வருண் மணியன் மற்றும் தோழிகளுடன் ஸ்பெஷல் ஜெட் விமானத்தில் பறந்து போய் தாஜ் மகாலின் அழகை ரசித்துள்ளார் த்ரிஷா.
சமீபத்தில் ஆக்ரா சென்ற திரிஷா அங்கு யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள காதலின் சின்னமான தாஜ்மகாலை கண்டுகளித்தார். இதற்காக தனியாக ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து தனது தோழிகளுடன் சென்று சுற்றிப் பார்த்துள்ளார்.
இந்த ஏற்பாடுகளைச் செய்தவர் அவரது வருங்கால கணவர் என செய்திகளில் அடிபட்டு, பின்னர் த்ரிஷாவால் மறுக்கப்பட்ட வருண் மணியன்தான். இந்தப் படங்களை த்ரிஷாவே அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தாஜ்மகால் அருகில் நின்று தான் எடுத்துக் கொண்ட போட்டோக்களைப் பகிர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment