியுள்ளது.

நோட்டிபிகேஷன் பார் லாலிபாப் ஓஎஸ் இல் நோட்டிபிகேஷன் பார் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முரை ஸ்வைப் செய்தால் நோட்டிபிகேஷன்களை பெறலாம்.

சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன் லாக் ஸ்கிரீனின் மத்தியில் நோட்டிபிகேஷன்கள் தெரியும், உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால் செட்டிங்ஸ் - சவுன்டு நோட்டிபிகேஷன் சென்று சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன்களை தேர்வு செய்ய முடியும்.

ப்ளாஷ் லைட் மற்ற ஆன்டிராய்டுகளை போன்று இல்லாமல் லாலிபாப் ஓஎஸ் உங்களுக்கு நோட்டிபிகேஷன் பாரில் ப்ளாஷ்லைட் வசதி கொடுத்துள்ளது.

டேட்டா யூசேஜ் நீங்க உங்க போனில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தியிருக்கீங்கனு நோட்டிபிகேஷன் பாரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஸ்கிரீன் பின்னிங் ஆன்டிராய்டில் கெஸ்ட்மோட் ஏற்கனவே இருக்கின்றது ஆனால் இதை செயல்படுத்த நேரம் ஆகும் அதனால் லாலிபாப்பில் நீங்க ஸ்கிரீன் பின்னிங் செய்ய முடியும், இதற்கு உங்க போனின் செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - ஸ்கிரீன் பின்னிங் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.


டேப் அன்டு கோ புதுசா ஆன்டிராய்டு லாலிபாப் பயன்படுத்தினால் டேப் அன்டு கோ ஆப்ஷன் ஏற்கனவே இருக்கும் கூகுள் பயனாளிகளுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஆன்டிராய்டு 4.1 ஸ்மார்ட்போனுடன் என்எப்சி மூலம் இணைக்க முடியும் அதன் பின் உங்க டேட்டாக்களை ப்ளூடூத் மூலம் அனுப்ப முடியும்.

ப்ரியாரிட்டி மோட் இது கூகுளின் டூ நாட் டிஸ்டர்ப் மோட், இதை செயல்படுத்த வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க பயன்படுத்தும் பட்டன்களை பயன்டுத்தலாம்.

டேப் டூ வேக் பவர் பட்டன் இல்லாமல் ஸ்கிரீனை இரு முறை தட்டினால் அது ஸ்விட்ச் ஆன் ஆகும்.






Micromax Canvas Tab P666

Micromax has teamed up with Intel to launch a new tablet -- Canvas Tab P666 – in India.  Priced at Rs. 10,999, the new Canvas Tab P666 supports 3G via SIM, runs Android KitKat and is powered by a 1.2GHz Intel Atom Processor Z2520 along with 1GB of RAM. The tablet will be available in the market starting November 29.


The Micromax Canvas Tab P666 has an 8-inch IPS display with 800 x 1280 pixels resolution. It has 5MP rear camera and 2MP front facing camera. The tablet comes with 8GB of built-in storage, supports additional storage up to 32GB via microSD. The Micromax Canvas Tab P666 is powered by a 4400 mAh battery. It is available in Black and White colours.

Monday, 24 November 2014

Xiaomi Redmi Note 3G, 4G versions launched in India

Xiaomi Redmi Note 3G, 4G versions launched in India, start at Rs. 8,999

After a successful stint with Redmi 1S and Mi3 phones, Xiaomi has launched its latest Redmi Note smartphone in India, again targeting the budget segment.


Xiaomi has officially announced the launch of its Redmi Note smartphone in India. The company has launched 3G and 4G versions of the smartphone price at Rs. 8,999 and Rs. 9,999 respectively. The 3G phone will be available from December 2, while registration begins tomorrow 6pm. The 4G version will be available from mid-December.
Xiaomi has tied up with Flipkart and Airtel for the 4G version of Redmi Note. Customers can buy the phone from Airtel flagship stores (about 100) from 6 cities in India. However, customers need to register online, hosted by Airtel, and can collect the device from Airtel stores.

The Redmi Note 4G version has a 5.5-inch HD display with 720p resolution, 267ppi pixel density and Gorilla Glass 3 protection. The smartphone runs MIUI based on Android. It is powered by a quad-core Qualcomm Snapdragon 400 MSM8928, along with 2 GB of RAM.
The Redmi Note has 13MP rear camera and 5MP front facing cameras. The smartphone supports 64GB SD card slot. In terms of connectivity, the phone supports single-SIM, FDD-LTE and TDD-LTE, Bluetooth 4.0 LE  + BT3.0HS, WLAN802.11b/g/n and GPS+AGPS. The smartphone is powered by a 3100 mAh battery.

The 3G version of the Redmi Note has similar specs except it has 1.7 GHz MediaTek MT6592 octa-core SoC, dual-SIM connectivity, 3G network support and 32GB microSD support. Also, the Redmi Note 3G ships with Android 4.2 out of the box, while the 4G variant has Android 4.4 KitKat – though both on MiUI 5.

Friday, 21 November 2014

ATM ல் பணம் திருட ஒரு மொபைல் SMS போதும்


ஆம் நீங்கள் படித்த தலைப்பு சரிதான், ATM ல் பணம் திருட ஒரு மொபைல் SMS போதுமானது. நம் அனைவருக்கும் தெரியும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பாதுகாப்பு சேவையை Wndows XPக்கு கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியோடு நிறுத்திக்கொண்டது. தற்போதுள்ள நிலவரப்படி உலகில் 96% ATM கள் Wndows XP யில் தான் செயல்படுகிறது. ஆனாலும் நிறுவனங்களின் பாதுகாப்பு கருதி முக்கியமான பாதுகாப்பு சேவையை தொடர்ந்து தருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Wndows XPயில் இயங்கும் ATMல் திருட்டு

இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் Symantec ஒரு அதிர்ச்சி தரும் அறிக்கையைத் தந்துள்ளது. Windows XPயில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ATM ல் பணம் திருட வாய்புகள் அதிகம் எனத் தெரிவித்துள்ளது. இந்த குறைபாடானது ஒரே ஒரு SMS வழியாக ATMல் இருந்து பணம் எடுக்க வலிவகைசெய்கிறது.

Ploutus Malware செயலி

இணையத்திருடர்கள் இந்த Ploutus Malware செயலியை பயன்படுத்திக்கொண்டு Windows XPயில் இயங்கும் ATMல் சாதாரணமாகவே பணத்தை எடுக்கலாம் (திருடலாம்). இந்த வகை திருட்டு உலகெங்கிலும் சாதாரணமாகவே நடக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2013ல் Backdoor என்ற செயலியை கண்டுபிடித்தனர். மேலும் Ploutus செயலியானது மெக்ஸிகோவில் உள்ள ஒரு ATMல் பதிந்துவைத்து வெறும் மொபைலில் இருந்து ஒரே ஒரு SMS மட்டும் அனுப்பி பணத்தை திருடியதை கண்டுபிடித்தனர்.

இந்த திருட்டு எப்படி சாத்தியம்

திருடர்கள் ATM இயந்திரத்தில் உள்ள USB Portஐ மொபைல் உடன் இணைத்து தகவல் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள். பின் அந்த மொபைல் வழியாக இணையத் இணைந்து சில கட்டளைகளை ATM இயந்திரத்திற்கு SMS வழியாக அனுப்புகிறார்கள். பின்பு குறிபிட்ட அளவு பணம் தானாகவே வெளியேவரும்.

கவனம் தேவை

இனிமேல் நீங்கள் ATMல் பணம் எடுக்க செல்லும்போது இயந்திரத்தில் ஏதாவது வித்தியாசமான முறையில் ஒயர்கள் இணைக்கப்படிருந்தால் உடனே காவலாளியிடம் விபரம் கேளுங்கள். உங்களுக்கு அவரின் பதிலில் திருப்தி இல்லையென்றால் பணம் எடுக்காதீர்கள். சம்பந்தப்பட்ட வங்கிக்கிளைக்கு உங்கள் சந்தேகத்தை தெரியப்படுத்துங்கள்.


Wednesday, 19 November 2014

விண்டோஸ் எளிதாகப் பயன்படுத்தலாம்

(Source digitaltrends)

கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே. சில குறிப்புகள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கானவையாக இருக்கலாம். சில விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8க்கானவையாக தரப்படுகின்றன.

போல்டர் & பைல்
நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும் My Documents போல்டரிலேயே சேமித்து வைத்தால், நிச்சயம் பைல் ஒன்றைத் தேடிப் பெறுவது சிரமமாக இருக்கும். எனவே, அலுவலக பைல்கள், சொந்த தனிவாழ்க்கைக்கான பைல்கள், குடும்ப உறுப்பினர்களுக்கான பைல்கள் என பல போல்டர்களை அமைத்து, சேமித்து வைப்பது நல்லது. இவற்றில் துணை போல்டர்களையும் அமைத்து, பைல்களைப் பிரித்து அடுக்க வேண்டும்.

டெஸ்க்டாப் 
டெஸ்க்டாப்பில் ஐகான்களைப் பதிந்து வைப்பது, நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை, விரைவாக இயக்கிப் பயன்படுத்த முடியும் என்பதனால்தான். ஆனால், இதற்காக, அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் அவற்றிற்கான ஐகான்களை டெஸ்க்டாப்பில் வைத்தால், அந்த நோக்கமே கெட்டுவிடும். எனவே, அடிக்கடி தேவைப்படாதவற்றிற்கான ஐகான்களை நீக்கிவிடுவதே நல்லது. மேலும், தொடர்புள்ள ஐகான்களை ஒரு குழுவாகவும் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, Word, Excel and PowerPoint ஆகியவற்றிற்கான ஐகான்களை, டெஸ்க்டாப்பில் அருகருகே அமைத்தால், நாம் தேடி அலைய வேண்டியதில்லை.

போல்டர்
போல்டர்களை எளிதாக அடைவதற்கு அவற்றை டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து, போல்டர்களை அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் பின் செய்திடலாம். டாஸ்க் பாரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானை ரைட் கிளிக் செய்தால், பின் செய்யப்பட்ட போல்டர் முதலில் காட்டப்படும். அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் போல்டர்களை மட்டும் இது போல பின் செய்திடவும். இல்லை எனில், இங்கும் கூட்டம் அதிகமாகி, நீங்கள் தேடிப் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்
ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினையும் நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்தலாம். ஒரு டெஸ்க்டாப் விளையாட்டுகள், இன்னொன்று அப்ளிகேஷன்களில் உருவாக்கும் பைல்களுக்கு, இன்னொன்று பாடல், விடியோ காட்சிகளுக்கான அப்ளிகேஷன்கள் எனப் பிரித்து அமைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட டெக்ஸ்டாப் அமைக்க விண்டோஸ் 10 வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. தற்போதைக்கு Dexpot என்ற அப்ளிகேஷன் மூலம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8லும் இதனை அமைக்கலாம். இந்த அப்ளிகேஷனை http://download.cnet...4-10580780.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

போல்டர் ஹைலைட்
நமக்குத் தேவையான போல்டர்களை ஹைலைட் செய்து வைத்துக் கொள்வது நல்லது. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள போல்டர்களில், நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை, ஹைலைட் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை எப்படி மேற்கொள்ளலாம்? அவற்றிற்கு வேறு சில ஐகான்களை, வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக அமைக்கலாம். இதற்கு குறிப்பிட்ட போல்டரில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடுக. இதில் Customize என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு 'Change Icon' என்பதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் படத்தினை ஐகானாக அமைத்திடவும். உங்களுடைய படம் உள்ள ஐகான் தயார் செய்தும் அமைக்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்புளோரர் 
போல்டர் ஒன்றில் உள்ள கோப்புகளை, பல்வேறு கோணங்களில், வகைகளில், காட்டும்படி அமைக்கும் வசதி, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ளது. போட்டோ அல்லது விடியோ பைல் இருந்தால், சிறிய அல்லது பெரிய ஐகான்களுடன் காட்டும் வகையில் அமைத்துவிட்டால், கோப்புகளைத் தேடுகையில், இந்த படங்களைப் பார்த்து, எளிதில் விரைவாகத் தேர்ந்தெடுக்கலாம். வேர்ட் டாகுமெண்ட் பைல்கள் என்றால், List/ Details தேர்ந்தெடுத்தால், கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

டெக்ஸ்ட் மற்றும் ஐகான் 
பல அப்ளிகேஷன்கள், அவற்றில் உள்ள டெக்ஸ்ட் மற்றும் ஐகான்கள், படங்கள் ஆகியவற்றின் அளவைப் பெரிதாக்கிப் பார்க்க, பின்னர் சிறியதாக மாற்ற வசதிகள் கொண்டுள்ளன. விண்டோஸ் சிஸ்டத்திலும் இதே போல் அமைக்கலாம். டெக்ஸ்ட் மற்றும் ஐகான் அளவினை 125% அல்லது 150% அதிகப்படுத்தினால், பார்ப்பதற்கும் படிப்பதற்கும் எளிதாக இருக்கும். இதற்கு Control Panel > Appearance and Personalization > Display > Make text and other items larger or smaller என்று சென்று அமைக்கவும்.

டெஸ்க்டாப்பில் இயக்க சாதனங்கள்
டெஸ்க்டாப்பில் சில இயங்கும் சாதனங்களுக்கான அடையாளங்களை அமைக்கலாம். இவற்றை gadget என அழைக்கிறோம். இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவை. இவை நமக்குப் பயன் தருபவை. எடுத்துக் காட்டாக காலண்டர், கடிகாரம் போன்றவற்றைக் கூறலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இவை தரப்படாவிட்டாலும், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இவை கிடைக்கின்றன. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இவை எளிதாகக் கிடைக்கும் டூலாக இல்லை. இவற்றை அமைக்க, டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் gadgets என்பதில் கிளிக் செய்திடவும். உடன் பல கேட்ஜட்டுகள் கிடைக்கும். இதில் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இணையத்தில் தேடினால் சில கிடைக்கலாம். அவற்றையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

யூசர் அக்கவுண்ட்ஸ்
உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரை ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்தினால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே யூசர் அக்கவுண்ட் அமைத்து வழங்கலாம். இதனால், ஒருவரின் பணியில் மற்றொருவர் குறுக்கீடு இல்லாமல் அமைக்கப்படும். இதற்கு Control Panel > User Accounts and Family Safety > Add or remove user accounts என்று சென்று அமைக்கவும்.

லைப்ரரீஸ்(Libraries)
டாகுமெண்ட்ஸ், மியூசிக், போட்டோ மற்றும் வீடியோ போன்ற பைல்களை, விரைவாக வேறுபடுத்திப் பார்த்து பயன்படுத்த லைப்ரரீஸ் நமக்கு உதவும். லைப்ரரீஸ் பிரிவில் போல்டர்களை வெறுமனே போட்டு வைப்பதனைக் காட்டிலும், விண்டோஸ் சிஸ்டத்திடம், ஒவ்வொரு லைப்ரரியிலும், எந்த பைல்களைப் போட்டு வைக்க வேண்டும் என்பதனை வரையறை செய்து அமைத்திடலாம்.

பெரிய பைல்கள்
பெரிய அளவிலான சில பைல்கள், உங்கள் ஹார்ட் ட்ரைவில் அதிக இடம் பிடிக்கும். பெரும்பாலான பெரிய பைல்கள் நமக்குத் தொடர்ந்து தேவைப்படாததாகவே இருக்கும். நீக்கப்பட வேண்டிய நிலையிலேயே அமைந்திருக்கும். இந்த பெரிய பைல்களைக் கண்டறிய, தனியே எந்த அப்ளிகேஷனையும் நாம் பயன்படுத்த வேண்டாம். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இதற்கான வசதி உள்ளது. சர்ச் பாக்ஸில் 'size:gigantic' என்று டைப் செய்து எண்டர் தட்டவும். விண்டோஸ் 128 எம்.பி. அளவிற்கு மேல் உள்ள பைல்களை அடையாளம் காட்டும். இவற்றில் உங்களுக்கு தேவைப்படாத பைலை நீங்கள் அழித்துவிடலாம்.

ஷார்ட் கட் 
நாம் நம் கீ போர்ட் மற்றும் மவுஸ் மூலம் மெனுக்களைப் பயன்படுத்தி, நம் பணிகளை முடித்துக் கொண்டாலும், விண்டோஸ் சிஸ்டத்தில், அதிக எண்ணிக்கையில், இந்த வேலைகளுக்கு ஷார்ட் கட் கீகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் கற்றுக் கொண்டு செயல்படுத்த முடியாது என்றாலும், சில அடிப்படை ஷார்ட்கட் கீகளை (எ.கா. Ctrl-X for Cut, Ctrl-C for Copy, and Ctrl-V for Paste) தெரிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 8 குரூப் டைல்ஸ்
விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், திரையில் நிறைய டைல்ஸ்களைக் காண்பார்கள். இவை பல திரைகளில் காணப்படும். விரலால் தொட்டு அல்லது மவுஸால் இழுத்து இவற்றைக் காண வேண்டும். இதற்குப் பதிலாக, அப்ளிகேஷன்களை, குழுவாக ஒரு டைலில் அமைக்கலாம். இதற்கு குழுவாக அமைக்க வேண்டியவற்றுள் முதல் கட்டத்தினை ஸ்டார்ட் ஸ்கிரீனில் காலியாக உள்ள இடத்திற்கு இழுக்கவும். இந்தக் கட்டத்தின் பின்னால், grey bar ஒன்று காட்டப்படும் வேளையில், அந்த டைலை விட்டுவிடவும். இந்த கிரே பார், இது ஒரு புது டைல் என்று காட்டுகிறது. இப்போது, எந்த அப்ளிகேஷன் டைல்களை இதில் குழுவாக அமைக்க வேண்டுமோ, அதில் இழுத்துவிடவும். இதனால், நமக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. பல திரைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை.

ஸ்டிக்கி நோட்ஸ் 
நீங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளுக்கான நினைவூட்டல் உங்களுக்குத் திரையில் தேவை என்றால், இப்படிப்பட்ட தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டு விண்டோஸ் இயக்கத்தில் தரும் ஸ்டிக்கி நோட்ஸ் (Sticky Notes) என்ற டூலைப் பயன்படுத்தவும். ஸ்டார்ட் மெனு திரைத் தேடல் கட்டத்தில் தேடி இதனை எளிதாகப் பெறலாம். இதனை இயக்கினால், திரையில் காலியாக உள்ள சிறிய கட்டம் அளவில் தாள்ஒன்று கிடைக்கும். இதில் நாம் விரும்பும் நினைவூட்டல் தகவலைப் பதிந்து வைக்கலாம். இதன் வண்ணத்தை நமக்குப் பிடித்தபடி, திட்டமிடும் வகையில் மாற்றலாம். இதில் ரைட் கிளிக் செய்தால், இது போன்ற பல வேலைகளுக்கான ஆப்ஷன்கள் அடங்கிய மெனு கிடைக்கும். உங்களுக்கு மேலும் பல ஸ்டிக்கி நோட்ஸ் தாள் வேண்டும் என்றால், இதன் மேலாக இருக்கும் + அடையாளத்தில் கிளிக் செய்து பெறவும்.

விண்டோஸ்
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனு மேலாகக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில், நமக்குத் தேவையான அப்ளிகேஷன்கள், போல்டர்களைத் தேடிப் பெறுகிறோம். ஆனால், இது விண்டோஸ் 8ல் இது சாத்தியமில்லை. ஏனென்றால், அதில் ஸ்டார்ட் பட்டன் இல்லை. ஸ்டார்ட் மெனு கிடைப்பதில்லை. இருப்பினும் ஸ்டார்ட் ஸ்கிரீனில் நீங்கள் இருந்தால், விண்டோஸ் கீயை அழுத்திவிட்டு, டைப் செய்திட முயன்றால், உடன் தேடல் கட்டம் கிடைக்கும். பாதி டைப் செய்திடுகையிலேயே நீங்கள் தேடும் அப்ளிகேஷன் கிடைக்கலாம். மேலும், அப்ளிகேஷனுக்கென தனி கட்டமும் காட்டப்படும்.

துல்லியமா டெக்ஸ்ட்
விண்டோஸ் உங்கள் டெக்ஸ்ட்டின் தோற்றத்தை சரி செய்திடும் டூல் கொடுக்கிறது. இதன் மூலம் டெக்ஸ்ட் காட்டப்படும் தன்மையை துல்லியமாக மாற்றலாம். இந்த டூலின் பெயர் ClearType Text Tuner. இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை மிகத் தெளிவாக அமைக்கலாம். இதனைப் பயன்படுத்திப் பார்த்த பின்னரே, இங்கு சொல்லப்படும் துல்லியம் என்பதனை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த டூலைப் பெற Control Panel > Appearance and Personalization > Fonts > Adjust ClearType text எனச் செல்லவும்.

டிஸ்க் டிபிராக்
உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை மந்தப்படுத்தும் காரணங்கள் பல இருந்தாலும், அதிலிருந்து ஓரளவிற்காவது விடுபட, ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்வது நல்லது. இதனை மேற்கொள்ள, நமக்கு எந்த வேறு நிறுவனங்களின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் எதுவும் தேவையில்லை. விண்டோஸ் சிஸ்டமே நமக்குத் தேவையானதை வழங்குகிறது. இதனை இயக்குகையில் நாம் வேறு எந்த பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. எனவே, கம்ப்யூட்டரில் பணி இல்லாதபோது, இதனை இயக்கி, ஹார்ட் டிஸ்க்கினை நேர் செய்திடலாம். இது பைல்களைச் சீராக அடுக்கி வைக்கும். துண்டு துண்டாகப் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட பைலை ஒரே இடத்தில் வைக்கும். எனவே, கம்ப்யூட்டரின் செயல்வேகம் அதிகமாகும். Disk Defragmenter என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயர்வால்
பெர்சனல் கம்ப்யூட்டரில் பயர்வால் செயல்பட்டுக் கொண்டிருந்தால், இணைய இணைப்பில் இருக்கையில், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டருக்குள் நுழையாமல் பாதுகாப்பு கிடைக்கும். எனவே, இதனை இயக்காமல் இருந்தால், உடனே இயக்கி, கம்ப்யூட்டருக்குக் கூடுதல் பாதுகாப்பினைத் தரவும். இதனைப் பெற்று இயக்க Control Panel > System and Security > Windows Firewall என்று செல்லவும்.

டாஸ்க்பார் 
சில நேரங்களில், உங்கள் மானிட்டர் திரையின் முழு இடமும் உங்களுக்குத் தேவைப்படலாம். ஆனால், கீழாக இருக்கின்ற டாஸ்க் பார் சிறிது இடத்தைப் பிடித்துக் கொண்டு முழு இடமும் தரவிடாமல் செய்திடலாம். இதற்கு டாஸ்க் பாரினை மறைத்துவைத்து, நாம் கம்ப்யூட்டரின் இயக்குவதனை அமைத்திடலாம். டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது டாஸ்க் பார் அண்ட் ஸ்டார்ட் மெனு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். டாஸ்க் பார் டேப்பில் Auto-hide the taskbar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அந்த டயலாக் பாக்ஸிலிருந்து வெளியேறவும். இப்போது டாஸ்க் பார் மறைக்கப்பட்டிருக்கும். உங்கள் கர்சரை டாஸ்க் பார் காட்டப்பட்ட இடத்தின் அருகே கொண்டு சென்றால், டாஸ்க் பார் மீண்டும் எழுந்து வரும்.

பெயிண்ட்
விண்டோஸ் சிஸ்டம் தன்னிடத்தே கொண்டுள்ள பெயிண்ட் புரோகிராம், மற்ற இது போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் போல அதிக வசதிகளைக் கொண்டதாக இல்லாவிட்டாலும், முன்பு தரப்பட்டதைப் போல இல்லாமல், சற்று கூடுதல் வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. போட்டோக்களை இதில் நன்றாக எடிட் செய்திடலாம். படங்களை எடிட் செய்து, இணைத்து, புதிய விளைவுகளைச் சேர்த்து, படங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். உங்கள் விண்டோஸ் சிஸ்டத்திற்கான வால் பேப்பரைக் கூட இதில் தயாரிக்கலாம்.