Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts
Wednesday, 2 March 2016
Tuesday, 10 November 2015
தூங்கா வனம் திரைப்பட விமர்சனம்
#ThoongaVanam #Review #KamalHassan #Trisha #PrakashRaj #OnlineArasan #StarCommunicationsRayakottai
போலீஸ் அதிகாரியான கமல், பணத்திற்காக எந்த
வேலையையும் செய்யக் கூடியவர். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தி வரும் பிரகாஷ் ராஜ்ஜிடம்
இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை திருடுகிறார். அதை பதுக்கி வைக்கும் போது
மற்றொரு போலீசான திரிஷா பார்த்து விடுகிறார்.
போதைப் பொருளை திருடியதால் கமலின் மகனை பிரகாஷ் கடத்துகிறார். அவனை பணயக்
கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப்
பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல், போதைப் பொருளை கொடுக்க நினைக்கிறார். ஆனால்,
அவர் பதுக்கி வைத்த
இடத்தில் இருந்து போதைப் பொருள் காணாமல் போகிறது.
என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் கமல், எப்படி தன் மகனை மீட்டார்? அந்த போதைப் பொருளை எடுத்தது யார்? கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன?
என்பதே பரபரப்பான
மீதிக்கதை.
‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’
என இரண்டு சென்டிமென்ட்
படங்களுக்குப் பிறகு மீண்டும் ஆக்ஷன் கதைகளில் நடித்திருக்கிறார் கமல். வழக்கமான
நேர்மை போலீஸ் போல் இல்லாமல் வித்தியாசமான போலீசாக நடித்திருக்கிறார். கமலின்
நடிப்பை பற்றி சொல்ல தேவையில்லை. நடிப்பில் என்னை மிஞ்ச யாரும் இல்லை என்றளவிற்கு
நடித்திருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் தனக்கே உரிய பாணியில்
நடித்திருக்கிறார்.
முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார் திரிஷா. போலீஸ்
கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். திரிஷாவின் நடிப்பில் இப்படம்
முக்கிய இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில்
மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.
படத்திற்கு பலமாக பிரகாஷ் ராஜ்ஜின் நடிப்பு அமைந்திருக்கிறது. இவருடைய
காட்சிகள் அனைத்திலும் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார். கமலை ஆட்டி வைக்கும்
காட்சிகளில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்றொரு போலீசாக வரும் கிஷோர்
மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சம்பத், ஜெகன், ஆஷா சரத் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இயக்கியிருக்கிறார்
இயக்குனர் ராஜேஷ். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம். படம் முடியும் போது
இவ்வளவு சீக்கிரம் படம் முடிந்துவிட்டதாக, என்றளவிற்கு இயக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக
கையாண்டிருக்கிறார். ஆக்ஷன் படத்தை மிகவும் ஸ்டைலீஷாக கொடுத்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் படத்தில் ஒரு பாடல்தான். வழக்கமான படத்தில் இடம் பெறும்
பாடல் போல் இல்லாமல் உருவாக்கியிருப்பது சிறப்பு. பின்னணி இசையில்
மிரட்டியிருக்கிறார். சனு ஜானின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக கமல், திரிஷா, கிஷோர் மோதும் சண்டைக்காட்சி சிறப்பு.
மொத்தத்தில் ‘தூங்காவனம்’
ரசிகர்களை தூங்க
விடவில்லை.
வேதாளம் திரைப்பட விமர்சனம்
#Ajith #Vedhalam #Review #UltimateStar #ShruthiHassan #Lashmimenon #Soori #Anirudh #OnlineArasan #StarCommunications #Rayakottai
சென்னையில்
இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித்.
அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து
தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி
அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார்.
வக்கீலான
ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின்
வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று
கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு
வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.
இந்நிலையில்
ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின்
கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை
ஏற்படுகிறது. அவரை சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்படுகிறார். இதற்கு அஜித்தும் சம்மதிக்க
இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
பாசக்கார அண்ணனாக
இருக்கும் அஜித் மறுபக்கம், கொல்கத்தாவில்
போதை மருத்து கடத்தல் கும்பலை அழித்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான
ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜித் கொலை செய்யும் போது ஸ்ருதிஹாசன்
பார்த்து விடுகிறார்.
கொலைகார
குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார்.
இதையறியும் அஜித், லட்சுமிமேனன் என்
தங்கை இல்லை என்று கூற, மேலும் தன்னுடைய
கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.
லட்சுமிமேனன்
அஜித்தின் தங்கை இல்லையென்றால், அப்போ லட்சுமி
மேனன் யார்? எதற்காக போதை
கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார்? என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகனாக
அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது.
முற்பகுதியில் இவருடைய
வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள
பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை
சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார்.
தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்
அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாசமிகு தங்கையாக
நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில்
நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக
நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும்
ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில்
மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம்
சேர்த்திருக்கிறது.
வீரம் படத்தில்
ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார்.
இடைவேளை காட்சியும் படத்தின் கிளைமாக்ஸ்
காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது. அஜித்திடம் திறமையாக
வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பதை
நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை
கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை
இயக்கியிருக்கிறார்.
அனிருத் இசையில்
பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா....’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது.
அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு
பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத்.
வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வேதாளம்’ மிரட்டல்.
Saturday, 26 September 2015
சூப்பர் ஸ்டாரின் கபாலி ரிலீஸ் தேதி
கபாலி ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள், வீடியோக்கள் தினசரி இணையத்தில் கசிய ஆரம்பித்திருப்பது இயக்குநருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பெரிய தர்மசங்கடத்தைத் தந்துள்ளது.
இனி இந்த மாதிரி ஸ்டில்களைப் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆளுக்கொரு ஆன்ட்ராய்ட் வைத்துக் கொண்டு சுற்றும் காலத்தில் இதெல்லாம் சாத்திமா தெரியவில்லை.
இந்த நிலையில் படத்தை எப்போது வெளியிடுவது என்பதில் ஒரு இறுதியான முடிவுக்கு வந்திருக்கிறாராம் தாணு.
ஆரம்பத்தில் இந்தப் படத்தை பொங்கல் வெளியீடு என்று கூறி வந்தனர். ஆனால் ஷெட்யூல்படி படம் வரும் ஜனவரியில்தான் முடிகிறது. போஸ்ட் புரொடக்ஷனுக்கு குறைந்தது 3 மாதங்களாவது தேவை.
எனவே பக்கா திட்டமிடலோடு படத்தை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் சித்திரைத் திருநாளில் வெளியிட்டுவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டில் வெளியான ரஜினி படங்கள் வசூலில் சக்கைப் போட்டிருக்கின்றன. அந்த சென்டிமென்டும் கூட, இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.
நன்றி என்வழி
Monday, 21 September 2015
போத்தீஸ் விளம்பரத்தில் கமல் ஹாசன்
முதன்முறையாக வர்த்தக விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
கமல். அதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள்
கேட்டும், கமல்
வர்த்தக விளம்பரங்களில் மட்டும் நடிப்பதை மறுத்துக்கொண்டே வந்தார். எந்த ஒரு விளம்பரங்களில்
கமல் இதுவரை நடித்ததில்லை, அதே
சமயம் விழிப்புணர்வு விளம்பரங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், முதன்முறையாக பிரபல்
ஜவுளிக் கடையான போத்தீஸ் விளம்பரம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் கமல். இதற்கான படப்பிடிப்பு வரும்
வாரம் நடைபெற இருக்கிறது.
இந்த விளம்பரப் படத்தை நடிகர் கிருஷ்ணா
இயக்கவிருக்கிறார். அதாவது '5 ஸ்டார்’,
'அறிந்தும்
அறியாமாலும்', 'யட்சன்' உள்ளிட்ட படங்களில்
நடித்த கிருஷ்ணா தான் இயக்க இருக்கிறார்.
Friday, 18 September 2015
ரகுமான் மற்றும் ரஜினிக்கு அச்சுறுத்தல் பிரகாஷ்ராஜ் ஆவேசம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க போகிறார் என்று வெளியான செய்தியை
அடுத்து இந்து முன்னனி மற்றும் தமிழக பா.ஜ.க ஆகிய இரண்டும் அதற்கு எதிர்ப்பு
தெரிவித்தன.
அதேபோல் முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் அறிவித்தார்.
இரண்டு மாபெரும் ஆளுமைகளுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கொந்தளிப்பபை ஏற்படுத்தின.
இந்நிலையில் இது பற்றி ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர் “ நாடு சகிப்புத்தன்மையற்ற நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார் ’அவர்களை நரகத்திற்கு போகட்டும்’ என கோபமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் “ இறைச்சிக்கு தடை விதித்தீர்கள், வயது வந்தவர்களுக்கான படங்களுக்கு தடை விதித்தீர்கள்...ஓட்டு போடும் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையா?...விரைவில் குமிழி வெடித்துவிடும்” என பொங்கியெழுந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
அதேபோல் முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் அறிவித்தார்.
இரண்டு மாபெரும் ஆளுமைகளுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கொந்தளிப்பபை ஏற்படுத்தின.
இந்நிலையில் இது பற்றி ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர் “ நாடு சகிப்புத்தன்மையற்ற நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார் ’அவர்களை நரகத்திற்கு போகட்டும்’ என கோபமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் “ இறைச்சிக்கு தடை விதித்தீர்கள், வயது வந்தவர்களுக்கான படங்களுக்கு தடை விதித்தீர்கள்...ஓட்டு போடும் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையா?...விரைவில் குமிழி வெடித்துவிடும்” என பொங்கியெழுந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
Wednesday, 12 August 2015
சிம்புவிற்கு 2016 முதல் யோகம் பிரபல ஜோதிடர்கள் கணிப்பு
பிரபல நடிகர் சிம்பு தற்போது பல சிக்கலில் இருக்கிறார், இதற்கு கரணம் என்ன? எப்போது அவருக்கு யோகமான வாழ்க்கை அமையும்? திருமணம் எப்போது? அவரது வாழ்கை முறை எப்படி இருக்கும்? என்று பிரபல ஜோதிடர் பாராதிதாசன் மணிகண்டன் என்பவர் கணித்து வெளியிட்டுள்ளார். அதன் விபரங்கள் பின் வருமாறு,
1. புதனுக்கு 1, 2, 5, 9, ல் கேது இருந்தால் காதல் உண்டாகும். வக்கிரம் பெற்ற புதனுக்கு 12 ல் கேது இருந்தாலும் காதல் உண்டாகும். இந்த சேர்க்கையில் புதன் மீது குரு அல்லது சுக்கிரன் 1, 5, 9, 3, 7, 11, 2, 12 பார்வை பார்க்க காதல் திருமணம் உண்டாகும். சந்திரன் கலை மற்றும் காதல் காரகன்.
2. ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1, 5, 9, 3, 7, 11, 2, 12 ல் சந்திரன் இருப்பின் காதல் ஏற்படும்.
3. பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9, 3, 7, 11, 2, 12 ல் சந்திரன் இருப்பின் காதல் ஏற்படும்.
கீழே இருப்பது நடிகர் சிலம்பரசன் ஜாதகன்,
இவரின் குரு இருப்பது விருச்சகத்தில், ஆண் ஜாதகத்தில் குரு இருக்கும் ராசியின் குணங்கள் ஜாதகர் பெறுவார். அதன் படி ஜாதகர் கால புருசனின் 8 இடமான விருச்சக ராசியின் குணங்களான முன் கோபம், மறைமுக விசங்களை அறிதல், வாதம் மற்றும் அமான்ஷ்ய விசயங்களில் ஈடுபாடு உண்டாகும்.குரு கேது சேர்க்கை இருப்பதால், சிலம்பரசன் பிற்காலத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீக பணிகள் செய்வார்.
இவருக்கு கோசாரத்தில் 2006ல் சிம்மத்தில் கேது திரிகோணத்தில் பிறப்பு புதன் (தனுசில்), நயன்தாரா உடன் காதல் உண்டானது.
புதன் - பூராடம் நான்காம் பாதம்
கேது - மூலம் 3 பாதம் (சுய சாரம்)
இவருக்கு புதன் மற்றும் கேது இருவரும் சேர்க்கை பெற்று தனுசு ராசியில் உள்ளனர்.
நாடிபடி குருவின் 2 பார்வை மற்றும் சுக்கிரன் 11 பார்வை கேது மேல் ஆனால் இவர்களின் தாக்கம் புதன் மீது இல்லை. காரணம் கேது இருப்பது மூலம் நட்சத்திரம் புதன் இருப்பது பூராடம் நட்சத்திரம். குருவின் மற்றும் துலாம் ராசிக்கு நகர்வை கேது வசீகரித்து கொள்கிறார். செவ்வாய் பார்வையும் புதன் மேல் உள்ளது. மேலும் இவரின் ஜாதகத்தில் சனி சுக்கிரன் பரிவர்த்தனை. இதனால் குருவுக்கு (ஜாதகருக்கு) சுக்கிரன் (இளம் பெண் ) மற்றும் சந்திரன் (வயது அதிகம் உள்ள பெண்) என்ற பெண் கிரகங்கள் சமந்தம் உண்டாகிறது. சனி சுக்கிரன் பரிவர்த்தனை தாமத திருமணம் தருகிறது.
பிறகு 2014ல் கோசாரத்தில் ஜெனன புதனுக்கு 9 ல், கோசார கேது சஞ்சரிக்கும் காலத்தில், ஹன்சிகா உடன் காதல் உண்டாது. இவருக்கு கோசார குரு சுக்கிரனுக்கு திரிகோணத்தில் வரும் காலம் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் திருமணம் நடைபெறும்.
ஏற்கனவே சொல்லியபடி, பிறப்பு ஜாதகத்தில் சனி செவ்வாய் தொடர்பு இருந்தால், தொழில் முடக்கம், எதிரிகளால் பிரச்னை, முன்னேறமின்மை இருக்கும். இவருக்கு ஜெனன காலத்தில் சனி செவ்வாய் சேர்க்கை (சுக்கிரன் சனி பரிவர்த்தனைக்கு பின்), பிறப்பு செவ்வாய்க்கு சனி திரிகோணத்தில் வரும் காலம் ஜாதகர் தொழில் எதிரிகள் மற்றும் முடக்கம் சந்திப்பார் என்ற கூற்றுப்படி, சிலம்பரசன் ஜாதகத்தில் சனி துலாமில் பிறப்பு செவ்வாய்க்கு 9 இடத்தில சனி இருக்கும் சமயம் தொழில் சங்கடங்கள், எதிரிகளால் பிரச்னைமற்றும் பல எதிர்ப்புகளை சம்பாதித்தார். தற்பொழுது சனி வக்கிற நிவர்த்தியாகி விருச்சகம் செல்வதால், இனி முன்னேற்றம் காண்பார்.
நன்றி பாராதிதாசன் மணிகண்டன்
Tuesday, 26 May 2015
தலைவா... துணிந்து DTH - ல் உங்கள் படத்தை வெளியிடுங்கள் – ஒரு ரசிகனின் கடிதம்.
அன்புள்ள தலைவனுக்கு(சூப்பர்ஸ்டார்
ரஜினிகாந்த்),
நாங்களும் “லிங்கா” திரைப்படம் குறித்த பிரச்சனை
தீர்ந்துவிடும் என்று காத்திருந்தோம் ஆனால் சில பணம் திண்ணி பருந்துகள்
வேண்டுமென்றே உங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் உங்களுக்கு
எதிராக செயல்படுகிறார்கள். இவர்கள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்று வெகு
விரைவிலேயே தெரிந்துவிடும் அதனால் நீங்களோ அல்லது நாங்களோ சிறிதும் கவலைப்படத்
தேவையில்லலை. அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்.
நீங்கள் கவலையே படாமல் அடுத்து “அட்டகத்தி”,”மெட்ராஸ்”
இயக்குனர் இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தை DTH ல் வெளியிடுங்கள்.
இதுவரையில் உங்களைத் திரையில் காணவேண்டி சராசரியாக அதிகபட்சமாக ரூபாய் 2௦௦௦ வரை
ஒரு குடும்பத்திற்கு செலவு செய்கிறோம். அதாவது முதல்நாள் டிக்கெட்டின் விலை மிகக்குறைந்தபட்சம்
ரூபாய்.250 என்ற அளவில் இருக்கிறது. நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கே
டிக்கெட்டின் விலை மட்டுமே ரூபாய் 1௦௦௦ வருகிறது. பெரும்பாலான திரையரங்கில் தண்ணீர்கூட
கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. திரையரங்கில் சாதாரணமாகவே இரண்டு மடங்கு அதிக விலை
கொடுத்துதான் தின்பண்டங்கள் விற்கிறார்கள். மேலும் நங்கள் வரும் வாகனத்திற்கு
பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையே அடிக்கிறார்கள். வாரநாட்களில் பகல்
நேரத்தில் படம் பார்க்க வேண்டும் என்றால் அலுவலகத்தில் லாஸ் ஆப் பே பிடித்தம்
செய்வார்கள், அதுவும் செலவுதான். இரவில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்ப ஆட்டோ
கிடைக்காது, கிடைத்தாலும் இரு மடங்கு வசூல் செய்வார்கள்.
மொத்தத்தில்
டிக்கெட் கட்டணம் 1௦௦௦ + தின்பண்டங்கள் + பார்க்கிங் +
போக்குவரத்து செலவு (பேருந்து/ ஆட்டோ/ கால் டேக்சி) + பெட்ரோல்/ டிசல் (குறைந்தபட்சம்
2 லிட்டர்) செலவு + வண்டித் தேய்மானம் + லாஸ் ஆப் பே (ஏற்படலாம்) + இதர செலவுகள்(ஏற்படலாம்).
இத்தனைக்கும் கணக்கு பார்த்தால் சாதாரணமாகவே நான்கு பேர் இருக்கும்
குடும்பத்திற்கே குறைந்தபட்சம் ரூபாய் 1500 மற்றும் அதிகபட்சமாக ரூபாய் 2000 செலவு
பிடிக்கும். அதுவே ஐந்து பேர் அல்லது அதற்கும்மேல் உள்ள குடும்பம் என்றால் ரூபாய் 3௦௦௦
செலவு ஆகுமே(நாங்கள் பாவம் அல்லவா!). மாதத்திற்கு ரூபாய் 15௦௦௦ முதல் 2௦௦௦0 வரை சம்பளம்
வாங்குபவர்கள் என்றால் இதற்கே ரூபாய் 3௦௦௦ கரைந்துவிடும். அதற்கும் கீழே சம்பளம்
வாங்கினார்கள் என்றால் என்றால் அவர்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். ரூபாய் 20000
மேல் சம்பளம் என்றால் சமாளித்துவிடுவார்கள் ஆனால் எல்லோருக்கும் அந்த குடுப்பினை
அமைவதில்லையே!. இவ்வளவு செலவு செய்யவேண்டுமா என்ற கேள்வி எழலாம்தான் தமிழ்நாட்டில்
வேறு பொழுதுபோக்கு அம்சம் என்ன இருக்கிறது அப்படியே இருந்தாலும் இதைவிட
அதிகமாகத்தான் செலவு ஆகிறதே!.
சரி விசயத்திற்கு வருவோம், ரூபாய் 1௦௦௦ கட்டணம் என்ற
முறையில் DTH ல் ஒளிபரப்பினால்கூட எங்களுக்கு ரூபாய் 500 முதல் 2௦௦௦ வரை
மிச்சமாகும். குடும்பத்தில் எத்தனைப்பேர் இருந்தாலும் பிரச்சினை இல்லை
சமாளித்துவிடலாம். அதேவேளையில் இரண்டவது முறை பார்க்கவேண்டும் என்று நினைத்தால்
ரூபாய் 500 என்ற கட்டணத்தில் ஒளிபரப்பலாம். மூன்றாவது முறை என்றால் ரூபாய் 200
என்ற ரீதியில் கட்டணம் வசூல் செய்துகொள்ளலாம். இதுபோன்று நாங்கள் திரையங்கில்
சென்று இரண்டு முறை, மூன்று முறை குடும்பத்துடன் படம் பார்க்க ரூபாய் 1௦௦௦௦ வரை
செலவு ஆகுமே!.
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமாக DTH சந்தாதாரர்கள்
இருக்கிறார்கள் இதில் மாதந்தோறும் தவறாமல் ரீசார்ஜ் செய்வோர் 3.5 கோடி முதல் 4 கோடி சந்தாதாரர்கள் என்று TRAI நிறுவனம் கூறுகிறது. இதில் அதிகபட்சமாக 15
லட்சம் சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தினால்கூட முதல் மூன்றே நாட்களில் ரூபாய் 200
முதல் 250 கோடி வசூல் ஆகும்.
தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் இடங்கள் என்று
பார்த்தால்
1.தமிழ்நாடு
2.ஆந்திரம்(ஆந்திரா, தெலுங்கானா)
3.கேரளம் மற்றும் கர்நாடகம்
4.வடமாநிலங்கள்
5.வெளிநாடுகள் (அங்கேகூட DTH ல் வெளியிடலாம்).
வேறு மாநிலங்களில் அல்லது நாடுகளில் அந்தந்த மொழிகளில்கூட
மொழிமாற்றம் செய்து DTH ல் வெளியிடலாம். தமிழ்மொழி படங்களுக்கு வேறு மொழி பேசும்
மக்களிடமும் ஒரு சந்தை உருவாக ஒரு வாய்ப்பு அமையும்.
ஒரு படத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 80 கோடி செலவு செய்து வெளியிட்டால்கூட முதல் முறை பார்வையாளர்களை சென்றடைந்தாலே
ரூபாய் 100 முதல் 120 கோடி வரையில் வசூல் ஆகும். DTH நிறுவனங்களே
விளம்பரபடுத்திவிடுவர்கள், விளம்பர செலவு மிச்சம்.
தியேட்டரில் வேலை செய்பவர்கள் சிறுக சிறுக வேறு வேலைகளுக்கு
மாறிவிடுவார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் இதுவரை சம்பாரித்தது போதும் அவர்கள்
காம்ப்ளெக்ஸ் கட்டிக்கொண்டுவிடுவார்கள். விநியோகஸ்தர்களும் இதுவரை சம்பாரித்து
சொத்து சேர்த்தது போதும். நாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை வரைமுறைகள் இல்லாமல்
தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விழுங்கியது போதும்.
எங்கள் வீட்டிலேயே உட்கார்ந்த இடத்திலேயே குறைந்த செலவில்
நாங்கள் விரும்பும் நொறுக்குத்தீணிகலோடு லாஸ் ஆப் பே இல்லாமல் போக்குவரத்து செலவு
இல்லாமல் பார்க்கிங் கட்டணம் இல்லாமல் பெட்ரோல் டிசல் செலவு இல்லாமல் இதையெல்லாம்விட
எத்தனைப்பேர் வேண்டுமானாலும் திரைப்படத்தைப் பார்க்கலாம். இதைவிட எங்களுக்கு என்ன
வேண்டும்?
நன்றி
ராஜேஸ் ராவ் rajeshrao180@gmail.com
Monday, 4 May 2015
“அட்டகத்தி” இயக்குனர் இயக்கத்தில் “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்த்!
சில நாட்களாகவே சூப்பர்ஸ்டார் ரஜினியின்
அடுத்தப் படத்தைப்பற்றி இணையம் மற்றும் செய்தித்தாள்களில் வதந்திகள் வந்த வண்ணம்
உள்ளன. இன்று அந்த செய்திகளை எல்லாம் வதந்திகள்தான் என்று சொல்லும் அளவிற்கு ஒரு
நம்பகமான செய்தி வந்திருக்கிறது.
பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஒரு
இன்ப அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை தனது “ட்விட்டர்” பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது “சூப்பர்ஸ்டார்” ரஜினிகாந்தின் அடுத்த படத்தை “அட்டகத்தி” மற்றும் “மெட்ராஸ்”
படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்க உள்ளார் மேலும் இந்த படத்தை பிரபல
தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைபுலி S தாணு தயாரிக்கிறார் என்று செய்தி
வெளியிடப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் ரஜினி தரப்பிலோ, தாணு தரப்பிலோ
அதிகாரப்பூர்வமாக பட அறிவிப்பு செய்தி வெளியிடப்படுகிறது.
ரஜினியின் மற்றொரு பரிமாணத்தை காட்டிய “தளபதி” படத்திற்குப்பிறகு அப்படி ஒரு
வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது.
Monday, 27 April 2015
விஜய் டிவி முகத்தில் சாணியை கரைத்து அடித்த சிவகார்த்திகேயன்!
இந்த வருடம் விஜய் டிவிக்கு ஜென்ம சனி போல சூப்பர் சிங்கர் ஜூனியர்
நிகழ்ச்சயில் தன் தலையில் தானே மண் அள்ளி அள்ளி போட்டுக்கொண்டது. இது போதாது என்று
இந்த முறை #VijayAwards பெயரில் மேலும் கறியை முகத்தில் பூசிக்கொண்டது
என்றால் மிகையாகது.
ஆரம்பமே முதலே காற்று வாங்கியது...
இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பம் முதலே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் இல்லாமலே
போய்க்கொண்டு இருந்தது. அதற்குகேற்றர்போல நிகழ்ச்சியும் நீண்ண்ண்ண்ண்டுகொண்டே
போனது. எல்லோருக்கும் மயக்கம் வராத குறைதான்.
சிவாஜி குடும்பம் வரவில்லை...
ஆண்டுதோறும் சிவாஜி குடும்பம்தான் யாராவது முக்கியகமாக ஒருவருக்கு “செவாலியே
சிவாஜி கணேசன் விருது” வழங்க வருவார்கள். இந்த ஆண்டு ஏனோ ஒருவரும் வந்தபாடில்லை.
கடுப்பில் போன இளையராஜா...
இந்த வருடம் “இசைஞானி இளையராஜா” விற்கு “செவாலியே சிவாஜி கணேசன் விருது” வழங்க அழைத்து
வந்தார்கள். ஆனால் அவரும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு பாதியிலேயே திரும்பிகூடப்
பார்க்காமல் போய்விட்டார். பார்வையாளர்களுக்கு என்ன நடக்கிறது தெரியவில்லை.
எரிச்சலின் உச்சம் டி.டி...
பொதுவாகவே நிறைய பேர் டி.டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் பல்லைக்கடித்துக்கொண்டுதான்
பார்ப்பார்கள். இந்த முறையும் அப்படித்தான் நடந்தது, இயக்குனர் K.S.ரவிக்குமார்
பொறுமை இழந்து விழா மேடையிலேயே குத்திக்காட்டிப் பேசினார். #ஏ_விஜய்_டிவி_நிர்வாகமே_டி.டியின்_சவுண்டை_குறையுங்கள்.
சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருது யாருக்கு?
சத்தியமாக விஜய் டிவி நிர்வாகதுக்கே தெரியவில்லை யாருக்கு தருவது என்று!. ஆம்
யாருக்குத் தந்தால் நமது டி.ஆர்.பி ரேட்டிங் உயரும் என்று பார்த்துதான் இந்த
விருதை தருவார்கள். ஆனால் சென்ற முறை #தலைவா படத்திற்கு நடிகர் விஜய்க்கு தந்தது.
இது பெரிய சர்ச்சைக்குரிய விசியகமாக மாறியது. “ ஒரு மாதத்திற்கு முன்பே விருது
தருகிறோம் வாருங்கள் “ என்று அழைத்ததாக விஜய் மேடையிலேயே சொல்லிவிட்டார்.
ரசிகர்களோ நாங்கள் வேலையில்லாமல்லா இணையத்திலும் குறுஞ்செய்தி மூலமாக
வாக்களித்தோம் என்று பொங்கினார்கள். இந்த முறைக்கு கமல் தனுஷ் தவிர பெரிய நடிகர்
என்று யாரும் வரவில்லை. யாருக்கு தருவார்கள் பாவம். #இரஜினி #விஜய் #அஜித் #சூர்யா
போன்ற நடிகருக்குத் தந்தால் நன்றாக இருக்கும் வருமானமும் வரும் என்று
நினைத்தார்கள் ஆனால் அவர்கள் ஆசையில் மண்!.
சாணியை கரைத்து அடித்த சிவகார்த்திகேயன்!
விஜய் டிவி சிவகார்த்திகேயனை எப்போதும் எங்கள் வீட்டு பிள்ளை என்று தலையில்
தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும். ஆனால் இந்த முறையோ “இந்த நிகழ்ச்சியோ அதிகாலை 2
மணிவரை போகும். நமக்கு குடிக்க தண்ணிக் கூடத் தரமாட்டாங்க, அடுத்த முறை வரும்போது
நாம எல்லாம் புளிசோறு தக்காளிசோறு கட்டிக்கொண்டு வந்தறலாம்” என்று விஜய் டிவியின்
முகத்தில் சாணியை கரைத்து அடித்துவிட்டு, துல்கர் சல்மானுக்கு விருது வழங்கிவிட்டு
பாதியிலேயே கிளம்பினார். #விஜய்_டிவிக்கு_இந்த_அவமானம்_தேவைதான். இரசிகர்களின்
மைண்டுவாய்ஸ்!.
விஜய் அவார்ட்ஸ் இல்ல பொய் அவார்ட்ஸ்!
இரசிகர்கள் இணையத்தில் விஜய் டிவியை அடித்து கிழித்து காயப்போட்டுவிட்டார்கள்.
அதில் முக்கியமானவை #விஜய்_அவார்ட்ஸ்_இல்ல_பொய்_அவார்ட்ஸ் முக்கியமாக #RIPVijayAwards
என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரென்ட் ஆனது. இதற்குமேல் இந்த நிகழ்ச்சியைப் பற்றி
பேச எங்களுக்கு விருப்பமும் இல்லை.
Tuesday, 20 January 2015
சிவகார்த்திகேயன் – ஒரு நாயகன் உருவாகிறான் ஊரார்களின் இதயமாகிறான்...
இந்த பாடல் வரிகள் தற்போதுள்ள சூழ்நிலையில் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. பெரும்பாலனவர்கள்
“இவனுக்கு வந்த நல்ல நேரத்த பாரேன்” என்று புலம்பிக்கொண்டு இருந்தாலும்,
சிவகார்த்திகேயன் தன் வேலைகளை சிறப்பாகச் செய்து நாளுக்குநாள் தமிழ் சினிமா
இரசிகர்களின் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துவிட்டார் என்றால் அது மிகையாகாது.
மெரினா – மனம் கொத்திப் பறவை
மெரினா – மனம் கொத்திப் பறவை இந்த இரண்டு படங்கள் வந்த புதிதில் நிச்சியமாக
சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு உயர்ந்து நிர்ப்பார் என்று மெரினா இயக்குனர்
பாண்டி ராஜ் மற்றும் மனம் கொத்திப் பறவை இயக்குனர் எழில் என இருவரும்
நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள், அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயனே கூட
நினைத்துப் பார்க்காத அந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.
“அதிர்ஷ்டம் அதான் வந்துட்டான்”
மேலே சொன்ன வார்த்தைகள் அவரைப் பற்றி சொல்வதுண்டு. இப்படி சொல்பவர்கள்
கண்டிப்பாக உழைக்காமல் பணம் சம்பாரிக்க வேண்டும் பேர்வழிகள்தான் மற்றும் இவரை
தவறாக எடை போட்டவர்கள்தான். சரி இவர்கள் இப்படியே புலம்பிக்கொண்டு இருக்கட்டும்
விடுங்கள்.
சர்வர் சுந்தரம்(நாகேஷ்) – எதிர்நீச்சல்(சிவகார்த்திகேயன்)
மெரினா மற்றும் மனம் கொத்திப் பறவை படங்கள் வரை நடிகர் சிவகார்த்திகேயன்
என்பவர் நகைச்சுவை நடிகராத்தான் எல்லோரும் பார்த்தார்கள். சர்வர் சுந்தரம்
படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்ததுபோல் எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன்
கதாநாயகனாக(இரண்டு படங்களில் கதாநாயகன் மற்றும் 3 படத்தில் இடைவேளை வரை
நகைச்சுவை,துணை நடிகர்) நடித்தார், மாபெரும்வெற்றியாக அமைந்தது.
3 மாபெரும்வெற்றி
எதிர்நீச்சல் படத்தைத் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் மான்
கராத்தே என தொடர்ந்து மூன்று மாபெரும்வெற்றிப் படங்கள். சினிமா வாழ்கையில் அடுத்த
கட்டத்தில் உயர்ந்து நிற்கிறார் சிவா.
காக்கிசட்டையில் அதிரடி
காக்கிசட்டை படத்தின் முன்னோட்டம் பார்த்தவர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு
அதிரடியில் கலக்கியிருக்கிறார். எதிர்மறையான விமர்சனங்கள் வர வாய்ப்புகள் இல்லை
என்றேத் தோன்றுகிறது.
தமிழ் சினிமாவில் இடம் பிடிக்க
தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில் நகைச்சுவை, அதிரடி, குடும்பம் என இந்த மூன்று
விசயங்களில் கவனம் செலுத்தினால் தாக்குபிடித்துவிடலாம். பொது பார்வையாளர்கள்
மற்றும் குழந்தைகளை கவர நகைச்சுவை இயல்பாகவே வருகிறது. அதிரடியிலும் நல்ல
முன்னேற்றம் தெரிகிறது மோசமில்லை. குடும்ப பார்வையாளர்களுக்கு பிடித்த நடிகராக
இருந்தால் சுமாரான படத்தைக்கூட “சூப்பர்ஹிட்” ஆக்கிவிடுவார்கள். ஆனால் இவர் பேசும்
இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை தரக்குறைவாக வசனம் பேசுவது என தன் தலையில் தானே
மண் அள்ளிப்போட்டுகொள்கிரரோ என்று தோன்றுகிறது. பெண் பார்வையாளர்களை கவர தவறினால்
தமிழ் சினிமாவில் தாக்குபிடிக்க முடியாது. நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த
யுத்தியை பயன்படுத்துவதால்தான் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத கூட்டம் அவர்
படத்திற்கு வருகிறது.
இதையெல்லாம் மனதில் வைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் நல்ல கதைகளை தேர்வு
செய்து, பார்ப்பவர்கள் முகம் சுளிக்காவண்ணம் நடித்தால் நடிகர் சிவகார்த்திகேயன்
அடுத்த பத்து வருடங்களுக்கு மிகப்பெரிய ஆளுமையாக வளர்ந்து நிர்ப்பார். இதைவிடுத்து
வெறும் நகைச்சுவை மற்றும் ஜனரஞ்சக படமாகவே நடித்தால் அடுத்த மூன்று வருடங்கள் கூட
தாக்குபிடிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
Monday, 12 January 2015
லிங்காவை நஷ்டப்படுத்திய முன்னணி நடிகர்
லிங்கா படப்பிரச்சினை தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக மாறிவிட்டது.
நாளுக்கு நாள் லிங்காவின் பிரச்சினை வேறு விதமாக அதிரடியாக மாறிக்கொண்டே
இருக்கிறது. தற்போது ஒரு முன்னணி நடிகர் பெயர் திடிரென்று அடிபடுகிறது.
போட்டிகள் இருந்தால்தான் எந்த ஒரு தொழிலுக்கும் நல்லது, அதுமட்டுமல்லாமல்
அதுதான் ஆரோக்கியமான போக்கு. ஆனால் பொறாமையும் சேர்ந்துகொண்டால் பாதிப்பு என்பது
சம்பந்தப்பட்ட இருவருக்கும்தான்.
கடந்த இரண்டு நாட்களாகவே டிவிட்டர் மற்றும் பேஸ்புக் என்று ஒரு செய்தி
அரசல்புரசலாக காட்டுதீபோல் பரவுகிறது. அதாவது சில மூத்த பத்திரிகையாளர்கள்
வாய்மொழித் தகவலாக லிங்கா விஷயத்தில் ஒரு முன்னணி நடிகரின் உள்குத்து உள்ளதாக
தெரிவித்தாலும். யாரும் வெளிப்படையாக பேசாமல் இருந்தனர்.
ஆனால் நேற்று குறிப்பிட்ட பத்திரிகையாளர் ஒருவர் தனது பேஸ்பூக் பதிவில் “லிங்கா
படம் நஷ்டம் ஆன விசயத்தில் ஒரு முன்னணி நடிகர் மூளையாக செயல் படுகிறார் என்றும்
போராட்டக்காரர்கள் உடன் முன்னணி நடிகருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தொலைபேசி
வாயிலாகவும், நேரடியாகவும் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியதாகவும் நம்பத்தகுந்த
வட்டாரங்கள் தெரிவிகின்றன” என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் “அவருக்கு நெருக்கமானவர்கள்தான் சில அமைப்பைச் சேர்ந்தவர்களை
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களம் இறங்கச்செய்துள்ளார்கள்” என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
இதில் எந்தஅளவிற்கு உண்மை இருக்கிறது என்று உடனடியாக கண்டுபிக்க முடியவில்லை.
நமது குழுவின் சார்பில் சில மூத்த பத்திரிகையாளர்களை அணுகி விசாரித்தோம் ஆனால்
பெரியஇடத்து விவகாரம் என்பதால் அவர்கள்
வெளிப்படையாக எதையும் கூற முன்வரவில்லை.
ரஜினிகாந்தின் புண்ணியத்தில் ஜப்பானில் காப்பற்றபட்ட நடிகை
அம்புலி 3D படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர்கள் அடுத்து ஜம்போ 3D
என்ற படத்தை இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டு முயற்சியில் தயாராகிவருகிறது.
இந்த படத்தில் அன்ஜெனா கீர்த்தி என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பெருன்பான்மையான படப்பிடிப்பு ஜப்பானில்தான் நடைபெற்றது. அப்போது
எதிர்பாராதவிதமாக நடிகை அன்ஜெனா கீர்த்தி வழித்தெரியாமல் போய்விட்டார்.
அதிர்ஷ்டவசமாக ஒரு கார் ஓட்டுனரிடம் தான் ஒரு தமிழ்படத்தின் படப்பிடிப்பிற்காக
ஜப்பான் வந்திருப்பதாகவும், ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தபோது வழிதவறிவிட்டதாகவும்,
கைபேசியை அறையிலேயே மறந்து வைத்துவிட்டதாகவும் உதவி கோரியுள்ளார்.
அந்த ஜப்பானிய கார் ஓட்டுனர் தமிழில் பேசி “தான் சூப்பர்ஸ்டார் ரசிகர் என்றும்
அவருக்காகவே தமிழ் கற்றதாகவும், உங்களுக்கு உதவுவதாகவும் கூறி சிரமப்பட்டு நடிகை
தங்கியிருந்த ஓட்டலின் விலாசத்தை கண்டுபிடித்து நடிகையை பாத்திரமாக விட்டுசென்றார்”
என்று தன் அனுபவத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழை வளர்க்க வேண்டும் என்று வெறும் கோஷம் மட்டும் போட்டுவிட்டு தன் பிள்ளைகளை
ஆங்கில வழியில் படிக்கவைக்கும் அரசியல்வாதிகளே தயவுசெய்து திருந்துங்கள். தமிழை
வைத்து அரசியல் பிழைப்பு வேண்டாம்.
Sunday, 11 January 2015
சிங்காரவேலன் கொடுத்ததே 75 லட்சம்தான் - ராக்லைன் வெங்கடேஷ்
ராக்லைன்
வெங்கடேஷ் கூறுகையில், "நாங்க படத்தை வித்தது எம்.ஜி.முறைப்படி. உண்மையா சட்டப்படி அவருக்கு
நஷ்டஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. சட்டப்படி ஒப்பந்தம் இருக்கு.
ஆனா இப்போ அவங்க திருப்பிக் கேக்குறாங்க.. அதுலேயும் சிங்காரவேலன் ‘எட்டு கோடி ரூபாய்க்கு திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவை வாங்கியிருக்கேன்'னு சொல்லியிருக்காரு. அதுல அவரோட பங்கு வெறும் ஒன்றே கால் கோடிதான். மீதியெல்லாம் தியேட்டர் அதிபர்கள் மற்றும் அவரோட நண்பர்கள் கொடுத்தது. அதைத்தான் வேந்தர் மூவிஸ்ல கொடுத்திருக்காரு.
ஆனா இப்போ அவங்க திருப்பிக் கேக்குறாங்க.. அதுலேயும் சிங்காரவேலன் ‘எட்டு கோடி ரூபாய்க்கு திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவை வாங்கியிருக்கேன்'னு சொல்லியிருக்காரு. அதுல அவரோட பங்கு வெறும் ஒன்றே கால் கோடிதான். மீதியெல்லாம் தியேட்டர் அதிபர்கள் மற்றும் அவரோட நண்பர்கள் கொடுத்தது. அதைத்தான் வேந்தர் மூவிஸ்ல கொடுத்திருக்காரு.
இன்னும் ஒரு விஷயம்.. சிங்காரவேலன் தனிப்பட்ட முறையில்
கொடுக்க வேண்டிய ஒன்றே கால் கோடி ரூபாய்ல 55 லட்சம்
ரூபாயை கடைசி வரைக்கும் அவர் தரவேயில்லை. இன்னும் பாக்கி வச்சிருக்கார். வெறும் 75
லட்சம் ரூபாய்தான் அவரோட முதலீடு. இதன்படி பார்த்தால்கூட நாங்க
அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. அவர் இதுக்கு மேலேயே
சம்பாதிச்சிட்டாரு..", என்றார்.
லிங்கா'படத்தை கொலை செய்தவர் சிங்காரவேலன் ராக்லைன் வெங்கடேஷ் கண்ணீர்
‘லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் சார்பில் சென்னையில் 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுற்றது.
உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன், 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷின் அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உடன் வேந்தர் மூவிஸ் சார்பில் சிவாவும் பங்கேற்றார்கள். அச்சந்திப்பில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசியது
"'லிங்கா' வெளியாகி 4வது நாள், 5வது நாள் வசூல் இல்லை நாங்கள் 8 கோடி கொடுத்தோம் என்று எல்லாம் பேசி இருக்கிறார்கள். படத்தின் விளம்பரத்திற்காக நாங்களே மதுரை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு விளம்பரம் தேடியதாக சொல்லியிருக்கிறார். டிசம்பர் 12ம் தேதி வெளியிட்டது தப்பு என்றும் பேசியிருக்கிறார்.
நான் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு லட்ச லட்சமாய் செலவு பண்ணி, இறுதியில் 10 கோடி கட்டச் சொன்னார்கள். அதையும் கட்டியிருக்கிறேன். இந்த விளம்பரம் எனக்கு தேவையா? நான் பண்ணியிருக்கிறது ரஜினி சார் படம். அந்த மாதிரியான படத்திற்கு இந்த மாதிரியான விளம்பரங்கள் பண்ண வேண்டும் என்று எனக்கு எப்படி தோன்றும். சிங்காரவேலன் பேசுவது சரியில்லை. இப்படி பேசாதீங்க.
டிசம்பர் 12ம் தேதி படம் வெளியாகும் என்பது நான் 11ம் தேதி சொல்லவில்லை. படப்பிடிப்பிற்கு பூஜை போட்ட அன்றே, ரஜினி சார் பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம். ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா என்று எல்லாம் கேட்கிறார். நாங்கள் முன்னரே சொல்லிவிட்டோம் டிசம்பர் 12ம் தேதி வெளியீடு என்று, இவ்வளவு தெரிந்திருந்தும் பின்னே ஏன் படத்தை வாங்கினீர்கள்?. உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வந்து படத்தை வாங்கியே ஆகவேண்டும் என்று மிரட்டினார்களா, கட்டாயப்படுத்தினார்களா? யாரும் பண்ணவில்லையே.
'பாபா', 'குசேலன்' உள்ளிட்ட படங்களில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு அழைத்து ரஜினி சாரால் என்ன முடியுமோ அதை கொடுத்து சந்தோஷப்படுத்தினார். படம் வெளியாகி 4, 5 வாரங்கள் கழித்து 10 பேரிடம் உட்கார்ந்து பேசி வந்திருந்தார்கள் என்றால் இழப்பீடு குறித்து மனிதாபிமான அடிப்படையில் கொடுத்திருப்போம்.
அதை பண்ணாமல், தினமும் பேசிப் பேசி படத்தை சாவடித்துவிட்டார் சிங்காரவேலன். ரஜினி சாரோட பெயரையும் உபயோகித்து அவரையும் அசிங்கப்படுத்துகிறார்கள். ஒரு ஷோ கூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்கிறார்கள். இதை எப்படி நம்ப முடியும். சிங்காரவேலன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். தினமும் தன்னை டி.வியில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார். 'லிங்கா' படத்தையும் ரஜினி சார் பற்றியும் பேசினால் தான் மீடியாவில் இருந்து நாலு பேர் வருகிறார்கள், அவருடைய பேச்சைக் கேட்கிறார்கள். அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்று முடிவு எடுத்து சினிமா தொழிலை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்திற்காக நிறையப் பேர் அதிகமாக உழைத்திருக்கிறார்கள். ரஜினி சார் தூங்காமல் கண் விழித்து நடித்து கொடுத்தார். மழை வந்தால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம், தப்பாகி விடும் என்று நடித்துக் கொடுத்தார். வீட்டிற்கு கூட போகவில்லை. அந்த மாதிரி கஷ்டப்பட்டு பண்ணிய படத்தை கொலை செய்துவிட்டார் சிங்காரவேலன். நிஜத் தயாரிப்பாளருக்கு தான் அந்த வலி என்ன என்று தெரியும்.
மறுபடியும் இந்த மாதிரியான வாய்ப்பு ஒன்று எனக்கு கிடைக்குமா?. இந்த மாதிரி ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார் என்று நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 4 வாரம் பொறுத்திருக்க என்ன ஆனது உங்களுக்கு. ரஜினி சார் மாதிரி நல்ல குணம் என்னிடம் இல்லை என்றாலும், அவரிடம் இருந்து சில நல்ல குணங்களை நான் கற்றுக் கொண்டேன். அவரை மாதிரி நல்ல மனதோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
எங்களிடம் வந்து பேசியிருந்தால், சந்தோஷப்படுற மாதிரி பண்ணியிருப்போம். நான், இயக்குநர், ரஜினி சார் எல்லாரும் ஃபீல் பண்றது என்னவென்றால் இப்போது தான் படம் போச்சே. 'லிங்கா'வை கொலை செய்துவிட்டார்கள். எதற்காக இப்படி பண்ணினார்கள் என்று தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் எனக்கு போன் பண்ணி "தயவு செய்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். எந்த ஒரு விநியோகஸ்தருக்கும் பணம் கொடுத்து திரையுலகை பாழாக்கி விடாதீர்கள். நாளை மற்றொரு படத்திற்கும் இதே போல செய்வார்கள். இது தொடர்கதையாகி விடும்" என்று சொல்லுகிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். 220 கோடி கொள்ளையடித்து விட்டு போய்விட்டேன் என்று சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன். 45 கோடி செலவு செய்து 220 கோடி சம்பாதித்து விட்டார்கள் என்னிடம் கணக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். திரையுலகில் சிங்காரவேலன் சாருக்கு யார் இஷ்டமோ அவர்களில் ஒரு 10 பேரை கூப்பிட்டு அவர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் கணக்கைக் கொடுங்கள். என்னையும் கூப்பிடுங்கள் நானும் வருகிறேன்.
கணக்கு வழக்கைப் பார்த்து எல்லாம் சரிபார்த்து முடித்தவுடன், ஒரு வேளை உண்மையாக இருந்தால் அந்த 10 பேர் என்ன சொல்கிறார்களோ அதை அந்த இடத்தில் நான் கேட்கிறேன். சிங்காரவேலன் பேசிப் பேசி மீடியாவை, மக்களையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லுவது சரி, நீங்கள் கொடுக்க வேண்டும் என்றால் நான் அந்த இடத்திலேயே கொடுத்துவிடுகிறேன். அது பொய் என்றால் நான் ஒண்ணும் கொடுக்க வேண்டாம். நான் பேசியது தவறு. கணக்கும் தவறு, மன்னித்து விடுங்கள் என்று சொல்லட்டும். அது போதும் எனக்கு " என்றார்.
Subscribe to:
Posts (Atom)