Sunday, 30 November 2014

வாழ்வில் வெற்றி பெற இந்த பழக்கங்கள் தேவை

(Source hollinden)

சாதனையாளர்கள், சாதாரணமானவர்கள் இடையே சிறு வித்யாசம்தான் இருக்கிறது. கீழே வருபவற்றை கடைபிடித்தால் நீங்களும் சாதனையாளர்தான்.
1.       சூரியன்னுமுன் எழுங்கள். விடியலுக்குமுன் எழுந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். உங்கள் செயல்களும் சிறப்பாக இருக்கும். நேர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் அதிகரிக்கும்.
2.       தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி நமது உடலை மட்டும் பலபடுத்துவது அல்ல நமது மனதையும் பலபடுத்தும். இதனால் மன அளவிலும் இளமையாக உணருவீர்கள்.
3.       சமமான வாழ்கை. குடும்பம் தொழில்/வேலை இரண்டுக்கும் சரிபாதியாக உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். நமது வாழ்க்கைக்கு இரண்டுமே முக்கியம்.
4.       வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் வையுங்கள். யாருடைய கட்டுப்பாட்டிலும் நீங்கள் இருக்காதீர்கள். இல்லையென்றால் வாழ்நாளில் அதிக நேரத்தை மற்றவர்களுக்காக வாழவேண்டிவரும் பிறகு உங்கள் லட்சியம், ஆசை எல்லாம் கேள்விக்குறியாக போய்விடும்.
5.       கசப்பான அனுபவங்களை மறந்துவிடுங்கள். நமது இந்தியா போன்ற நாடுகளில் இனிப்பான பழைய அனுபவத்தைவிட கசப்பான அனுபவம்தான் அதிகம், அதையே நினைத்துக்கொண்டு இருந்தால் எதிர்காலம் சிறப்பாக அமையாது.
6.       உங்கள் நாளை திட்டமிடுங்கள். திட்டமிடாத வாழ்கை குப்பைக்குச் சமம். அதனால் இந்த நாளில் இதெல்லாம் செய்யவேண்டும் என்று தொடக்கத்தில் திட்டமிட்டு செயல்பட ஆரம்பியுங்கள்.
7.       உங்கள் வேலையை முடித்துவிடுங்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை அல்லது நீங்களே செய்யவேண்டிய வேலையை செய்யுங்கள். சின்னச் சின்ன செயல்கள்தான் நம்மை முன்னோக்கிச் செல்ல தூண்டுகோலாக அமையும்.
8.       உங்களைத் தயார்படுத்துங்கள். முக்கியத்துவம் இல்லாத விசயத்தில் உங்களை ஈடுபடுத்திக் நேரத்தை வீணடிக்காமல் உங்கள் லட்சியங்களுக்கு உங்களை மேருகேத்துங்கள். புதியவைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
9.       உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். எந்த செயலுக்கும் முன்னும் பின்னும் உங்களை கேள்வி கேளுங்கள், இது சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும்.
10.   உங்கள் அனுபவங்களை மற்றவர்களிடம் பகிரவும். அனுபவங்களை பகிரும்போது உங்களுக்கே உங்கள் மீது மரியாதை வரும், உங்களை நீங்களே விரும்ப ஆரம்பித்துவிடுவீர்கள்.
11.   காலத்தை மதியுங்கள். நமது வாழ்கை மிகவும் குறுகியது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் வீணடித்த நேரம் திரும்பாது என்பதை நினைவில் வைத்து உங்கள் செயல்களை முடியுங்கள். காலத்தை மதிக்காதவனுக்கு இங்கு யாரும் மதிப்புத் தரமாட்டார்கள்.

நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்று சாதனைகளைப் புரிய OnlineArasan-னின் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment