Showing posts with label Tricks&Tips. Show all posts
Showing posts with label Tricks&Tips. Show all posts

Saturday, 29 November 2014

எந்த அப்ளிகேஷன்களும் இல்லாமல் ஆண்ட்ராய்டில் ஃபைல் அல்லது ஃபோல்டர்களை மறைக்கலாம்

(Source pctricksguru)

ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் ஒரு சிரமம் இது, அவர்கள் தங்கள் மொபைலில் உள்ள அனைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் எப்போதும் கேலரியில் தெரிந்துகொண்டே இருக்கும் மற்றவர்களிடம் நமது போனை கொடுக்கையில் தயக்கத்தோடே கொடுக்க வேண்டியிருக்கும்.
பைல்களை மறைக்க நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கிறது, இருந்தாலும் அப்ளிகேஷன் இல்லாமல் மறைக்கும் இரண்டு முறைகளை இருக்கிறது.
முறை - 1
1)உங்கள் ஆண்ட்ராய்டு ஃபைல் மேனேஜருக்குச் செல்லவும், அதில் எந்த போல்டரை மறைக்க வேண்டுமோ அதனை Rename(மறுபெயராக்கம்) செய்யவும்.
2)இப்பொழுது அந்த போல்டரின் பெயரில் முதல் எழுத்தாக ஒரு . (dot) சேர்க்கவும். உதாரணத்துக்கு videos என்ற போல்டரை .videos என்று மறுபெயரிடவும்.
3)இப்பொழுது அந்த போல்டரில் உள்ள பைல்கள் எதுவும் கேலரியில் தெரியாது.
4)அவை உங்கள் பைல் மேனேஜரிலும் மறைந்திருக்கும், அதைத் திரும்பவும் காண, நீங்கள் file manager->options->show hidden files என்பதை டிக் செய்ய வேண்டும்.
முறை-2
1)இதற்கு ஆண்ட்ராய்டின் ஃபைல் மேனேஜர் ஒத்து வராது, இந்த முறைக்கு நீங்கள் புதிய ஃபைல் உருவாக்கும் வசதியுள்ள ஏதேனும் ஒரு ஃபைல் மேனேஜரை பயன்படுத்தவேண்டும். நான் ES file explorer பயன்படுத்துகிறேன்.
2)எந்த போல்டரை மறைக்க வேண்டுமோ அதனைத் திறந்து கொண்டு அதற்குள் ஒரு புதிய ஃபைலை உருவாக்கவும்.
4) அந்த பைலின் பெயர் .nomedia என்று கொடுங்கள், வேறு எதுவும் சேர்க்கக்கூடாது.
5)அந்த பைல் உருவாக்கிய பிறகு பைல் மேனேஜரில் அந்த பைலை காட்டாது, இப்பொழுது மீடியா ஸ்கேனரை ரன் செய்யுங்கள், உங்கள் கேலரியில் அந்த போல்டரின் படங்கள் வீடியோக்கள் மறைந்திருக்கும்.


கணினியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி

(Source whatsappforpcxp)

உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முதலில் ப்ளூஸ்டாக்ஸ் என்ற ஆன்டிராய்டு எமுலேட்டரை டவுன்லோடு செய்ய வேண்டும்

ப்ளூஸ்டாக்ஸ் இன்ஸடலேஷன் முடிந்தவுடன் ஸ்டார்ட் மெனு சென்று ஸ்டார்ட் ப்ளூஸ்டாக்ஸ் என்று டைப் செய்து க்ளிக் செய்யுங்கள்.

ப்ரோகிராம் லோட் ஆனதும் சர்ச் பாக்ஸ் சென்று வாட்ஸ்ஆப் மெசஞ்சர் என்று டைப் செய்து க்ளிக் செய்யுங்கள்.

வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் டவுன்லோடு ஆனதும் அதை ரன் செய்யுங்கள்

இப்ப உங்க மொபைல் நம்பர் மற்றும் லொகேஷனை வாட்ஸ் ஆப்பில் என்டர் செய்யுங்கள்

உங்க மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும் உங்க கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துங்க

பேஸ்புக் போன்றே இதிலும் நீங்க பல க்ரூப்களை க்ரியேட் செய்யலாம்

மொபைலில் இருப்பதை போன்று கணினியில் கானாடாக்ட்களை இம்போர்ட் செய்ய முடியாது

கணினியில் நீங்கள் தான் கான்டாக்டகளை ஆட் செய்ய வேண்டும்.

Tuesday, 25 November 2014

பேஸ்புக்கில் TrustedContacts பற்றி தெரியுமா

(Source facebook)

பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயில் மூலம் நம் கணக்கை திரும்ப பெறலாம். நம்மால் ஈமெயில் கணக்கை அக்செஸ் செய்ய முடியவில்லை என்றால்நம் Trusted Contacts மூலம் நம் கணக்கைத் திரும்ப பெற முடியியும்.

இதன் முக்கிய அவசியம் என்னவெனில் நம்மால் ஈமெயில், போன் மூலமும் நம் பேஸ்புக் கணக்கை திரும்ப பெற முடியவில்லை என்றால் Trusted Contactsஇல்லை என்றால் நம் கணக்கை திரும்ப பெறுவது மிக கடினமாக இருக்கும். அதே சமயத்தில் இந்த வசதியை நாம் பயன்படுத்தினால் நம் கணக்கை திரும்ப பெறுவது எளிதாகும்.

Trusted Contacts என்பதில் பெயருக்கு ஏற்றாற் போல் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் சேருங்கள், அதே போல பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்தும் நண்பராகவும் அவர் இருக்கட்டும்.எப்படி Trusted Contacts-ஐ சேர்ப்பது?உங்கள் பேஸ்புக் கணக்கில் Settings >> Security என்ற பக்கத்திற்கு செல்லவும். இப்போது கீழே உள்ளது போல Trusted Contacts என்றஒரு பகுதி இருக்கும்.

Security Settingsஅதில் “Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது எப்படி TrustedContacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற இயலும் என்ற சொல்லப்பட்டிருக்கும். அதிலும் ”Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள்.

Choose Trusted Contactsஇப்போதுஅடுத்த விண்டோவில் உங்களின் Trusted Contacts-ஐ நீங்கள் Add செய்யலாம்.Choose Trusted Contacts 2இதில் 3-5 நண்பர்களை நீங்கள் சேர்க்கலாம்.

இதன் மூலம் FACEBOOK கணக்கை இலகுவாக மீட்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.


ஒன்றுக்கு மேல் Gmail Account வைத்துள்ளீர்களா?


நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்குகள் வைத்து இருந்தால், நீங்கள் ஒவ்வொருமுறையும் Sign out செய்து பின்னர் அடுத்த Accountஇல் Sign in செய்ய வேண்டும். இது பெரும்பாலும் எரிச்சலைத் தரும் செய்கை ஆகும். இனிமேல் நீங்கள் மிக எளிதாக ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்குகளை sign in/sign out செய்யாமலேயே பயன்படுத்த முடியும். அதற்கு., தங்களின் முதன்மையான Gmail Accountஇல் உள் நுழைந்து பின்னர்

Settings – > Accounts and Import -> Grant Access to your account -> Add an another account

என்பதை க்லிக் செய்து, தங்களின் மற்ற @gmail.com என முடியும் ஈமேல் முகவரிகளை கொடுக்கவும். அந்த முகவரிக்கு ஒரு ஒப்புதல் தொடுப்பு Googleலால் அனுப்பப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், நீங்கள் ஒவ்வொருமுறை sign in செய்யும் போதும் உங்களின் இரண்டு Gmail கணக்குகளும் இரு வேறு Browser Tab அல்லது விண்டோகளில் திறக்கப்படும்.

Friday, 21 November 2014

WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி


சமீபத்தில் WhatsAppல் facebook அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.
நான் அனுப்புன மெசேஜ் பார்த்தபின்னும் நீ ரிப்ளே பண்ணல!
என பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர்.
எனவே., ஒரு புதிய வழியின் மூலம் android கைபேசி வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும் , அனுப்பியவருக்கு நீல நிற
குறிகள் தெரியாமல் செய்யல்லாம்.
படி க (1) – உங்கள் கைபேசியில் குறைந்தது android 2.1 அல்லது புதிய android இருக்க வேண்டும்.
படி உ (2) – Settings > Security > ‘Download from Unknown Sources’ என்பதை தேர்வு செய்யவும்.
படி ங (3) – www.whatsapp.com/Android/ என்ற முகவரியில் இருந்து APK கோப்பை தரவிறக்கி நிறுவ வேண்டும்.
படி ச (4) – இப்பொது WhatsApp ஐ திறந்து “Settings > Account > Privacy” என்பதில் “Read Receipts” எனும்
தேர்வை நீக்க வேண்டும்.
1. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாது
2. நீங்கள் அனுப்பிய செய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கும் இனி உங்களுக்கும் தெரியாது.
3. ஆனால் நீங்கள் Group Message செய்தீர்கள் என்றால் அதில் அனுப்பியவருக்கு நீல நிறக் குறி தெரியும் இது Group Message கு பொருந்தாது.