அன்புள்ள தலைவனுக்கு(சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த்),
நாங்களும் “லிங்கா” திரைப்படம் குறித்த பிரச்சனை
தீர்ந்துவிடும் என்று காத்திருந்தோம் ஆனால் சில பணம் திண்ணி பருந்துகள்
வேண்டுமென்றே உங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் உங்களுக்கு
எதிராக செயல்படுகிறார்கள். இவர்கள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்று வெகு
விரைவிலேயே தெரிந்துவிடும் அதனால் நீங்களோ அல்லது நாங்களோ சிறிதும் கவலைப்படத்
தேவையில்லலை. அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்.
நீங்கள் கவலையே படாமல் அடுத்து “அட்டகத்தி”,”மெட்ராஸ்”
இயக்குனர் இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தை DTH ல் வெளியிடுங்கள்.
இதுவரையில் உங்களைத் திரையில் காணவேண்டி சராசரியாக அதிகபட்சமாக ரூபாய் 2௦௦௦ வரை
ஒரு குடும்பத்திற்கு செலவு செய்கிறோம். அதாவது முதல்நாள் டிக்கெட்டின் விலை மிகக்குறைந்தபட்சம்
ரூபாய்.250 என்ற அளவில் இருக்கிறது. நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கே
டிக்கெட்டின் விலை மட்டுமே ரூபாய் 1௦௦௦ வருகிறது. பெரும்பாலான திரையரங்கில் தண்ணீர்கூட
கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. திரையரங்கில் சாதாரணமாகவே இரண்டு மடங்கு அதிக விலை
கொடுத்துதான் தின்பண்டங்கள் விற்கிறார்கள். மேலும் நங்கள் வரும் வாகனத்திற்கு
பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையே அடிக்கிறார்கள். வாரநாட்களில் பகல்
நேரத்தில் படம் பார்க்க வேண்டும் என்றால் அலுவலகத்தில் லாஸ் ஆப் பே பிடித்தம்
செய்வார்கள், அதுவும் செலவுதான். இரவில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப ஆட்டோ
கிடைக்காது, கிடைத்தாலும் இரு மடங்கு வசூல் செய்வார்கள்.
மொத்தத்தில்
டிக்கெட் கட்டணம் 1௦௦௦ + தின்பண்டங்கள் + பார்க்கிங் +
போக்குவரத்து செலவு (பேருந்து/ ஆட்டோ/ கால் டேக்சி) + பெட்ரோல்/ டிசல் (குறைந்தபட்சம்
2 லிட்டர்) செலவு + வண்டித் தேய்மானம் + லாஸ் ஆப் பே (ஏற்படலாம்) + இதர செலவுகள்(ஏற்படலாம்).
இத்தனைக்கும் கணக்கு பார்த்தால் சாதாரணமாகவே நான்கு பேர் இருக்கும்
குடும்பத்திற்கே குறைந்தபட்சம் ரூபாய் 1500 மற்றும் அதிகபட்சமாக ரூபாய் 2000 செலவு
பிடிக்கும். அதுவே ஐந்து பேர் அல்லது அதற்கும்மேல் உள்ள குடும்பம் என்றால் ரூபாய் 3௦௦௦
செலவு ஆகுமே(நாங்கள் பாவம் அல்லவா!). மாதத்திற்கு ரூபாய் 15௦௦௦ முதல் 2௦௦௦0 வரை சம்பளம்
வாங்குபவர்கள் என்றால் இதற்கே ரூபாய் 3௦௦௦ கரைந்துவிடும். அதற்கும் கீழே சம்பளம்
வாங்கினார்கள் என்றால் என்றால் அவர்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். ரூபாய் 20000
மேல் சம்பளம் என்றால் சமாளித்துவிடுவார்கள் ஆனால் எல்லோருக்கும் அந்த குடுப்பினை
அமைவதில்லையே!. இவ்வளவு செலவு செய்யவேண்டுமா என்ற கேள்வி எழலாம்தான் தமிழ்நாட்டில்
வேறு பொழுதுபோக்கு அம்சம் என்ன இருக்கிறது அப்படியே இருந்தாலும் இதைவிட
அதிகமாகத்தான் செலவு ஆகிறதே!.
சரி விசயத்திற்கு வருவோம், ரூபாய் 1௦௦௦ கட்டணம் என்ற
முறையில் DTH ல் ஒளிபரப்பினால்கூட எங்களுக்கு ரூபாய் 500 முதல் 2௦௦௦ வரை
மிச்சமாகும். குடும்பத்தில் எத்தனைப்பேர் இருந்தாலும் பிரச்சினை இல்லை
சமாளித்துவிடலாம். அதேவேளையில் இரண்டவது முறை பார்க்கவேண்டும் என்று நினைத்தால்
ரூபாய் 500 என்ற கட்டணத்தில் ஒளிபரப்பலாம். மூன்றாவது முறை என்றால் ரூபாய் 200
என்ற ரீதியில் கட்டணம் வசூல் செய்துகொள்ளலாம். இதுபோன்று நாங்கள் திரையங்கில்
சென்று இரண்டு முறை, மூன்று முறை குடும்பத்துடன் படம் பார்க்க ரூபாய் 1௦௦௦௦ வரை
செலவு ஆகுமே!.
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமாக DTH சந்தாதாரர்கள்
இருக்கிறார்கள் இதில் மாதந்தோறும் தவறாமல் ரீசார்ஜ் செய்வோர் 3.5 கோடி முதல் 4 கோடி சந்தாதாரர்கள் என்று TRAI நிறுவனம் கூறுகிறது. இதில் அதிகபட்சமாக 15
லட்சம் சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தினால்கூட முதல் மூன்றே நாட்களில் ரூபாய் 200
முதல் 250 கோடி வசூல் ஆகும்.
தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் இடங்கள் என்று
பார்த்தால்
1.தமிழ்நாடு
2.ஆந்திரம்(ஆந்திரா, தெலுங்கானா)
3.கேரளம் மற்றும் கர்நாடகம்
4.வடமாநிலங்கள்
5.வெளிநாடுகள் (அங்கேகூட DTH ல் வெளியிடலாம்).
வேறு மாநிலங்களில் அல்லது நாடுகளில் அந்தந்த மொழிகளில்கூட
மொழிமாற்றம் செய்து DTH ல் வெளியிடலாம். தமிழ்மொழி படங்களுக்கு வேறு மொழி பேசும்
மக்களிடமும் ஒரு சந்தை உருவாக ஒரு வாய்ப்பு அமையும்.
ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 80 கோடி செலவு செய்து வெளியிட்டால்கூட முதல் முறை பார்வையாளர்களை சென்றடைந்தாலே
ரூபாய் 100 முதல் 120 கோடி வரையில் வசூல் ஆகும். DTH நிறுவனங்களே
விளம்பரபடுத்திவிடுவர்கள், விளம்பர செலவு மிச்சம்.
தியேட்டரில் வேலை செய்பவர்கள் சிறுக சிறுக வேறு வேலைகளுக்கு
மாறிவிடுவார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் இதுவரை சம்பாரித்தது போதும் அவர்கள்
காம்ப்ளெக்ஸ் கட்டிக்கொண்டுவிடுவார்கள். விநியோகஸ்தர்களும் இதுவரை சம்பாரித்து
சொத்து சேர்த்தது போதும். நாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை வரைமுறைகள் இல்லாமல்
தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விழுங்கியது போதும்.
எங்கள் வீட்டிலேயே உட்கார்ந்த இடத்திலேயே குறைந்த செலவில்
நாங்கள் விரும்பும் நொறுக்குத்தீணிகலோடு லாஸ் ஆப் பே இல்லாமல் போக்குவரத்து செலவு
இல்லாமல் பார்க்கிங் கட்டணம் இல்லாமல் பெட்ரோல் டிசல் செலவு இல்லாமல் இதையெல்லாம்விட
எத்தனைப்பேர் வேண்டுமானாலும் திரைப்படத்தைப் பார்க்கலாம். இதைவிட எங்களுக்கு என்ன
வேண்டும்?
நன்றி
ராஜேஸ் ராவ் rajeshrao180@gmail.com