Showing posts with label Samayal. Show all posts
Showing posts with label Samayal. Show all posts

Saturday, 10 January 2015

உருளைக்கிழங்கு ஆம்லேட்


எப்போது பார்த்தாலும் வெறும் வெங்காயம் போட்டு ஆம்லேட் சாப்பிட்டு போர் அடிக்குதே என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த பதிவு.

தேவையானவை

உருளைக்கிழங்கு ஒன்று
முட்டை மூன்று
கொத்தமல்லி தேவைகேற்ப
மஞ்சள் தூள் தேவைகேற்ப
பச்சை மிளகாய் தேவைகேற்ப
உப்பு/ எண்ணெய் தேவைகேற்ப

செய்முறை

முட்டையை ஒரு பாத்திரத்தில் நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள். பிறகு  நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள்.

உருளைக்கிழங்கை சிரிது நேரம் தண்ணீரில் சிறிது உப்புடன் ஊறவைத்து ‌பிறகு அதை துருவிவியோ அல்லது சிறியதாக நறுக்கியோ  நீரில் வேக வைத்தப்பிறகு  அதை முட்டை கலவையாக சேர்த்து கலக்கி ஆம்லெட்டுகளாக ஊற்றி சூடாக பரிமாறுங்கள். சுவை அருமையோ அருமை.

மேலும் சமையல் குறிப்புகளுக்கு - Click Here

Tuesday, 6 January 2015

புதுமையான புதினா சப்பாத்தி


வெறும் சப்பாத்தியே எப்படி சாப்பிடிறது அதுலேயே வித்தியாசமா செய்யலாமே நினைச்சா இந்த புதினா சப்பாத்தி முயற்சி செய்யுங்கள். சப்பாத்தி செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதுபோல் மருத்துவ குணம்கொண்ட சுவையான உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பைத்தரும் உடலில் உள்ள உள்உறுப்புகளுக்கு நன்மை தரும் புதினாவையும் சேர்த்து செய்து கொடுத்துப் பாருங்களேன்.

செய்யத் தேவையான பொருட்கள்
புதினா - ஒரு கட்டு
கோதுமை மாவு - ஒரு கப்
சோளமாவு - ஒரு பங்கு
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

புதினா சப்பாத்தி செய்முறை
புதினாவை சுத்தம் செய்து நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொண்டு மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2மணிநேரம் ஊறவைத்துவிடுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்த்து சுட்டெடுத்து உங்களின் குழந்தைகள் மற்றும் அன்பானவர்களுக்கு பரிமாறுங்கள்.

Wednesday, 31 December 2014

பிரியாணி செய்யலாம் வாங்க


செய்யத் தேவையான பொருட்கள்

சிக்கன் அரை கிலோ
பிரியாணி அரிசி அரை கிலோ
வெங்காயம் ஐந்து
தக்காளி நான்கு
பச்சை மிளகாய் ஆறு
மிளகாய் தூள் தேவைக்கேற்ப்ப
ஏலக்காய், இலவங்கம் ஐந்து
பட்டை இரண்டு
முந்திரி பத்து
இஞ்சி சிறிய துண்டு
பூண்டு பத்து பல்
தயிர் தேவைக்கேற்ப்ப
கரம் மசாலா தேவைக்கேற்ப்ப
புதிய தேங்காய் பால் அரை கப்
எலுமிச்சை ஒரு பழம்
எண்ணெய் தேவைக்கேற்ப்ப
நெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள்
உப்பு தேவைக்கேற்ப்ப

செய்முறை

முதலில் பிரியாணி அரிசி வேக வைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.


பச்சை மிளகாய் இரண்டாக அரிந்து கொண்டு,  இஞ்சி, பூண்டினை துருவி கொள்ளளுங்கள். புதிய தேங்காய் பால் 2 கப் எடுத்து தயாராக வைத்து கொள்ளுங்கள். பிறகு 2 தேக்கரண்டி நெய்யில், முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்த்து வெடிக்கும் வரை காத்திருந்து பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதில் பாதி வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும் (இறுதியாக பயன்படுத்த உதவியாக இருக்கும்இப்பொழுது, இஞ்சி, பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும், தயிர், தக்காளி, உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க‌வும். கரம் மசாலாதூள், சிவப்பு மிளகாய் தூள், கோழி துண்டுகள் இவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வறுக்கவும்.

தேங்காய் பால் சேர்த்து கோழி வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும்.
குழம்பு கெட்டியானவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்க்கவும்.
வேக வைத்த சாதத்துடன்இந்த கோழி கறி மசாலா சேர்த்து பார்த்து பதமாக கிளறி விடவும்.கடைசியாக வறுத்த முந்திரி, வறுத்த வெங்காயம் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். 

இதோ பிரியாணி தயார்! அவ்ளோதாங்க பிரியாணி.

Monday, 1 December 2014

குலாப் ஜாமுன்

(Image IndiaForum)

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இனிப்பு குலாப் ஜாமுன்.
இப்போது அனைவரது வீட்டிலும் குலாப் ஜாமுன் செய்ய ரெடி மேட் குலாப் ஜாமுன் மாவு வந்து விட்டது. இதனால் பலருக்கும், குலாப் ஜாமுனின் உன்மையான செய்முறை தெரியாது.
இந்த ரெடி மேட் குலாப் ஜாமுன் மாவில், சத்துக்களை விட கலோரிகளே அதிகம். காரணம் இவற்றில் பாலிற்கு பதில் இனிப்பும், மைதாவுமே அதிக அளவு சேர்க்கப்படுகின்றன.
எனவே இந்த தீபாவளிக்கு இனி இந்த கலோரி நிறைந்த குலாப் ஜாமுன் மிக்ஸ் வாங்க வேண்டாம். ஒரிஜினல் கலோரி குறைந்த குலாப் ஜாமுன் செய்யும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரை கப் பசும் பால்
இரண்டு கப் பால் பவுடர்
அரை கப் கோதுமை மாவு (அல்லது மைதா மாவு)
அரை கப் ரவை
இரண்டு டீஸ்பூன் வெண்ணை
இரண்டு கப் சர்க்கரை (சீனி)
தேங்காய் எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு (அல்லது சூரியகாந்தி எண்ணெய்)
சோடா உப்பு கால் தேக்கரண்டி
பன்னீர், எலுமிச்சை சாறு தேவைக்கு

செய்முறை

முதலில் வெண்ணையையும் பால் பவுடரையும் நன்றாக சேர்த்து கெட்டியாக கலக்கவேண்டும். அதனுடன் சோடா உப்பையும் கோதுமை மாவையும் நன்றாக கலக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு அதில் அதே அளவு இளஞ்சூடான நீரை சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைத்துவிட்டு இந்த கெட்டியான கலவையை முதலில் கலந்த மாவு கலவையுடன் உதிரியாக கலக்க வேண்டும்.
இந்த மாவுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பாத்திரத்தில் ஒட்டாமல் பிசைய வேண்டும். மொத்த மாவையும் சில நிமிடங்கள் நல்ல ஈரமான துணியால் மூடி வைக்கவும் பின்பு அதை சின்னச்சின்ன உருண்டையாக உருட்டி வைக்கவும்.
இதை தனியாக வைத்துவிட்டு, வாணலியில் இரண்டு கப் சர்க்கைக்கு ஒரு கப் தண்ணீர் விட்டு நூல் பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும்.
பதம் வந்ததும் இதனுடன் இரண்டு டீஸ்பூன் பன்னீரையும் இரண்டு துளி எலுமிச்சை சாறையும் விட்டு கலக்கவும். எலுமிச்சை சாறு விடுவதால் பாகு கெட்டியாகாமல் இருக்கும்.
இதை தனியாக வைத்துவிட்டு, இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது சூடானதும் உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டையை எண்ணெயில் இட்டு பொரிந்ததும் சர்க்கரை பாகுவில் ஒரு தடவை முக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

இவ்வகை குலாப்ஜாமூன் கலோரி மற்றும் இனிப்பு குறைந்தது. எனவே இனிப்பு பிடிக்காதவர்களும் இனி குலாப்ஜாமூன் செய்து சாப்பிடலாம் இனிப்பு அதிகம் தேவை எனில் உருண்டையை பாகுவில் அதிகநேரம் போட்டும் அல்லது அப்படியே போட்டு வைத்தும் சாப்பிடலாம்.

வீட்டில் கேக் செய்யலாம்


தேவையான பொருட்கள்
மைதா - 1 1/2 கப்
சூரியகாந்தி எண்ணெய் - 1/2 கப்
ஆப்ப சோடா - 1/2 ஸ்பூன்
பேகிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
பொடித்த சக்கரை - 1 கப்
சமையல் கலர் - 1 சிட்டிகை ( விருப்பபட்டால் ).

செய்முறை
ஒரு அகலமான பத்திரத்தில் மைதா, ஆப்ப சோடா, பேகிங் பவுடர், பொடித்த சக்கரை அனைத்தையும் கலந்து, மாவு சல்லடை மூலம் சலித்து கொள்ளவும். பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், கலர் சேர்த்துக் கொள்ளவும். பின் பாலை அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளறவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்.
குக்கரில் ஆற்று மணலை பாதி அளவு நிரப்பி அடுப்பில் வைக்கவும். (கண்டிப்பாக வீடு கட்டுவதற்கு உபயோகப் படுத்தும் சலித்த ஆற்று மணல் தான் தேவை).

ஒரு கணமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாத்திரத்தில் எல்லா இடத்திலும் பரவுமாறு தடவவும். கேக் ஒட்டாமல் வருவதற்காக, அதன் மேல் சிறிதளவு மைதா மாவை தூவவும். ஏற்கனவே கலந்து வைத்த கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும்.
எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவுக்கு தான் மாவை ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் எழும்பி வரும்.
கேக் பாத்திரத்தை குக்கரில், மணல் மீது வைத்து மூடவும். குக்கரில் விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம். 30 நிமிடம் கழித்து குக்கரை அனைத்து விடவும். கீழே இறக்கி வைத்து 10 நிமிடம் கழித்தால் கேக் சாப்பிடத் தயார்.

குறிப்பு


கேக்கின் அளவை பொறுத்து கேக் வேகும் நேரம் சற்று மாறுபடலாம். எனவே 25 நிமிடம் கழித்தவுடன், குக்கரை திறந்து இட்லி வெந்து இருக்கா என்று பார்ப்பது போல் ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும். மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம். ஓட்டினால் இன்னும் சிறிது நேரம் வேக வைக்கவும். குக்கரில் கேக் கலவைப் பாத்திரத்தை வைக்குமுன் மணலைச் சூடு செய்ய வேண்டாம்.

Tuesday, 4 November 2014

நாட்டுக் கோழி குழம்பு செய்யும்முறை


நாட்டுக் கோழி குழம்பு



தேவையான பொருட்கள் :
நாட்டு கோழி – 1 கிலோ
சிறிய வெங்காயம் – 250 கிராம்
தேங்காய் – 1 மூடி
தக்காளி – 250 கிராம்
யாழ்ப்பாண கறித் தூள் – 3 மே. கரண்டி
இஞ்சி/பூண்டு விழுது – 3 கரண்டி
பெ.சீரகம் – 1 கரண்டி
சீரகத்தூள்- 2 கரண்டி
கடுகு – 1/2 கரண்டி
பெ.சீரகத்தூள் – 1 கரண்டி
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள்- 1/2 கரண்டி
பட்டை,கிராம்பு – 2
கறிவேப்பிலை-1 கொத்‌து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 250 கிராம்

தேங்காயை திருவிப்பிழிந்து கட்டி பால் 1 கப் எடுத்து கொள்ளவும்.
தக்காளி ,வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 செய்யும்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பெ.சீரகம் ,கடுகு,பட்டை,கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை
முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

இப்போது இஞ்சி , பூண்டு விழுது , தக்காளி, சீரகத்தூள் மஞ்சள்தூள் ,ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும் . அதனுடன் சுத்தம் செய்து நறுக்கிய கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட்டு வேகி வரும் போது பால் சேர்த்து வத்த விட்டு பெ.சீரகத்தூள் தூவி இறக்கவும். இப்போது சுவையான நாட்டு கோழி குழம்பு தயார்.

மேலும் சமயல் பதிவுகளுக்கு


பாதாம் அல்வா செய்யும் முறை


பாதாம் அல்வா



தேவையான பொருள்கள்:
பாதாம் பருப்பு -1டம்ளர்
சர்க்கரை -11/2டம்ளர்
நெய் -11/2டம்ளர்
முந்திரிப் பருப்பு -1டே.ஸ்பூன்
கேசரிப் பவுடர் -2சிட்டிகை
பால் -1/4டம்ளர்
தண்ணீர் -1/4டம்ளர்
ஏலப்பொடி -1/4ஸ்பூன்
செய்முறை:
பாதாம் பருப்பை, ஒரு மணி நேரம் ஊறவைத்து, தோலை உரித்து எடுத்துவிடவும்.
ஊறிய பருப்பை, மிக்ஸியில் நன்றாக மைய அரைக்கவும். அரைக்கும் பொழுது தண்ணீருக்குப் பதிலாக பாலை சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை மீதம் பால் இருந்தால் சேர்த்தோ அல்லது தண்ணீரை விட்டோ கூழ்போல் கரைத்துக் கொள்ளவும்.
சிறிதளவு நெய்யை வைத்து, முந்திரிப் பருப்பை ஒடித்து, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு நல்ல கம்பிப் பாகு நிலை வரும் வரைக்கும் கொதிக்க விடவும். கம்பிப் பதம் வந்தவுடன் அடுப்பைச் சிறியதாக வைத்து, அரைத்த கூழைக் கொட்டிக் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
அடுப்பில் கிளறிக் கொண்டிருக்கும் பொழுதே, மீதமுள்ள நெய்யை, கொஞ்சம் கொஞ்சமாக உருக்கி ஊற்றவும். கேசரிப் பவுடரைச் சேர்க்கவும்.
சிறிது நேரத்தில் உள்வாங்கிய நெய்யை அல்வா வெளியேற்றும் அல்லது கக்கும்.
அப்பொழுது ஏலப்பொடியையும் தூவிக் கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டவும்.

இறால் பொரியல் செய்யும் முறை

இறால் பொரியல்




தேவையான பொருட்கள்:
இறால் – 500 கிராம்
முட்டை – 1
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
சோளமாவு – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
இறாலை தோல் நீக்கி சுத்தமாகக் கழுவவும். அதை அதனுடன் மிளகுத்தூள், சோளமாவு , முட்டை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் ஊற வைத்த இறாலைப் போட்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.சுவையான இறால் பொரியல் தயார்.

கோ‌ழி‌க்க‌றி பகோடா செய்யும் முறை


கோ‌ழி‌க்க‌றி பகோடா




தேவையான பொருட்கள்:
கோ‌ழி‌க்க‌றி கா‌ல் ‌‌கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 தே‌க்கர‌‌ண்டி
மசாலா தூ‌ள் – 1 தே‌க்கர‌ண்டி
மிளகாய் தூ‌ள் – 1 தே‌க்கர‌ண்டி
‌மிளகு தூ‌ள் – 1 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் – 1 தே‌க்கர‌ண்டி
‌வி‌னிக‌ர் – 1 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு – 1 தே‌க்கர‌ண்டி
எ‌ண்ணெ‌ய் – 4 க‌ப்

செய்முறை:
கோ‌ழி‌க்‌க‌றியை தேவையான அள‌வி‌ற்கு சதுர‌த் து‌ண்டுகளாக வெ‌ட்டி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து‌க் கழு‌வி ‌நீரை வடி‌த்து வை‌க்கவு‌ம்.
அ‌தி‌ல் மே‌ற்கூ‌றியவ‌ற்‌றி‌ல் எ‌ண்ணெ‌யை‌த் த‌விர ம‌ற்ற அனைத்து பொருள்களையும் நன்றாக கலந்து வைக்கவும்.
குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்றாக ஊறியுள்ள கோ‌ழி‌க்க‌றியை எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும்.
சுவையான கோ‌ழி‌க்க‌றி பகோடா தயா‌ர்.


கடலை குருமா செய்யும் முறை


கடலை குருமா செய்யும் முறை


தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை ஒரு கப்
வெங்காயம் – 2
தக்காளி ஒன்று
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
மிளகாய் தூள் ஒன்றரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
வேகவைத்த கொண்டைக்கடலை – 10
முந்திரி – 3
தாளிக்க:
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
சோம்பு அரை தேக்கரண்டி
பட்டை ஒரு துண்டு
கிராம்பு – 2
செய்முறை :
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீருடன் எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் கொண்டைக்கடலையை தண்ணீருடன் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
கடலை குருமா தயார்.
சப்பாத்தி, பூரி, பரோட்டா ஆகியவற்றிற்கு ஏற்றது.