Saturday, 22 November 2014

அரசாங்கம் வேலை யாருக்கு


நம் குழந்தைகளை அரசாங்கப்பள்ளயில் சேர்க்க யோசிப்போம், அரசுப்பேருந்தில் பயணம் செய்ய யோசிப்போம், ஞாயவிலைக் கடையில் இலவசமாக தரும் பொங்கல் துணிகளை நாம் உடுத்தவேமாட்டோம் ஆனால் அரசாங்க வேளை என்றால் மட்டும் வாயை பிளந்துகொண்டு முன்டியடிபோம். உங்களின் கிரக நிலையின்படி யாருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்று தொகுத்துள்ளோம் தெரிந்து கொள்ளுங்கள் முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

சூரியன் நல்ல நிலையில் 10ல் அமரவேண்டும்.அதை உத்தியோககாரகன் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று பார்த்தால் அரசாங்கம் வேலை உறுதி.

 குரு 10 ல்ஆட்சி உச்சம் பெற்றால் வங்கி ,இண்சூரன்ஸ், போன்றவற்றில் ஜாதகர் வேலை பார்ப்பார்.கல்வித்துறை உயர்அதிகாரி.

10ல் செவ்வாய் இருந்தால் மின்சாரத்துறை அதிகாரி, இராணுவம்,போலீஸ், காவல் சம்மந்தமான வேலை உறுதி

10ல் சனி இருந்ததால் காவல் சம்மந்தமான துறையில் உயர் பதவி.அடிமை நிலை, தாழ்ந்நிலை வேலைகள்.அராசாங்க வக்கீல் போன்ற வேலைகள்.

சந்திரன் 10ல் இருந்தால் மக்கள் தொடர்பு, அயல் நாட்டு தூதுவர் கப்பல் படையில் அதிகாரி.

கேது10ல் இருந்தால் அராசாங்க மருத்துவர்,இந்து அறநிலையத்துறை அதிகாரி.

புதன் 10ல் இருந்தால் கணக்கு தணிக்கத்துறை அதிகாரி,உளவுதுறை அதிகாரி.

இராகு 10ல் இருந்தால் வருவாய்துறை,பத்திரப்பதிவு அதிகாரி.
சுக்கிரன் 10ல் இருந்தால் கைத்தறித் துறை அதிகாரி.


No comments:

Post a Comment