உங்கள் இராசிக்கு குரு 12ஆம் இடத்தில் அமரப்போகிறார், “இடமது
பன்னிரெண்டில் இயல்பாக குருவும் வந்தால் கடமையில் கவனம் தேவை, உடமையாய் சொத்தும்
சேரும், உடல் நலம் அச்சுறுத்தும், தடம்புரளாமல் வாழத் தைரியம் கைகொடுக்கும்” என்று
ஜோதிடம் சொல்கிறது.
உச்சம்பெற்ற குருவின் பார்வை பதியும் யோகமான ஸ்தானங்களின்
நற்பலன்கள் கிடைக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். சுப செலவுகள்
அதிகரிக்கும்.
பன்னிரெண்டாம் இடத்தில் இருந்து ஆறாம் வீட்டை பார்த்தால்
எங்கும், எதிலும் வெற்றிதான், வழக்குகளில் வெற்றி கிட்டும்.
உங்கள் வியாபாரம் அமோகமாக நடக்கும், திறமை மிக்கவர்கள்
உங்களுக்கு பின்னணியில் இருந்து உதவிக்கரம் நீட்டுவார். எதிரிகள் நண்பர்களாக
மாறுவார்கள். பெற்றோர்கள் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில்
உங்களுக்கு பங்கு கிடைப்பதில் தாமதம் வரும்.
தாயின் ஆதரவு பெருகும், தாய்வழி தனலாபம் கிடைக்கும். கல்வி
முன்னேற்றம் கிடைக்கும். வீடு, மனை, சுபகாரியம், நற்செயல்கள் தடையின்றி நடக்கும்.
உங்கள் வாரிசுகளின் தேவை உங்களால் பூர்த்தியாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள்
வரலாம்.
கடமையில் கொஞ்சம் கவனம் தேவை, வேலை, தொழிலில் மேலதிகாரிகளை
அனுசரித்து போவது நல்லது. எதிர்ப்புகள் விலகும். புதிய வாகன வாய்புகள் உண்டு.
வியாபாரம் சூடுபிடிக்கும், லாபம் கூடும், தொழிலில் செலவுகள்
அதிகரிக்கும். பங்குதாரர்களிளிடம் நிதானம் தேவை.
No comments:
Post a Comment