Showing posts with label SelfDevelopment. Show all posts
Showing posts with label SelfDevelopment. Show all posts

Monday, 1 December 2014

பொய் சொன்னால் கண்டுபிடித்து விடலாம்

(Image belladepaulo)
பொய் பேசும்போது நம்மை அறியாமல் கண்சிமிட்டல் அதிகரிக்கும், குரலில் இருக்கும் மாற்றங்கள், கண்மணி விரிவடைதல் போன்ற தடயங்கள் அடையாளமாக காட்டிகொடுத்துவிடும்.
பொய் சொல்வதில் உள்ள சிக்கல், நமது ஆழ்மனம் தன்னிச்சையாகவும், பொய் வார்த்தைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால் நமது உடல்மொழி காட்டிக் கொடுத்து விடுகிறது. இதனால் தான் அரிதாக பொய் சொல்பவர்கள் எவ்வளவு நம்பும்படியாக சொன்னாலும் பிடிபட்டு விடுகிறார்கள். அவர்கள் சொல்ல ஆரம்பித்த உடனேயே அவர்களது உடல் முரண்பாடான சைகைகளை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை என்பது தெரிகிறதுவிடும்.
பொய் கூறும்போது அவர்களது ஆழ்மனம் அனுப்பும் நரம்பு சக்தி ஒரு சைகையாக வெளிப்பட்டு வாய் வார்த்தைகளோடு முரண்படுகிறது. அரசியல்வாதிகள், வக்கீல்கள், நடிகர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் போன்ற தொழிலில் உள்ளவர்கள் பொய் பேசும்போது தங்கள் உடல் அசைவுகளை நன்கு பயன்படுத்துவதால் அவர்கள் கூறும் பொய்யைக் கண்டறிவது கடினம்.
புன்னகை
புன்னகை பொய் சொல்வதற்கான அடையாளம் என்று பெரும்பாலானவர்கள் நினைப்பதால், அவர்கள் தாங்கள் பொய் சொல்வதைக் குறைத்து விடுகிறார்கள். ஒரு உண்மையான புன்னகையை விட, பொய்யான புன்னகை வேகமாக வெளிபடுகிறது. நீண்ட நேரம் நீடிக்கிறது. பொய் பேசுபவன் புன்னகைக்கும் போது, முகமுடி அணிந்ததை போல் தோன்றுகிறது. ஒரு பொய்யான புன்னகை முகத்தின் ஒரு பக்கத்தை விட மறுபக்கத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. முளையின் இரண்டு பக்கங்களுமே புன்னகையை உண்மையாக்க முயல்வதால், இப்படி ஏற்படுகிறது. முகபாவங்களை கையாளும் பகுதி முளையின் வலது பக்கத்தில் இருப்பதால், உடலின் இடது பக்கத்திற்கே தகவல்களை அனுப்புகிறது. இதனால் முகத்தின் வலது பக்கத்தை விட இடது பக்கத்தில் தான் பொய்யான உணர்வுகள் அதிகமாக வெளிப்படுகின்றன. உண்மையான முகத்தின் இரண்டு பக்கங்களையும் கட்டுபடுத்துகின்றன. பொய் பேசுபவர்கள் பொதுவாக, சில வெளிப்படையான சைகைகளை வெளிபடுத்து கின்றனர்.
வாயை முடுவது
பொய்யான வார்த்தைகளை அழுத்தி விடும்படி ஆழ்மனம் கட்டளையிடுவதால் வாயை கை முடுகிறது. சில சமயம் சில விரல்கள் அல்லது முஷ்டியால் இறுக்க முடுவதன் முலம் வாயை மறைக்கலாம். ஆனால், அர்த்தம் ஒன்றுதான். இப்படி வாயை முடும் சைகையை மறைக்க சிலர் பொய்யாக இருமுவார்கள். யாராவது பேசும்போது இப்படி செய்தால் அவர்கள் பொய் சொல்லலாம். நீங்கள் பேசும்போது அவர் தன் வாயை முடிக் கொண்டால் நீங்கள் எதையோ மறைப்பதாக அவர் நினைப்பதாக அர்த்தம்.
வாயை முடுவதை உதடுகளின் மேல் சுட்டு விரலை வைத்து `உஷ்என்பது போலும் செய்யலாம். இப்படி செய்பவரின் அம்மாவோ, அப்பாவோ அடிக்கடி இப்படி செய்திருக்கலாம். தான் நினை ப்பதை கூற வேண்டாம் என்று அவர் தனக்குத் தானே கட்டளையிட இப்படி செய்யலாம். உள்ளே மறைத்ததை வெளியே காட்டுவதற்காகவே இப்படி செய்கிறார்கள். உங்கள் பெற்றோரோ அல்லது ஆசிரியரோ நீங்கள் குழந்தையாக இருக்கும் போது இவ்வாறு செய்திருப்பார்கள்.
காலரை இழுப்பது
பொய் கூறுவதால், முகம் மற்றும் கழுத்தின் கீழுள்ள திசுக்களில் குறுகுறுவென்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. அப்போது, தேய்க்கும் போதோ அல்லது சொறியும்போதோ தான் அதைத் திருப்தி செய்ய முடியும். இதனால் தான் நிச்சயமற்ற நிலையில் உள்ளவர்கள் கழுத்தை சொறிவார்கள். இதனால், பொய் சொல்பவர்கள், தங்களை பிறர் கண்டுபிடித்து விட்டார்கள் என்று சந்தேகிக்கும்போது காலரை இழுக்கிறார்கள். ஏமாற்றுவதால், ரத்த அழுத்தம் அதிகமாவது, கழுத்தில் வியர்ப்பது போன்றவற்றின் முலம் அவர் பொய் சொல்வது உங்களுக்கு தெரிந்து விடும்.
காட்டிக் கொடுக்கும் சைகைகள்
பொய் சொல்பவர்கள் தங்கள் முக்கிய உடல் சைகைகளை வேண்டுமென்றே கட்டுபடுத்தி விட்டாலும், பல சிறிய அசைவுகள் அதையும் மீறி வெளிபட்டு விடும். முக தசை சுருக்கம், கண்மணி சுருங்கி விடுதல், வியர்த்தல், கன்னம் சிவத்தல், கண்ணைத் தேய்ப்பது, நிமிடத்திற்கு பத்து முறை கண்சிமிட்டுவது 50 முறை கண்சிமிட்டுவதாக அதிகரிப்பு, முக்கைத் தொடுவது போன்ற சில சிறு சைகைகள் பொய்யை வெளிபடுத்தி விடும். இந்த சிறிய அசைவுகள் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தோன்றி மறையலாம். நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் விற்பனை பிரதிநிதிகள், மிகவும் நுட்பமானவர்களால் மட்டுமே இவற்றை உணரமுடியும். சரி இனிமேல் இந்த யுத்தியை வைத்து பொய்யை கண்டுபிடியுங்கள்.

ஆங்கிலம் முக்கியம் அமைச்சரே!

(Image transparent)

இன்றைய உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் என அனைத்திற்கும் அடிப்படை ஆங்கிலம் என்ற நிலை உருவாகிவிட்டது. எந்த மொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படித்தால் ஆங்கிலத்தை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.
முதலில் ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி, நம்மால் படிக்க முடியாது போன்ற எதிர்மறை எண்ணங்களை முதலில் மனதில் இருந்து அகற்றிவிடுங்கள். தினமும் குறைந்தது முப்பது நிமிடங்களாவது ஆங்கிலம் நாளிதழ், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வாசியுங்கள்.
ஆங்கிலத்தில் எழுத பழகுங்கள், போதுமான வார்த்தை ஞானம் இல்லை என்றால் எந்தமொழியிலும் திறம்பட உங்களது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளங்கள். எனவே, முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள். ஆங்கில டிவி செய்தி சேனல்களை பாருங்கள். இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள செய்தி சேனல்களையும் பார்க்கலாம்.
தனிமையில் உங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள். பின், அதனை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில் உள்ள தவறுகளை அறிந்து, அடுத்தமுறை அதனை தவிர்க்க பயிற்சி பெறுங்கள். எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் அவசியம். பேசும்திறன், காலங்கள், வினைச் சொற்கள் போன்றவை ஒரு மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை முழு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முயலுங்கள்.
'டிக்ஸ்னரி' (ஆங்கில அகராதி)யை உங்களது அபிமான நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை உங்களது தகவல் தொடர்பில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவரை ஆங்கில நாளிதழை சத்தமாக வாசிக்க சொல்லி, அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள். 'டயரி' எழுவதை உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.
இவை அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம் விரைவில் உங்களது நாக்கில் தவழும்.

Sunday, 30 November 2014

டிராவல் ஏஜென்சி – சின்ன முதலீடு பெரிய லாபம்

(Image Global traveler)

இப்போதெல்லாம் ஒரு சிறிய நிறுவனம் நிர்மாணிக்க வேண்டும் என்றால்கூட லட்சங்கள், கோடிகள் தேவைப்படும் பின்பு வேலையாட்கள் அவர்களுக்கு பயிற்சி என்று ஆரம்பத்தில் செலவு நீளுமே தவிர சற்றும் குறைய வாய்ப்பே இல்லை.

ஆனால் வெகு சில தொழில்கள் மட்டும்தான் சின்ன முதலிடுகள் செய்தாலே போதும் லாபத்தை வாரி இரைக்கும் தன்மை கொண்டது. படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைப்பதில்லை நம் நாட்டில் அதனால்தான் என்னவோ நாம் படித்ததை செய்யும் வேலையில் பயன்படுத்த மறந்துவிடுகிறோம். அப்படி பயன்படுத்தினால் லாபமும், வெற்றியும் நிச்சயம். இதோ உங்களுக்காக OnlineArasan தளத்தின் வாயிலாக சில லாபகரமாக இருக்கும் சிறு தொழில்களைப் பற்றி தெரிவிக்கிறோம். படித்து பயன்பெறுங்கள், மற்றவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

டிராவல் ஏஜென்சி தொழிலைப் பொறுத்தவரையில் பெரிதாக முதலீடுகள் தேவையில்லை. ஆனால் இந்த தொழிலில் இறங்கும்முன் தயவுசெய்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஏற்க்கனவே டிராவல் ஏஜென்சி நடந்துகொண்டிருக்கும் இடத்தில் பயிற்சி எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

எப்படி செய்வது
இது மிகவும் சுலபம்தான் வெளியூர் செல்பர்களுக்கு பயணச்சிட்டு பெற்றுதரப் போகிறீர்கள். ஆனால் இதில் ஏகப்பட்ட தொழில் நுணுக்கங்கள் இருக்கிறது அதற்கேற்றவாறு செயல்பட்டால் ஒரே ஒரு வருடம்தான் நீங்கள் லட்சாதிபதி. நம்புங்கள் நிச்சயம் இது சாத்தியம்தான்.

சிறந்த இடம்
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஓசூர், நெல்லை, ஈரோடு, சேலம் மற்றும் சுற்றுலா சார்ந்த இடங்கள் இந்த தொழிலுக்கு மிகவும் சிறந்த இடங்கள், ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே தொழில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். மற்றபடிக்கு எல்லா மாவட்ட தலைநகரத்திலும் இந்த தொழிலை தாரளமாக செய்யலாம் ஏனென்றால் ஆரம்பத்தில் லாபம் குறைச்சலாக இருந்தாலும் நஷ்டத்திற்கு வாய்ப்பில்லை.

எப்படி ஆரம்பிப்பது
முதலில் உங்களால் பத்துக்கு பத்து அல்லது ஐந்துக்கு ஐந்து என்ற அளவில் இடம் பிடிக்க முடித்தால் போதுமானது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது இன்னும் பெரிய இடம்பார்த்து மாறிவிடுவது நல்லதுதான் ஆனால் ஆரம்பத்தில் வசதிகள் குறைவாகவே இருந்தாலும்கூட அங்கேயே ஆரம்பியுங்கள் தவறில்லை. சிலருக்கு இந்த இடத்தைக்கூட பிடிக்க முடியாமல் போகலாம் அல்லது முன்பணம், வாடகைக்கு பணமில்லை என்று வருத்தமோ கவலையோ வேண்டாம். உங்கள் வீட்டின் முன் அறையில் கூட ஒரு மேசை, இரண்டு நாற்காலி போட்டு நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்.

எப்படி அணுகுவது
பொதுவாகவே நாம் மூன்று வழிகளில் பயணம் செய்கிறோம் அதாவது பேருந்து, இரயில், விமானம் பயணங்கள். இந்த மூன்று விதமான பயணத்திற்குத் தகுந்தற்போல உங்கள் அணுகுமுறை இருக்கவேண்டும். சரி நீங்கள் பேருந்து பயணிகளுக்கு பயணச்சிட்டு பதிவு செய்து தருகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். பயணிகளுக்கு தெரியும் விதத்தில் ஒரு பேனர் தயார் செய்து சரியான இடத்தில் நிறுவுங்கள் அல்லது தனியார் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உங்கள் பேனர் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். உங்கள் கடையும் இந்த இடத்திலேயே இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள் இது நன்றாக பயன்தரும். உள்ளூர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம், காலை நாளிதழ்களில் நோட்டீஸ் தயார் செய்து இணைத்து கொடுக்கலாம், உங்கள் ஊர் ஆரம்பம் மற்றும் எல்லையில் விளம்பர பேனர் வைக்கலாம்.

இல்லை இந்த அளவுக்கு என்னால் செலவு செய்து விளம்பரப்படுத்த முடியாது என்றாலும்கூட கவலை வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது அதிகமாக பயணம் செய்பவர்கள் யார் என்று தெரிந்துகொண்டு அவர்களை தொடர்கொண்டு சிறிது சிறிதாகவே ஆரம்பிக்கலாம்.

உங்களின் தரம்
ஒரு நிறுவனத்தின் தரம்தான் மிகவும் முக்கியமானது, தரம் இல்லையேல் அந்த நிறுவனத்தின் பொருள் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்கூட அது குப்பைக்கு சமம்தான். எனவே நல்ல நிலையில் இருக்கும் பேருந்தாக பார்த்து பயணச்சிட்டு பதிவு செய்துகொடுங்கள். உங்களிடம் வருபர்களை கண்ணியமாக நடத்துங்கள் மரியாதையாகவும் பேசுங்கள் இல்லையேல் மறுபடி உங்களைத்தேடி வரவே மாட்டார்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களையும் உங்களிடம் அனுப்பமட்டர்கள்.

பேருந்துகளை சரியாக தேர்ந்தெடுங்கள்

எப்போதும் தரமாக இருக்கும் பேருந்துகளுக்கே முன்னுரிமை கொடுங்கள் தரமில்லாத பேருந்துகளைத் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.  பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் பேருந்தாக இருந்தால் நிச்சயம் பெர்மிட் வைத்திருக்கிறார்களா என்று தெரிந்துகொண்டு பயணச்சிட்டு பதிவு செய்து கொடுங்கள். 

வாழ்வில் வெற்றி பெற இந்த பழக்கங்கள் தேவை

(Source hollinden)

சாதனையாளர்கள், சாதாரணமானவர்கள் இடையே சிறு வித்யாசம்தான் இருக்கிறது. கீழே வருபவற்றை கடைபிடித்தால் நீங்களும் சாதனையாளர்தான்.
1.       சூரியன்னுமுன் எழுங்கள். விடியலுக்குமுன் எழுந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். உங்கள் செயல்களும் சிறப்பாக இருக்கும். நேர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் அதிகரிக்கும்.
2.       தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி நமது உடலை மட்டும் பலபடுத்துவது அல்ல நமது மனதையும் பலபடுத்தும். இதனால் மன அளவிலும் இளமையாக உணருவீர்கள்.
3.       சமமான வாழ்கை. குடும்பம் தொழில்/வேலை இரண்டுக்கும் சரிபாதியாக உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். நமது வாழ்க்கைக்கு இரண்டுமே முக்கியம்.
4.       வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் வையுங்கள். யாருடைய கட்டுப்பாட்டிலும் நீங்கள் இருக்காதீர்கள். இல்லையென்றால் வாழ்நாளில் அதிக நேரத்தை மற்றவர்களுக்காக வாழவேண்டிவரும் பிறகு உங்கள் லட்சியம், ஆசை எல்லாம் கேள்விக்குறியாக போய்விடும்.
5.       கசப்பான அனுபவங்களை மறந்துவிடுங்கள். நமது இந்தியா போன்ற நாடுகளில் இனிப்பான பழைய அனுபவத்தைவிட கசப்பான அனுபவம்தான் அதிகம், அதையே நினைத்துக்கொண்டு இருந்தால் எதிர்காலம் சிறப்பாக அமையாது.
6.       உங்கள் நாளை திட்டமிடுங்கள். திட்டமிடாத வாழ்கை குப்பைக்குச் சமம். அதனால் இந்த நாளில் இதெல்லாம் செய்யவேண்டும் என்று தொடக்கத்தில் திட்டமிட்டு செயல்பட ஆரம்பியுங்கள்.
7.       உங்கள் வேலையை முடித்துவிடுங்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை அல்லது நீங்களே செய்யவேண்டிய வேலையை செய்யுங்கள். சின்னச் சின்ன செயல்கள்தான் நம்மை முன்னோக்கிச் செல்ல தூண்டுகோலாக அமையும்.
8.       உங்களைத் தயார்படுத்துங்கள். முக்கியத்துவம் இல்லாத விசயத்தில் உங்களை ஈடுபடுத்திக் நேரத்தை வீணடிக்காமல் உங்கள் லட்சியங்களுக்கு உங்களை மேருகேத்துங்கள். புதியவைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
9.       உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். எந்த செயலுக்கும் முன்னும் பின்னும் உங்களை கேள்வி கேளுங்கள், இது சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும்.
10.   உங்கள் அனுபவங்களை மற்றவர்களிடம் பகிரவும். அனுபவங்களை பகிரும்போது உங்களுக்கே உங்கள் மீது மரியாதை வரும், உங்களை நீங்களே விரும்ப ஆரம்பித்துவிடுவீர்கள்.
11.   காலத்தை மதியுங்கள். நமது வாழ்கை மிகவும் குறுகியது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் வீணடித்த நேரம் திரும்பாது என்பதை நினைவில் வைத்து உங்கள் செயல்களை முடியுங்கள். காலத்தை மதிக்காதவனுக்கு இங்கு யாரும் மதிப்புத் தரமாட்டார்கள்.

நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்று சாதனைகளைப் புரிய OnlineArasan-னின் வாழ்த்துக்கள்.

30 வயதிற்குள் சாதித்தவர்கள் என்ன செய்தார்கள்

(Source Linkedin)

நம்முடைய முப்பது வயதுக்குள்ளேயே நமது வாழ்க்கையை நன்றாக நிலைநிறுத்த விடாமுயற்சியுடன் உழைத்து பல பேர் நமது இலக்கை அடைகிறோம். இன்னும் சிலர் தவறிவிடுகிறார்கள் அவர்களுக்கு OnlineArasan தரும் ஒரு பொக்கிஷம்தான் இந்த பதிவு.
1.   நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பவர்களிடம் நேரத்தை செலவிடுதல் மிக முக்கியம் அல்லது உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்களிடம் நேரம் ஒதுக்குதல் இதுபோன்ற குணம் உங்களை உங்கள் இலக்கை நோக்கி அழைத்து செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
2.   உங்கள் கனவுகளை நனவாக்க நேரம் ஒதுக்குதல். எல்லோரும்தான் கனவு காண்கிறார்கள் ஆனால் அதற்கு வடிவம் கொடுக்க தவறும்போதுதான் அவர்களை இந்த உலகம் தோல்வியாளர்களாக பார்க்கிறது.
3.   எதிர்காலத்தில் வாழுங்கள். முன்னால் இந்தியப் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்திருந்தால் நிச்சியமாக அவர் அணு விஞ்ஞானம் படித்து இந்த நிலைமையில் இருந்திருக்கமாட்டார். எதிர்காலத்தில் தன் நிலை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தன்னை செதுக்கியதால்தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
4.   குழந்தைகள் பெற்றுகொள்வதில் அக்கறை. இந்திய வாழ்கை முறையில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியமானது அதனால் இருபத்தி நான்கு மற்றும் இருபத்தி ஆறு வயதிற்குள்ளாகவே குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.
5.   தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உங்கள் லட்சியம் முக்கியம்தான் ஆனால் அதை அடைய உங்கள் உடல் நன்றாக இருந்தால்தானே அதை அடைய முடியும்.
6.   எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்தல். சம்பாரிக்கும் மொத்த பணத்தையும் பத்தாம் தேதிக்குள் செலவு செய்துவிட்டு கடன் வாங்கினால் உங்களைவிட முட்டாள் இந்த உலகில் யாரும் இல்லை ஆனால் இந்த வகை முட்டாள்களே இந்த உலகில் அதிகம். சரி நீங்கள் இந்த வகை முட்டாளா?, ஆம் என்றால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.
7.   உங்களையே நீங்கள் விரும்புங்கள். உங்களை நீங்கள் விரும்பினால் இந்த உலகமே உங்களை விரும்பும். நீங்களே உங்களை வெறுத்தால் இந்த உலகமும் வெறுக்கத்தான் செய்யும்.

சிந்தித்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் OnlineArasan-னின் வாழ்த்துக்கள். 

Friday, 21 November 2014

உங்களை நிங்களே பிரபலபடுத்திக்கொள்வது(பிராண்டிங்) எப்படி?


உங்களை நிங்களே பிரபலபடுத்திக்கொள்வது என்பது ஒரு கலை என்று குறிப்பிடவேண்டும். உங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் பிரபலபடுத்துதல். ஒரு குறிப்பிட்ட வகை விஷயத்தைப் பற்றி நினைத்தால் குறிப்பிட்ட குறிபிட்டவர்கள்தான் தான் மனதிற்கு தோன்றும்.

அதே போல் நம்மையும் பிரபலப்படுத்திக்கொள்ள முடியும். தமிழ்நாட்டில் எப்படி திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லிகை, சேலம் மாம்பழம் போல உங்களையும் நீங்கள் பிரபலப்படுத்திகொள்ள முடியும். 

கணினி உலகின் உலக ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், பாப் இசையில் மைக்கேல் ஜாக்‌சன் என முக்கியமான பிராண்ட்-ஆக மாறி நிற்கும் தனிமனிதர்களை சொல்லலாம். 

இவர்களைப் போல நீங்கள் உங்களையும் பிராண்டிங் செய்யலாம். எப்படி

உங்களுக்கு தெரியாமல் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் நன்கு பரிட்சயமிக்கவராக இருப்பீர்கள். உங்களிடம் கேட்டால், அந்த விஷயத்திற்கு தெளிவு கிடைக்கும் என உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நினைப்பார்கள். அதுபோன்ற விஷயங்களில் உங்களின் தேடல்களையும், அதில் ஏற்படும் புதிய மாறுதல்களையும் அப்டேட் செய்து கொள்ளுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் அலுவலகத்திலோ அல்லது உங்களை சுற்றியுள்ள குழுவுக்கோ அது குறித்த சந்தேகம் எழுந்தால் அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். இப்படி மற்றவர்கள் உங்களைத் தேடி வரும்போது நீங்கள் ஒரு பிராண்ட் ஆக மாறியிருப்பீர்கள். 
ஒரு வேலையை எல்லாரும் செய்வது போல் செய்தால் அது தனியாக தெரியாது. அப்படி தெரிய வேண்டும் எனில், ஒரு நிறுவனம் தன் தயாரிப்பின் சிறப்பம்சத்தை வைத்து ஒரு பொருளை எப்படி பிராண்ட் செய்கிறதோ, அதுபோன்று உங்களிடம் உள்ள தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி உங்களை பிராண்ட் செய்துகொள்ளுங்கள். அதனால் உங்களிடன் சில வேலைகளை கொடுத்தால், அதனை புதுமையாகவும், சிறப்பாகவும் செய்ய முடித்துக் காட்டுங்கள். ஒருமுறை நீங்கள் செய்துகாட்டினால், அடுத்தமுறை அந்த உங்களைத் தேடி ஓடிவரும். 

பிராண்டுகள் என்பது விளம்பரம் செய்வது என்று நினைத்தால் அது தவறு. ஒரு நிறுவனம் தயாரிக்கும் விளம்பரம் என்பது வெறும் விளம்பரப்பலகையோடும், வீடியோக்களோடும் நின்றுவிட்டால், அது தோல்விதான். அதேபோல், ஒருவர் தனக்கு இந்த விஷயம் தெரியும் என்று நிறுத்திக்கொண்டால் அதுவும் தவறு. அதனை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டே இருந்தால்தான், அதனை மாற்றும் வெற்றி விகிதம் கண்டறியப்பட்டு அதில் பிரபல பிராண்டாக உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

எப்படி செய்வது?

1.மல்டி டாஸ்கிங் நபர் என்று கூறும் அளவிற்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் நபராக இருங்கள். அது உங்களை தனித்து காட்டும்.
3.உங்களிடம் கேட்டால் இந்த விஷயம் தெரியாது என்ற நிலை உருவாகாமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது தான் நீங்கள் வெளி உலகிற்கு அடையாளம் காணப்படுவீர்கள்.

4.விளம்பரம் என்பது நீங்கள் எனக்கு இது தெரியும் என்று இல்லாமல் இவருக்கு இது நன்றாக இது தெரியும் என்று பரிந்துரைக்கும் அளவில் இருப்பது அவசியம்.


Sunday, 16 November 2014

facebook – Mark Zukkerberk வாழ்கை வரலாறு

facebook – Mark Zukkerberk


இன்று இந்த பெயர்களை தெரியாதவர்ளே இருக்கமுடியாது அந்த அளவுக்கு முகவும் பிரபலம். ஆனால் Mark எப்படி வளர்ந்தார் facebook எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. எங்களால் முடிந்தவரையில் அவருடைய குடும்ப, கல்லூரி மற்றும் facebook உருவான விதம் போன்றவைகளை தொகுத்து கூறுகிறோம்.

பிறப்பு

Mark 1984 ஆண்டு அமெரிக்காவின் பிறந்தார், சிறிய வயதிலேயே அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகளில் ஆர்வம் காட்டத்தொடங்கினார். அதிலும் இவருக்கு Star Wars மிகவும் பிடித்த கதைகளில் முக்கியமானது. அப்படியே நாட்கள் உருண்டோடியது.

அப்போது இவருக்கு 10 வயது இருக்கும்போது தினமும் தன் தந்தை வீட்டில் இருக்கும் போது கணினியில் வேலை செய்வதை கவனிக்கத் தொடங்கினார். கணினி வாயிலாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து செயலில் இறங்கினார்.

ZuckNet

வீட்டில் தன் தந்தையின் கணினிக்கும் அவர் அலுவலகத்தில் அவர் பயன்படுத்தும் கணினிக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு ப்ரோக்ராம் எழுதினார் அதற்கு ZuckNet என்று பெயர் வைத்து தன் தந்தையிடம் செயல்படுத்தி காட்டினார். இதனால் Mark ன் தந்தை அசந்து போய்விட்டார். Mark கு பதினோரு வயது இருக்கும்போது அவர் தந்தை ஒரு கணினி ஆசிரியரை சொல்லிகொடுக்க நியமித்தார்.

ஆசிரியரின் அறிவுரையின்படி Mark Programming C++ for Dummies என்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். Mark ன் நண்பர்கள் சிலர் நன்றாக ஓவியம் வரைவார்கள், அந்த ஓவியங்களை வைத்து ஒரு Game ஐ உருவாக்கினார். அப்படியே Star Wars கு ஒரு theme யும் உருவாக்கினார்.

Adam D’ Angelo

உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டபோது Mark கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அதில் Adam D’ Angelo முக்கியமானவர், இவர் Program எழுதுவதில் சிறந்து விளங்கினார். எனவே மார்க் இவரிடம் Program கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். Mark விளையாட்டிலும் ஈடுபாடு கொண்டவர் கத்தி சண்டையில் (Fencing) Captain ஆக திகழ்ந்தார்.

ஆங்கிலம் மட்டுமல்லாது இலத்தீன், கிரேக்கம், ஹிப்ரூ போன்ற மொழிகளையும் விரும்பி கற்றுக்கொண்டார்.

10 லட்சம் அமெரிக்க டாலர்

ஒரு சமயம் தான் ஒரு இசை சம்பத்தப்பட்ட Program உருவாக்கினர் இதை பார்த்து அசந்துபோன Microsoft நிறுவனம் 10 லட்சம் அமெரிக்க டாலரை பரிசாகத்தர முன்வந்தது ஆனால் Mark அதை வாங்க மறுத்துவிட்டார். பிறகு Harvard பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

facebook

CourseMatch என்ற ஒரு இணையதளத்தை மாணவர்கள் தங்கள் வகுப்பை தேர்ந்தெடுக்கும் விதமாக உருவாக்கினார், இதன் பலனாக நிறைய பாராட்டுகள் குவிந்தன. அடுத்து மாணவிகளின் புகைப்படங்களை இணையத்தில் போட்டு அதற்கு மாணர்வர்கள் மதிப்பெண் தரும் Facemash என்ற தளத்தை உருவாக்கினார் கொஞ்ச நேரத்தில் மாணவர்கள் அந்த தளத்தை மொய்க்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழகம் 4 மணி நேரத்தில் அவரின் இணைய இணைப்பை துண்டித்துவிட்டது.

Winklevosse Bros என்ற நிறுவனம் Mark ஐ அணுகி Dating சம்பந்தப்பட்ட ஒரு இணையதளத்தை உருவாக்க உதவி கேட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அது முடியாமல் கைவிடப்பட்டது.

பிறகு ஒரு வார இடைவெளியில் Mark உடனே thefacebook.com தளத்தை உருவாக்கினார். பிறகு 30% சதவிதம் தற்போது facebook இல் பங்குள்ள Eduarado 10000 அமெரிக்க டாலரை முதலீடு செய்து பங்குதாரர் ஆனார். மேலும் Dustin என்பவரும் பங்குதாரர் ஆனார். Chris என்பவரையும் செய்திதொடர்பளராக நியமித்தார்.

காதலியை பாத்ரூம் போகும் போது சந்திந்திதார்

ஒரு நாள் பல்கலைக்கழகத்தில் பாத்ரூம் போகும்போது எதிர்பாராதவிதமாக ப்ரிச்சில்லா என்ற பெண்ணை பார்த்தார் அப்போதே இருவருக்கும் நன்றாக அறிமுகம் ஆகி, அந்த பெண்ணுடனே பழக ஆரம்பித்தார். பின்பு இது காதலாகவும் மாறியது. 10 மில்லியன் டாலருக்கு theFacebook விற்றுவிட்டு அதிலிருந்து வெளியேவந்துவிட்டார்.

படிப்பை பாதியில் விட்டார்

Mark-கு தன் சொந்த நிறுவனம் நிறுவவேண்டும் என்ற ஆவலில் சிலிகான் வேலி என்ற கணினி நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் நகருக்கு வந்தார், தன் படிப்பையும் பாதியில் விட்டார். Wirehog என்ற சிறிய நிறுவனத்தை நிறுவினார் ஆனாலும் facebook மறுபடியும் நிறுவலாமா என்று குழப்பத்திலேயே இருந்தார்.

புதிய பங்குதாரர்கள்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிறுவனர் $5௦௦௦,௦௦௦ அமெரிக்க டாலரை தன் பங்காக கொடுத்தார். இருபினும் Mark தன் சொந்த பணம் $85,௦௦௦ டாலரை பிற செலவுகளுக்கு பயன்படுத்தினார். yahoo நிறுவனம் $1 பில்லியன் பணத்திற்கு facebook ஐ கேட்டது மறுத்தார், Viacom நிறுவனம் $ 1.5 பில்லியன் தருவதாகவும் கூறியது அதையும் மறுத்தார்.

2006 எல்லோருக்கும் facebook

2006-ல் எல்லோரும் facebook பயன்படுத்த ஏதுவாக அதை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். பிறகு தன் சொந்த நிறுவனம் YouTube ஐ Google யிடம் விற்று வெளியேறிய programmer ஐ முதலில் வேளைக்கு அமர்த்தினார். Microsoft நிறுவனம் $15பில்லியன் தருவதாக கூறிப்பார்த்தது அதற்கும் Mark அசைந்து கொடுக்கவில்லை. 

ப்ரிச்சில்லாவிடம் contract ல் கையொப்பம் போட்டுகொடுத்து பிரிந்துவிட்டார். Facebook நிறுவனத்தை பார்த்துக்கொள்ள இரண்டாவதாக Sheryl என்ற பெண்ணை நியமித்தார். தன் மனதில் உள்ள சஞ்சலங்களால் அவதி பட்ட Mark இந்தியாவிற்கு வந்து Steave Jobs சென்ற அதே ஆசிரமத்திற்கு வந்தார். இந்தியாவில் ஏற்பட்ட மனமாற்றத்தில் உலகத்தையே வேறு விதமாக பார்க்க ஆரம்பித்தார் பின்னர்  சீன மொழியான Mandarin கற்றுக்கொண்டார். மீண்டும் ப்ரிச்சில்லாவை சந்திந்தித்து திருமணம் செய்துகொண்டார்.

5 கோடி பயனர்கள் இணைக்கத் திட்டம்

திருமணம் முடிந்த கையோடு மீண்டும் நிறுவனத்தை மேன்மைப்படுத்த ஆரம்பித்தார். முதற்கட்டமாக 5 கோடி பயனர்கள் இணைக்க திட்டம் வகுத்தார் ஆனால் இன்றோ எத்தனை கோடி மக்கள் facebook பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். இதுதான் facebook-ன்  Mark Zukkerberk-ன் வாழ்கை பாதை. இளைஞர்கள் இந்த இவரை முன்மாதிரியாக வைத்து தாங்களும் தங்கள் வாழ்க்கையிலும், தொழில் முனைவோராக வெற்றி பெறவேண்டும். வாழ்த்துக்கள்.


Thursday, 6 November 2014

வெற்றிபெற்றவர்கள் சொல்லாத வார்த்தைகள்

வெற்றிபெற்றவர்கள் சொல்லாத வார்த்தைகள்



வாழ்க்கையில் வெற்றிகரமாக இருப்பவர்கள் சில வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள், சில வார்த்தைகளை சொல்லவே மாட்டார்கள். சரி உங்களுக்கு இன்று வெற்றிகரமான மனிதர்கள் வாயில் இருந்து வரவே வராத வார்த்தைகளை உங்களுக்கு சொல்கிறேன்.

1.”நம்மால் இது முடியாது”

முடியாததையும் முடித்துக் காட்டினால்தான் நீங்கள் வெற்றிகரமான மனிதராக மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். முடியுமா என்று யோசித்தால் இப்போது உங்களால் இதை படிக்கக்கூட முடியாது.

2.”இது எப்படி என்று தெரியவில்லை”

ஆம், இந்த வார்த்தையை பல கோடி மனிதர்கள் தினமும் சொல்லிகொண்டேதான் இருக்கிறார்கள் அதனால் தங்கள் வாழ்கையில் வந்த சந்தர்பங்களை பயன்படுத்தி சாதிக்க தவறியபடியே சாதித்தவர்களை அண்ணாந்து மூக்கில் மேல் விரல் வைத்தபடி யோசித்துக்கொண்டே இருகிறார்கள், இவனுக்கு எப்படி இது தெரிந்தது என்று. எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

3.”அது என்னவென்றே தெரியவில்லை”

இப்படி சொல்லி எத்தனையோ விஷயங்களைத் தவிர்த்து தப்பிதோம்டா சாமி இருந்திருப்பீர்கள்? அது அதனையும் நீங்கள் வாழ்கையில் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் மறந்துவிடாதீர்கள்.

4.”இது எல்லாமே நானதான் செய்தேன்”

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா தனி ஒரு மனிதனால் எந்த ஒரு வேலையையும் தனியாகச் செய்யவே முடியாது. சமையல் செய்ய விவசாயியின் அரிசி, பருப்பு என யாரோ ஒருவருடைய உதவி இல்லாமல் செய்யவே முடியாது.

5.”இதற்கு அவசியமே வரவில்லை”

இப்படி அப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் நினைதுருந்தால் நாம் இப்போது தொடுதிரை (TouchScreen) சாதனங்களை நம் கையில் வைத்திருக்கமுடியாது. இது போன்ற ஆரம்ப காலத்து சந்தர்பங்களை தவறவிடாதீர்கள்.

7.”இது மிகவும் தாமதம் வேண்டாம்”

நீங்கள் இரவு உணவை எப்போதும் 9 மணிக்கு உண்பிர்கள், இன்று உங்களால் இரவு 11 மணிக்குதான் சாப்பிட முடியும் என்றால் என்ன செய்வீர்கள்? சாப்பிடாமலே தூங்குவீர்களா ? இல்லை உங்களால் நிம்மதியாகத்தான் தூங்கமுடியுமா? பாதி இரவில் எழுந்து சமயலறைக்கு ஓடுவீர்கள் அல்லவா. எதுவுமே தாமதம் இல்லை, சரியான திட்டமிடல்கள் இருந்தால் உங்களுக்குத்தான்.

7.”நாம் குழுவாக செய்தால் நன்றாக இருக்காது”

ஒன்றை மறந்துவிடாதீர்கள் ஒரு குழுவாக ஒரு வேலையைச் செய்தால், அந்த வேலை சிறப்பாக அமையும் , நீங்களும் நிறைய மற்ற உறுப்பினர்களிடம் நிறைய கற்றுகொள்ள வாய்ப்புகள் அதிகம்.

8.”அப்புறம் பார்க்கலாம்”

ஹ்ம், இபோதே பார்க்காத நீங்கள் அப்புறம் எங்கே பார்க்கப்போகிறீர்கள். எனவே அப்புறம் எதையும் ஒதுகதீர்கள். நஷ்டம் உங்கள் கணக்கில்தான் விழும்.

9.”எனக்கு நிறைய வேலையிருக்கிறது”

ஒரு சந்தர்ப்பம் நம்மை நோக்கி வந்தால் நாம் இப்படித்தான் அதைப்பற்றி அறிந்துகொள்ளாமல் ஏதாவது சாக்கு சொல்லி தவிர்த்துவிடுவோம் மறந்துவிடாதீர்கள் வெற்றியும் நம்மைத் தவிர்த்துவிடுகிறது.

எனவே இந்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் வாழ்கையில் வெற்றி அடைய OnlineArasan இணையதளத்தின் வாழ்த்துக்கள்.