ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில்
காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள
இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் வடக்கு
அல்லது தெற்கு மண்டலங்களில் ஏதேனும் ஒரு மண்டலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும். பணி: டிரெய்னி கேபின் க்ரூ வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 238
காலியிடங்கள்: 238
தெற்கு மண்டலம்(ஆண்கள்): 10
தெற்கு மண்டலம்(பெண்கள்): 30
வடக்கு மண்டலம்
(ஆண்கள்): 40
வடக்கு மண்டலம் (பெண்கள்):158
தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்டில் 3 வருட பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் ஹாஸ்பிட்டலிட்டி மேனேஜ்மெண்ட் பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: 31,500/- விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 9, 2014 மொழி
அறிவு: இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பலமை பெற்றிருக்க வேண்டும். (அயல்நாட்டு
மொழி தெரிந்திருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்)
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏதாவதொரு மண்டலத்தில்
முதல்கட்ட நடத்தப்படும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே முதன்மை
எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 600
விண்ணப்பிக்கும் முறை: ஏர் இந்தியா இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment