Showing posts with label 2015YearPredictions. Show all posts
Showing posts with label 2015YearPredictions. Show all posts

Monday, 24 November 2014

சிம்மம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

சிம்மம் 

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


எதிலும் தனித்துநின்று போராடி வெற்றிபெறும் ஆற்றல்கொண்ட சிம்ம ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை உண்டாகும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. தயாள குணம்கொண்ட நீங்கள் பண விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டு என்றாலும் அதை சில தடைகளுக்குப் பின்பே பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாக உங்களின் முன்கோபமே காரணமாக இருக்கும் என்பதால் முன்கோபத்தையும் முரட்டு சுபாவத்தையும் சற்று தளர்த்தி அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களின் மத்தியஸ்தத்திற்கு பலரிடம் நல்ல மதிப்பு உண்டென்றாலும் இந்த வருடம் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கமின்றி லாபத்தைப் பெறுவீர்கள். வேலையாட்களின் உதவி ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளை வகித்தாலும் மேலதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரத்தால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன உளைச்சல்கள் போன்றவை உண்டாகும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு உண்பதின்மூலம்  வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்பட்டால் அனைத்து நற்பலன்களையும் அடையமுடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதிக அலைச்சல்களையும் அடைவீர்கள். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள். 

வேலை

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் இருக்கும் பதவிகளுக்கு பங்கம்வராமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. பிறர்செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் நீங்கள் பொறுப்பேற்கவேண்டியிருக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாத காரணத்தால்  உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்கள் விருப்பத்தை சற்று தள்ளிவைப்பது உத்தமம்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி, பெறாமைகளை சமாளித்தே லாபத்தைப் பெறமுடியும். புதிய வாய்ப்புகள் வந்தாலும் அதை பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. அரசு வழியில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் அதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் சுமாரான லாபத்தை அடையமுடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது. தொழிலாளர்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

பெண்கள்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் உண்டாகும் என்றாலும் நீங்கள் எதிலும் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்று மையை நிலைநாட்டமுடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந் தாலும், செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சில நேரங்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும் பூர்வீகச் சொத்துகளால் வீண் செலவுகளும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று கூடும்.

பணம்

இந்த ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச் சனி நடப்பதாலும், குரு பகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதாலும் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போர் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியம். கொடுத்த கடன்களை சிறிது சிறிதாக வசூலித்துவிட முடியும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் தேவையற்ற வதந்திகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தாலும் நிதானத்தைக் கையாண்டால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே. மக்களின் ஆதரவும் சிறப்பாக அமையும்.

விவசாயிகள்

விவசாயிகளுக்கு விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை, வரப்பு தகாரறு என சில பிரச்சினைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன் உங்களுக்குக் கிடைத்துவிடும். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் வில்லங்கம் ஏற்படலாம்.

கலைஞர்கள்

கலைஞர்கள் தகுந்த வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் குறையும்.

மாணவர்கள்

கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். ஞாபக மறதி, கல்வியில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியாத நிலை போன்றவை உண்டாகக் கூடும். பெற்றோர், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போதும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.  பயணங்களிலும் நிதானம் தேவை.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு சனி இந்த ஆண்டு 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச்  சனி நடைபெறுகிறது.  இதனால் சனிக் கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை  குரு விரய ஸ்தானத்திலும் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, குருப்ரீதி தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி நெய் வழிபடுவது நல்லது. அந்தணர்களுக்கு தானங்கள் செய்வது உத்தமம். 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்வதால் துர்க்கை வழிபாடுவிநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். வாழ்த்துக்கள்.

மீனம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


நீதி, நேர்மை தவறாமல் நடக்கும் பண்பும் ஏழை எளியவர்களுக்கு உதவிசெய்யும் ஆற்றலும்கொண்ட மீன ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முற்பாதியில் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திரவழியிலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலன்களையும் பெறுவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறுவீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குரு பஞ்சம ஸ்தானத்திலிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. இதனால் மருத்துவச் செலவுகளும் உங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்களை குறைத்துக்கொள்ள முடியும்.

குடும்பம்பொருளாதார நிலை

 குடும்பத்தில் பொருளாதார நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை எளிதில் அமையும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சியும் கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது.

வேலை

உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது. அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித் தருவதாக அமையும். திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். பொருளாதார நிலையும் ஊதிய உயர்வுகளால் மேம்படும். புதிய வேலைவாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிட்டும். நல்ல நிர்வாகத்திறனும் பலரை அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலும் உண்டாகும். ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது உங்களின் கௌரவத்துக்கு நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி குரு 6-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

பெண்கள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் அமையும். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். குரு மாற்றத்திற்குப் பிறகு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 

பணம்

 இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவை சரளமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் தாராளமாக லாபம் கிட்டும். பெரிய முதலீடுகளையும் தடையின்றி ஈடுபடுத்த முடியும். என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்திற்குப் பிறகு கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்த்துவிடுவது நல்லது.

அரசியல்வாதிகள்

குரு பகவான் இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். ஓரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றி காப்பாற்றிவிடுவீர்கள். கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண் செலவுகளைச் சந்திக்கநேரிடும் என்பதால் பணவிஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகள்

 விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும் எதிர்பார்த்த வங்கிக் கடன்களும்  கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டென்றாலும்  சில தடைகளுக்குப்பின் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் சிறப்பான லாபம் கிட்டும். கடன்களை அடைக்கக்கூடிய அளவுக்கு ஆற்றலும் உண்டாகும்.

கலைஞர்கள்

இந்த ஆண்டின் தொடக்கமானது கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கப்பெறும். குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக்கூடுமென்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

மாணவர்கள்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும்.

பரிகாரம்

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. வரும் 05-07-2015 முதல் குரு 6-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம். வாழ்த்துக்கள்.

கும்பம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

கும்பம் 

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

வெள்ளை உள்ளமும், நெறிதவறாத பண்பும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே! இந்த 2015-ஆம் ஆண்டு தொழில், உத்தியோகரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகளைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் வம்பு வழக்குகளும் ஏற்படும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி பிறகு குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும். 


ஆரோக்கியம்

இந்த வருடம் முழுவதும் வீட்டில் உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பற்ற நிலை, எந்தவொரு பணியிலும் முழுமையாக கவனம் செலுத்தமுடியாத நிலை உண்டாகும்.  வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும். 

குடும்பம், பொருளாதாரம்

குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே எதிலும்  ஒற்றுமையுடன் செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். 

வேலை

இந்தாண்டு தொடக்கத்தில் செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்துமுடிக்க முடியாத நிலை, மேலிடத்தில் அவப்பெயர் எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமைய சற்று தாமத நிலை உண்டாகும். 05-07-2015 பிறகு ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும், கிடைக்கும் என்றாலும் இந்த ஆண்டு முழுவதும் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில்வியாபாரம்

இந்த வருடம் முழுவதும் தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகளும் வீண் விரயங்களும், தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களும் உண்டாகும். என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் வருவாய் சூடுபிடிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். அரசு வழியில்  எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் மறைவதால் மந்த நிலை விலகி லாபம் பெருகும். கூட்டாளிகளும் சாதகமாகவே செயல்படுவார்கள்.

பெண்களுள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  பணவிவகாரங்களில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உத்தமம். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வது, குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் யோகம் உண்டாகும்.

பணம்

ஆண்டின் தொடக்கத்தில் பண விஷயத்தில் பிறருக்கு வாக்கு கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.

அரசியல்வாதிகள்

அரசியலில் உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். ஜூலை 5-ஆம் தேதி முதல் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல்களில் நிறைய இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள், வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும், உற்றார்- உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். காய், கனி, பூ வகைகளாலும் கால்நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்,

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது.  நிறைய போட்டி பொறாமைகள் நிலவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. ஜூலை 5-ஆம் தேதி முதல் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதோடு சுகவாழ்வு சொகுசு வாழ்வும் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். 

மாணவர்கள்

கல்வியில் சற்று மந்தநிலையே இருக்கும் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக ஈடுபாட்டுடன் செயல்படவேண்டியிருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும் வீணான பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப்பெற நல்ல முறையில் நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு  எள் எண்ணெய் தீபமேற்றுவது சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். வரும் 05-07.2015 வரை குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. சர்ப கிரகங்களான கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது. வாழ்த்துக்கள்.

கடகம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)


நல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி ராசிக்காரர்களே!

ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் நிலை சற்றே மந்தமடைந்தாலும் உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளைப் பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வரும் 05-07-2015க்கு பிறகு குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும், குலதெய்வம் தெய்வதரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

ஆராக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சிறப்பாக அமையும். தேவையற்ற அலைச்சல்கள், நேரத்திற்கு சாப்பிடமுடியாத நிலை, வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலை ஏற்படும், நிம்மதியான உறக்கம்கூட வராது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போடவேண்டியிருப்பதால் மனநிம்மதி குறையும். ஜூலை 5-ஆம் பிறகு உடல் ஆரோக்கியரீதியாக உள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவச் செலவுகளும் குறையும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, பொருளாதார நெருக்கடி சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும் என்றாலும், வரும் ஜூலை  5-ஆம் தேதி பிறகு தாராள தன வரவுகள் உண்டாகும். அசையா சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது.

வேலை

உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது, எதையும் எதிர்கொள்ள முடியும். குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

தொழில், வியாபாரம்

பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யவிருக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.

பெண்களுக்கான பலன்

ஆண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகள் வரலாம், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும் என்றாலும், குருமாற்றத்திற்குப் பின் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்துத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். 

பணம்

ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கலிலும், பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்த்துவிடுவது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் பணம் கொடுக்கல் வாங்கலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கிருந்து வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போடுவீர்கள். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்களை  மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

விவசாயத்தில் பட்ட பாட்டிற்கேற்ற பலனைப் பெற்றுவிட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும், தகுந்த நேரத்தில் முடிக்கவேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கால்நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடையவேண்டிய லாபங்களை அடைந்துவிட முடியும்.

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் கலைஞர்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளைப் பிறர் தட்டிச்சென்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்துச் செல்வதும் அவசியம். சுகவாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.

மாணவர்கள்

கல்வியில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களில் பயணம்செய்யும்போது வேகத்தைக் குறைப்பது நல்லது.

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 05-07-2015  வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு  வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றுவது நன்மை பயக்கும், படிக்கும் பிள்ளைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடவும். தினமும் விநாயகரையும் வழிபாடு செய்யலாம் வாழ்த்துக்கள்.

மகரம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
பிடித்ததை விடாத பிடிவாதக்காரர் என்றாலும், வீண் பிடிவாதக்காரராக இல்லாமல் எதிலும் கவனமுடன் செயல்படும் மகர ராசிக்காரர்களே! இந்த ஆண்டில் நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாளக்கூடிய வாய்ப்பும், அதனால் லாபமும் அபிவிருத்தியும் பெருகக்கூடிய அமைப்பும் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களும் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெறுவார்கள். சிலருக்கு நினைத்த இடத்திற்கு மாற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் அதாவது ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்றாலும் எதையும் சமாளிக்கமுடியும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்துசென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். சனியின் பலமான சஞ்சாரத்தால் இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாகவே இருக்கும்.


ஆரோக்கியம்

உடல்நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய ஆற்றலுண்டாகும். குடும்பத்தி லுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உங்களின் தேக ஆரோக்கியத்தில்  எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாகச் சரியாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் இருக்கும். 

குடும்பம்பொருளாதார நிலை

இந்த ஆண்டு முழுவதும் எந்த வகையிலும் பணநெருக்கடியோ, உறவினர்களிடம் கருத்து வேறுபாடோ ஏற்படாது. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். ஆண்டின் முற்பாதியில் திருமண சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள்கூட நிறைவேறிவிடும். இதுவரை உங்களை விரோதிபோல பார்த்தவர்களும் உரிமையோடு நட்புபாராட்டுவார்கள். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் யாவும் சேரும். குடும்ப ஒற்றுமையும் சிறப்பாகவே இருக்கும்.

வேலை

உத்தியோக நிலையில் உயர்வான பலன்களை அடைவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உத்தியோகத்தில் ராஜ மரியாதை கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறனும், செயலாக்கமும், அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடிவரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

தொழில்வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையுமென்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் ஆதாயம் கிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உறவினர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல மேன்மைகள் அமையும். கணவரிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். தெய்வீக, ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, யோகம், வண்டி, வாகன யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

பணம்

ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சாதகமான பலனை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். இந்த ஆண்டு பிற்பாதியில் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. என்றாலும் சனி சாதகமாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் துணிவும் உண்டாகும். 

அரசியல்வாதிகள்

இந்த வருடம் உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு அரசியல் காரணங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விவசாயிகள்

 விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். அசையாச் சொத்து வகையிலிருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் அனைத்தும் விலகும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு தொழிலில் புதிய புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதால் உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். அரசு வழியில் கௌரவிக்கப்படுவீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். ஆடம்பர பங்களாக்களும், கார் வசதிகளும் உண்டாகும். வெளிநாடுகளுக்கும் படப் பிடிப்புக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மாணவர்கள்

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். நல்ல முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபட்டு பரிசுகளை தட்டிச்செல்வீர்கள்.

பரிகாரம்

மகர ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு வரும் 05-07-2015 முதல் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. கேது 4-லும் ராகு 10-லும் சஞ்சரிப்பதால் சர்பசாந்தி செய்வது, துர்க்கையம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை உண்டாக்கும். வாழ்த்துக்கள்.

தனுசு ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகள் பல பெறக்கூடிய தனுசு ராசிக்காரர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் அவ்வளவு சாதகமான அமைப்பில்லை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மேற்கூறிய பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தாலும் உங்களின் உழைப்பாலும் எதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து  வெற்றி நடைபோடுவீர்கள். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் சனியால் ஏற்படும் பிரச்சினைகள்  யாவும் ஓரளவுக்கு குறையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள்  கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒருசில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது.

ஆரோக்கியம்

 இந்த ஆண்டு முழுவதும் தேவையற்ற பயணங்கள் அலைச்சல், டென்ஷன், மந்த நிலை, கை கால் வலி போன்றவை உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ணமுடியாத நிலை ஏற்படும். அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் நிதானமாகத்தான் செய்வீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் உடல் உபாதைகளும், வீண் செலவுகளும் படிப்படியாகக் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமையானது ஆண்டின் தொடக்கத்தில் சுமாராகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்யநேரிடலாம். வரும் ஜூலை 5-ஆம் தேதி பிறகு சனியால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைந்து குடும் பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்பு போன்றவை உண்டாகும். கடன்களும் படிப்படியாகக் குறையும். செலவுகளும் கட்டுக்குள்ளிருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

வேலை

 உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சிறுசிறு பிரச்சினைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், புதிய இடத்தில் உணவு முறைகளோடும், உடன்பணிபுரிபவர்களிடமும் ஒத்துப்போகமுடியாத நிலை உண்டாகும்.  என்றாலும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்.  உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிட்டும். உயரதிகாரிகளின்  ஆதரவு உங்களை மேலும் உற்சாகக் கடலில் ஆழ்த்தும் என்றாலும் வேலைப் பளு குறையாது. நிறைய உழைக்க வேண்டி வரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாகச் செயல்படமாட்டார்கள். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். சனி இந்த வருடம் சாதகமின்றி சஞ்சரித்தாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். ஓரளவுக்கு லாபமும் கிட்டும். போட்டிகளையும் சமாளித்து விடுவீர்கள். வெளியூர்வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். இந்த ஆண்டு சனி விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது. 


பணம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சினைகள்விரயங்கள் ஏற்படும். எனவே பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.  வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் எதிலும் கவனமுடன் செயல்படவேண்டிய ஆண்டாகும். விரயச் சனி நடைபெறுவதால் மக்களிடம் ஆதரவு குறையும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாமல் போகும்.  கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகளை செய்யநேரிடும். எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

விவசாயிகள்

 விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்குமென்றாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காது.  தாமதம் ஆகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. புழு, பூச்சிகளின் தொல்லைகளால் சில வீண் விரயங்களும் உண்டாகும். குடும்பத்தில் ஆண்டின் பிற்பாதியில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும்.

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் வாய்ப்புகள் நல்லதாகத் தேடிவரும். இந்த ஆண்டு நிறைய தேவையற்ற அலைச்சல்களும், சுகவாழ்வு பாதிப்படையக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பணவரவுகள் ஆண்டின் பிற்பாதியில் சிறப்பாக இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும்.

மாணவர்கள்

கல்வியில் மந்தமான நிலை இருக்கும். எதையும் எளிதில் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு ஞாபக மறதி, மனக் குழப்பங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு  ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது, திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது உத்தமம். வாழ்த்துக்கள்.

விருச்சகம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

எதையும் திறமையாகச் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே!  இந்த 2015-ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு  குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

ஆரோக்கியம்

உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு, உடல் சோர்வுமந்தமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். இந்த வருட ஜூலை 5-ம் தேதி வரை குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடும் ஆற்றலும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது, நெருங்கியவர்களின் பிரச்சினைகளில் தலையீடுசெய்யாதிருப்பது போன்றவை உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது வீண் அலைச்சலைக் குறைக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி, சுபிட்சம், பொருளாதார மேன்மை, திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதால் கடன்களும் குறையும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதாலும், வரும் ஜீலை 5-ஆம் தேதி முதல் குரு ஜீவன ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நற்பலனைத் தரும்.

வேலை

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும்  ஜூலை 5 வரை குரு 9-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் உண்டாகும். குரு மாற்றத்திற்குப்பின் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து, அனைவரையும் அனுசரித்து நடப்பது, மற்றவர்களுக்கும் பணி நிமித்தமாக உதவிகளைச் செய்வது போன்றவை நற்பலனைத் தரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது அற்புதமான நற்பலனை உண்டாக்கும். குரு 9-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வங்கிக் கடன்களும் தீரும். குரு மாற்றத்திற்குப்பின் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும்.

பெண்கள்

இந்த வருடம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உண்டாகலாம். கணவரை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும் சிக்கனத்தைக் கையாள்வதும் மிகவும் நல்லது.

பணம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவை சிறப்படையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும் என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின்பு பண விவகாரங்களில் வீண் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடுமென்பதால் பெரிய தொகைகளை தவிர்த்துவிடவும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகுமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளிலும் தடையும் தாமதமும் உண்டாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வடையும்.

விவசாயிகள்


விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இருக்காது. புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய்கனிபூ வகைகள் மூலம் ஓரளவுக்கு லாபங்களைப் பெறமுடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

கலைஞர்கள்

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு சிறப்பான பலனை ஏற்படுத்தும். ஏழரைச் சனி நடைபெறுவது, தொழிலில் முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு பலமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடவும்.

மாணவர்கள்

மாணவர்களின் கல்விநிலை சற்று மந்தமாகத்தானிருக்கும். எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவுக்கு படிப்பில் கவனம் குறையும். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வழிநடத்திச் செல்வது மிகவும் நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 05-07-2015 முதல் குரு 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. கேது 5-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும். வாழ்த்துக்கள்.

துலாம் ராசிக்கான 2015 ஆண்டு பலன்கள்

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட் டாமல் தன்னுடைய கருத்துகளைக்கூட சிந்தித்து வெளிப்படுத்தும் துலா ராசிக்காரர்களே! உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத்தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும். 

குடும்பம்பொருளாதாரம்

இந்த வருடம் முழுவதும் கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உறவினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சற்று பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் ஊதிய உயர்வும் கிட்டும். கடன் களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலமென்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும் என்றாலும் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வுகளும் தாராளமாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப் படியை எட்டிவிடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

பெண்கள்

இந்த ஆண்டும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் உறவுகளும் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம்போன்ற மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் சுமைகளும் குறையும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. சிலருக்கு அசையாச் சொத்துகளை வாங்கிச்சேர்க்கும் யோகமும் உண்டு.

பணம்

ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு ஏழரைச் சனி தொடருவதாலும் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது என்றாலும் ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது  நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பின் வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.

விவசாயிகள்

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும் மகசூல் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெறமுடியாமல் போகுமென்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக்கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்தமுடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்கள்

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் குருப் பெயர்ச்சிக்குப்பின் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் பத்திரிகைகளில் வீண் வதந்திகள் ஏற்படும். 

மாணவர்கள்

மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். கூடாதார் நட்பை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப்பின் கல்வியில் தானாகவே ஈடுபாடு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி உங்களுக்கே கிட்டும்.


பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தொடர்ந்து ஆஞ்சநேயரை வழிபடுவது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது. 05-07-2015 வரை குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். சர்ப கிரகமான  ராகு  12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது. வாழ்த்துக்கள்.