Showing posts with label WeekAstrology. Show all posts
Showing posts with label WeekAstrology. Show all posts

Friday, 5 December 2014

வார ராசி பலன்கள் 04/12/14 - 10/12/14


மேஷம்
செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். பொருள்வரவு கூடும்.
நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். தாய் மற்றும் அவர்வழி உறவினர்களால் அதிக நலம் உண்டாகும். 7-ம் தேதி முதல் புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பந்தயங்களில் வெற்றி கிட்டும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்
வார முன்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும். வார நடுப்பகுதியில் முக்கியமான எண்ணம் ஈடேறும். மதிப்பு உயரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். வாரப்பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும்.
நல்ல தகவல் வந்து சேரும். 7-ம் தேதி முதல் கலைத்துறையினருக்கு மந்தநிலை விலகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கணிதம், பத்திரிகை, தரகுத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான பாதை உருவாகும். பேச்சில் திறமை வெளிப்படு

மிதுனம்
தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். புதிய பதவி, பட்டம் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். அலைச்சல் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் பெண்களுக்கும் பிரச்னைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும். 7-ம் தேதி முதல் சுக்கிரனும் 8-ம் தேதி முதல் வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். எதிலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது.

கடகம்
செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். மன உற்சாகம் பெருகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் சேரும்.
பயணத்தால் அனுகூலம் உண்டு. குடும்ப நலம் சிறக்கும். 7-ம் தேதி முதல் சுகம் குறையும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். சுபச்செலவுகள் உண்டு. எதிர்ப்புக்கள் குறையும்.

சிம்மம்
தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவி, பட்டம் கிடைக்கும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும்.
நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். எதிர்ப்புக்கள் அகலும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வியாபாரம் பெருகும். 7-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். குரு பார்ப்பதால் மாணவர்களது நிலை உயரும். புத்திசாலித்தனம் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.

கன்னி
சிறுசிறு இடர்ப்பாடுகள் உண்டாகும். மனத்துக்குச் சலனத்தைத் தரக்கூடிய சம்பவங்கள் நிகழும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். வார நடுப்பகுதியிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்களைப் பெற வாய்ப்பு உண்டாகும்.
எதிர்ப்புக்கள் குறையும். வாரக்கடைசியில் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். ஆதாயம் கூடும். 7-ம் தேதி முதல் புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தாயார், தாய்வழி உறவினர்களால் நலம் உண்டாகும்.

துலாம்
உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். பண நடமாட்டம் அதிகமாகும். முக்கியமான எண்ணங்கள் இனிது நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
மாதர்களது நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். தந்தையால் நலம் உண்டு. உடன்பிறந்தவர்கள் மற்றும் பிள்ளைகளால் நலம் ஏற்படும். 7-ம் தேதி முதல் போட்டிகளில் வெற்றி கிட்டும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். ஆன்மிக,அறநிலையப்பணியாளர்களுக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். கடுமையாக உழைப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் ஈடேறும். புதிய பொருட்கள் சேரும்.

விருச்சகம்
எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பந்தயங்களிலும்விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். கலைத்துறை ஊக்கம் தரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். கணவன், மனைவி உறவுநிலை திருப்திகரமாக இருந்துவரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.
பிற மொழி, மத, இனக்காரர்களால் நலம் ஏற்படும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைத்துவரும். 7-ம் தேதி முதல் செல்வ நிலை உயரும். எதிர்பாராத திடீர்ப் பொருள்வரவுக்கும் இடமுண்டு. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாளைய எண்ணங்கள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும்.

தனுசு
மக்கள் நலம் சீராகும். மன உற்சாகம் கூடும். அறிவாற்றல்பளிச்சிடும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண வழிபிறக்கும். புதிய சொத்துக்கள் சேரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும். மாதர்களது நிலை உயரும். கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். புதியவர்களது தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பொது நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள்.
வாழ்க்கை வசதிகள் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். 7-ம் தேதி முதல் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். தொழில் முன்னேற்றத்துக்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருள் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்
நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கியிருப்பார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தந்தையாலும் அரசாங்கத்தினராலும் அனுகூலம் உண்டாகும்.
இளைய சகோதர, சகோதரிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வீண்செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. 7-ம் தேதி முதல் வாழ்க்கை வசதிகள் கூடும். 8-ம் தேதி முதல் வியாபாரிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவதன் மூலம் நஷ்டப்படாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

கும்பம்
நல்ல தகவல் வந்து சேரும். முயற்சிக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்துவரும். பொருள்வரவு அதிகரிக்கும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். அனுகூலமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது. மாணவர்களது நிலை உயரும்.
7-ம் தேதி முதல் கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும். பெண்களுக்கு உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். 8-ஆம் தேதி முதல் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். நண்பர்களும் உறவுனர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும்.

மீனம்
குடும்ப நலம் சீராக இருந்துவரும். பண நடமாட்டம் அதிகமாகும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். நல்ல தகவல் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பெண்களுக்கு உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் ஆகியவை சேரும். நிலபுலங்கள் லாபம் தரும்.

எதிரிகள் அடங்கிப் போவார்கள். சுபச்செலவுகள் உண்டு. தொழிலாளர்களும் விவசாயிகளும் அதிகம் பாடுபட வேண்டிவரும். 7-ம் தேதி முதல் தொழில் ரீதியாக சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கும் மனவலு உண்டு. 8-ம் தேதி முதல் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை.

Friday, 21 November 2014

வார ராசி பலன்கள் 20/11/14 - 26/11/14


மேஷ ராசி
தொலைதூரத் தொடர்பு மூலம் அனுகூலம் உண்டாகும். புதியவர்களது நட்பு கிடைக்கும். அதனால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கும் கலைத்துறையினருக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்ப நலம் சீராகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மக்கள் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. 22-ம் தேதி முதல் மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேர வழிபிறக்கும். எதிரிகள் பலவீனமாவார்கள். சட்டம், காவல், இராணுவத் துறையினர் சாதனைகள் செய்வார்கள்.

ரிஷப ராசி 
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பிறருக்கு உதவி புரிய முன்வருவீர்கள். எதிர்ப்புக்கள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். நல்ல நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போகவும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. வேகம் கூடாது. நிதானம் தேவை. 22-ம் தேதி முதல் சகோதர நலம் சீர்பெறும். சுபச் செலவுகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்டவற்றில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. மக்கள் நலனில் கவனம் தேவை.

மிதுன ராசி
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 6-ல் சூரியன், புதன் ஆகியோரும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் ஈடுபட்டுப் பயன் பெறுவீர்கள். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும்.அதனால் அனுகூலமும் உண்டாகும்.
எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 22-ம் தேதி முதல் ஆரோக்கியம் பாதிக்கும்.  கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.

கடக ராசி 
மன உற்சாகம் பெருகும். எதிர்ப்புக்கள் விலகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். கலைத்துறையினர் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 4-ல் சனி இருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். நல்லவர்களது தொடர்பு நலம் தரும். அரசாங்கத்தாரால் அளவோடு நலம் உண்டாகும்.

சிம்ம ராசி 
வெற்றி வாய்ப்புக்கள் கூடும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்கள் சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும்.
புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி இருந்துவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்களது திறமை பளிச்சிடும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டுகள், வழக்குகளிலும் வெற்றிகாணலாம். இயந்திரப்பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை உதயமாகும். சொத்துக்கள் சேரும்.

கன்னி ராசி 
உடன்பிறந்தவர்களால் பரஸ்பரம் அனுகூலம் உண்டாகும் . முயற்சி வீண்போகாது. தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு லாபம் தரும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும்.
கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பொன் நிறப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வீண்வம்பு வேண்டாம். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

துலாம் ராசி 
எதிர்ப்புக்கள் விலகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வருவீர்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.

விருச்சிக ராசி 
வார ஆரம்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். அதன்பிறகு அழகு அம்சம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது நிலை உயரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள்,வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
பண நடமாட்டம் கூடும். கடன் தொல்லை குறையும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். 22-ஆம் தேதி முதல் வீர, தீர, பராக்கிரமம் கூடும். செயற்கரிய காரியங்களையும் கூட சுலபமாக நிறைவேற்றுவீர்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் சாதகமான போக்கு தென்படும்.

தனுசு ராசி 
பொருளாதார நிலை உயரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். வார நடுப்பகுதியில் சந்திரன் பன்னிரெண்டாம் இடத்திற்கு மாறி, சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோருடன் கூடுவதால் உடல்நலம் பாதிக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. கண் உபத்திரவம் உண்டாகும். வியாபாரிகள் பண விஷயத்தில் விழிப்புடன் செயல்படவும். மாணவர்கள் படிப்பில் முழு அக்கறை செலுத்தவும். எக்காரியத்திலும் அவசரம் கூடாது. நிதானம் மிகவும் தேவை. 22-ம் தேதி முதல் உடன்பிறந்தவர்களால் அதிக நன்மை ஏற்படும். தர்ம சிந்தனை உண்டாகும்.

மகர ராசி 
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். வியாபாரம் பெருகும்.
தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபட்டால் வெற்றி வாய்ப்புக்கள் கூடவே செய்யும்.

கும்ப ராசி 
தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். காரியத்தில் வெற்றி கிட்டும். அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும். 22-ம் தேதி முதல்  தொழிலில் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. அக்கம்பக்கம் உள்ளவர்களால் தொல்லைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

மீன ராசி
எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். மன அமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண்விவகாரங்கள் வேண்டாம். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். இயந்திரப்பணியாளர்களுக்கு சுபிட்சம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். 22-ம் தேதி முதல் செல்வாக்கும் மதிப்பும் உயருவதுடன் பொருளாதார நிலையிலும் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.


Friday, 7 November 2014

வார ராசிபலன்: 7-11-2014 முதல் 13-11-2014 வரை

வார ராசிபலன்: 7-11-2014 முதல் 13-11-2014 வரை


   
மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு உலவுவதால் புதியவர்களின் தொடர்பால் நலம் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். பயணம் பயன்படும். குரு 4-ல் அமர்ந்து 8, 10, 12-ஆம் இடங்களையும் அஷ்டமச் சனியையும் பார்ப்பதால் சங்கடங்கள் குறையும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் செலவுகள் குறையும். 7-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் இருப்பதால் கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் இருந்து வரும். விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நல்லவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். பொருளாதார நிலையில் அளவோடு வளர்ச்சி காணலாம். கூட்டாளிகளால் அதிகம் அனுகூலமிராது. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: நவம்பர் 9, 10, 12, 13.
திசைகள்: தென்மேற்கு. வடமேற்கு..
எண்கள்: 2, 4, 9.

ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் இப்போது நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். தரகர்கள், கமிஷன் ஏஜண்டுகள் ஆகியோருக்கு வருவாய் அதிகரிக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பொருளாதார நிலையில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. குடும்ப நலனில் அக்கறை தேவை. கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். இயந்திரப்பணியாளர்களும் விளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர்களும் 
பாதுகாப்புடன் செயல்படவும். எரிபொருள், மின்சாரம், கூரிய ஆயுதம், ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட தேதிகள்:  நவம்பர் 9, 10, 12, 13.
திசைகள்: கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
எண்கள்: 1, 5, 7.

மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 5-ல் சுக்கிரனும் 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் புகழும் மதிப்பும் உயரும். புதிய வாய்ப்புக்கள் தேடிவரும். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். அலைச்சல் வீண்போகாது. வீண் செலவுகள் குறையவே செய்யும். ஸ்பெகுலேஷன்ல் கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தாரால் அனுகூலம் ஏற்படும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்வோர் ஆதாயம் கூடப் பெறுவார்கள். இனிமையான பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்:  நவம்பர் 10, 12, 13.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
எண்கள்: 3, 5, 6, 7, 8.

கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கற்பனை வளம் கூடும். புதிய நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். கலைஞர்கள் செழிப்புப் பெறுவார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. நிர்வாகம், அரசியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்:  நவம்பர் 9, 13.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு, தெற்கு.
எண்கள்: 4, 5, 6, 9.

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் உலவுவதால் அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது குறிக்கோள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் சூழும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகள், போட்டியாளர்கள், பொறாமைக்காரர்களால் சங்கடங்கள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட தேதிகள்:  நவம்பர் 9, 10, 12 (முற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு,.
எண்கள்: 1, 6, 9.

கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 3-ல் சனியும், 11-ல் குருவும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் திருப்தி தரும். பல வழிகளில் ஆதாயம் கிடைத்துவரும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பேச்சில் இனிமையும் திறமையும் கூடும். வசீகரச் சக்தி அதிகரிக்கும். முயற்சி வீண்போகாது. தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வாரப்பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். கடல் வாணிபம் லாபம் தரும். திரவப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். ராகு, கேது, செவ்வாய் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் கூடும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்ட தேதிகள் :  நவம்பர் 9, 10, 12, 13.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
எண்கள்: 3, 5, 6, 8.

துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய.
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 6-ல் கேதுவும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கலைஞானம் பளிச்சிடும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், கட்டடப்பொருட்கள், செந்நிறப்பொருட்கள் ஆகியவை லாபம் தரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வாரப்பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பண வரவு சற்று அதிகரிக்கும். முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட தேதிகள்:  நவம்பர் 10, 12, 13.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
எண்கள்: 6, 7, 9.

விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும், 11-ல் ராகுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்கள் குறையும். பண நடமாட்டம் கூடும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத்தொடர்பு ஆக்கம் தரும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், கலைஞர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். இதர கிரகநிலைகள் சிறப்பாக இல்லாததால் வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. அரசியல், நிர்வாகம், வியாபாரம், கணிதம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவை. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். என்றாலும் ஜன்ம ராசியைக் குரு பார்ப்பதால் உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட தேதிகள்:  நவம்பர் 9, 13.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு..
எண்கள்: 3, 4, 6.

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும், 11-ல் சூரியனும்,புதனும் சுக்கிரனும் உலவுவதால் வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். புதியவர்களது தொடர்பு பயன்படும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது. வியாபார அபிவிருத்தி திட்டங்களும் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். கலைத்துறை ஆக்கம் தரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். குடும்பத்தை விட்டுச் சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிவரும். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். ஜன்ம ராசியில் செவ்வாயும் 4-ல் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட தேதிகள்:  நவம்பர் 9, 10, 12 (முற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு..
எண்கள்: 1, 4, 5, 6.

மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும்  7-ல் குருவும் 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரும் 11-ல் சனியும் உலவுவதால் 
வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். சுகம் கூடும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பால் நலம் உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது. தெய்வப் பணிகள் நிறைவேறும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். 12-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் உண்டாகும். இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்:  நவம்பர் 9, 10, 12, 13.
திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, வடக்கு, மேற்கு,தென்கிழக்கு.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 8..
  
கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் சனியும், 11-ல் செவ்வாயும் உலவுவது விசேடமாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். நண்பர்கள் நலம் புரிவார்கள். மக்களால் அளவோடு அனுகூலம் உண்டாகும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும். விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். சூரியன், குரு, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பிற மொழி, மத, இனக்காரர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும்.
அதிர்ஷ்டத்தேதிகள்:  நவம்பர் 9, 10, 12, 13.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
எண்கள்: 5, 6, 8, 9.

மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய.
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 8-ல் புதனும் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பண வரவு கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். புத்திசாலித்தனமும் செயல்திறமையும் வெளிப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் ஆதாயம் கொண்டுவரும். ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள், விஞ்ஞானிகள், பொருள் நடமாட்டமுள்ள இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: நவம்பர் 9, 10, 12, 13.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு..
எண்கள்: 3, 5, 6, 9.