1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ.
இவருக்கு தமிழில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜயை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும்
என்பது விருப்பம்.
ஆனால் விஜய் அதற்கு பிடிகொடுக்கவில்லை.
கால்ஷீட் இல்லை.. அது இல்லை.. இது இல்லை என்று சில காரணங்களை சொல்லி அவரை
தவிர்த்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் கமல் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக்கொண்டார் விஜய்.
குஷ்பூவும் அந்த பார்ட்டிக்கு வந்திருந்தார்.
அப்போது விஜயை டான்ஸ் ஆடும்படி
அழைத்தார்.
சிறிது நேரம் தயங்கிய விஜய் அவருடன்
சேர்ந்து நடனமாடினர். அப்போது விஜயை ஆஹா..ஓஹோ என்று சில பிட்டுகளை போட்டு
புகழ்ந்துவிட்டு அப்படியே கால்ஷீட் மேட்டரையும் காதில் போட்டார். உடனே விஜயும் சரி
என்று தலையாட்டிவிட்டாராம். போக்கிரி, வில்லு போன்ற கமர்சியல் கதையாக எடுக்க
திட்டம். அப்படியே காங்கிரஸ்கு வந்துருங்க என்று கூப்பிடாமல் இருந்தால் சரி.
No comments:
Post a Comment