வெறும் சப்பாத்தியே எப்படி சாப்பிடிறது அதுலேயே
வித்தியாசமா செய்யலாமே நினைச்சா இந்த புதினா சப்பாத்தி முயற்சி செய்யுங்கள். சப்பாத்தி
செய்யும்போது அதில் ஏதாவது காய்கறி துருவல்கள் சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைங்கள்
விரும்பி சாப்பிடுவார்கள். அதுபோல் மருத்துவ குணம்கொண்ட சுவையான உடலுக்கு
பொலிவையும், சுறுசுறுப்பைத்தரும்
உடலில் உள்ள உள்உறுப்புகளுக்கு நன்மை தரும் புதினாவையும் சேர்த்து செய்து கொடுத்துப்
பாருங்களேன்.
செய்யத் தேவையான பொருட்கள்
புதினா - ஒரு கட்டு
கோதுமை மாவு - ஒரு கப்
சோளமாவு - ஒரு பங்கு
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோதுமை மாவு - ஒரு கப்
சோளமாவு - ஒரு பங்கு
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா சப்பாத்தி செய்முறை
புதினாவை சுத்தம் செய்து நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இஞ்சி,
பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொண்டு மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம் ஆகியவற்றை
சேர்த்து பிசைந்து 2மணிநேரம்
ஊறவைத்துவிடுங்கள். பிறகு சிறு சிறு
உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்த்து சுட்டெடுத்து உங்களின் குழந்தைகள் மற்றும்
அன்பானவர்களுக்கு பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment