விண்டோஸ் 8
USB பூட்டபிள்
பெண்ட்ரைவினை உருவாக்க
கணினியில் இயங்குதளத்தை நிறுவ பல்வேறு வழிகள் இருக்கின்றன, அவற்றில் பெரும்பான்மையாக பயன்படுத்தபடுவது CD/DVD , USB ,
ETHERNET, மூலமாக
நிறுவுவதே ஆகும். இவற்றில் நாம் தற்போது அதிகம் பயன்படுத்துவது CD/DVD என்றாலும் கூட, அவற்றை மிஞ்சும் வகையில் தற்போது USB மூலம் இயங்குதளத்தை நிறுவுதல் என்பது அதிகமாகி வருகிறது. USB மூலம் நிறுவ வேண்டுமெனில் நாம் நம்முடைய USBயினை பூட்டபிள் USB யாக மாற்ற வேண்டும். இதற்கு இரண்டு வழி
உள்ளது ஒன்று ISO
பைலாக உள்ள இயங்குதளத்தை
நாம் பூட்டபிள் பைலாக USB
யில் மாற்ற
வேண்டும். இல்லையெனில் ஏற்கனவே பூட்டபிள் பைலாக சீடியில் உள்ள இயங்குதளத்தை
பெண்ட்ரைவிற்கு காப்பி செய்ய வேண்டும் நாம் சாதாரணமாக காப்பி செய்தால்
இயங்குதளத்தை நிறுவ முயற்ச்சிக்கும் போது கோளாறு செய்தி ஏற்படும். இதனால் நமக்கு
ஏமாற்றமே மிஞ்சும். இதனை சரி செய்ய ஒருவழி உள்ளது சாதாரணமாக காப்பி செய்வதற்கு
பதிலாக
Unified Extensible Firmware Interface (UEFI) என்னும் முறைமையை பயன்படுத்தி இயங்குதளத்தை
பெண்ட்ரைவிற்கு காப்பி செய்வதன் மூலம் நம்மால் எளிமையாக USB மூலம் இயங்குதளத்தை கணினியில் எளிமையாக நிறுவ
முடியும்.
சரி இப்போது
Unified Extensible Firmware Interface (UEFI) முறைமையை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் Command
Prompt யை ஒப்பன்
செய்யவும். இதற்கு Windows
key + R பொத்தான்களை ஒரு
சேர அழுத்தி தோன்று சாளரப்பெட்டியில் cmd என்று உள்ளிட்டு Ok
செய்யவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் diskpart என உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தவும்.
அப்போது தோன்றும் செய்தியை
படித்துவிட்டு Yes என்று உள்ளிடவும்.
பின் அடுத்ததாக தோன்றும் விண்டோவில் list disk என்று உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தவும்.
அப்போது உங்கள் கணினியில் உள்ள வன்தட்டு மற்றும் பெண்ட்ரைவ் வரிசைப்படுத்தபடும்.
பிறகு நீங்கள்
காப்பி செய்ய வேண்டிய Disk
எண்னினை
குறித்து வைத்துக்கொள்ளவும். என்னுடைய கணினியில் பெண்ட்ரைவானது, Disk 1. என உள்ளது.
பின்பு select disk 1 என்று உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தவும். அடுத்ததாக பின் வரும் கட்டளைகளை வரிசையாக
உள்ளிடவும்.
clean
create partition primary
format fs=fat32 quick label=TC
active
assign
list volume
exit
மேலே குறிப்பிட்ட கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளிடவும். இதில்format fs=fat32 quick
label=TC என்ற கட்டளையில்
TC
- க்கு பதில்
உங்கள் விருப்ப பெயரை பெண்ட்ரைவிற்கு இட்டு கொள்ள முடியும்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது வழக்கம் போல சீடி மற்றும் டிவிடியில் உள்ள
இயங்குதளத்தை பெண்ட்ரைவிற்கு காப்பி செய்தால் போதும்.
அவ்வளவு தான் வேலை முடிந்தது காப்பி செய்து முடித்தவுடன். நீங்கள்
பெண்ட்ரைவினை இயங்குதளம் நிறுவுதலுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இதே
முறையயை பின்பற்றி ISO பைலை கன்வெர்ட் செய்து Usb யில் ஏற்றிக்கொள்ள முடியும். இதற்கு 7zip உதவுகிறது
பிறகு நீங்கள் காப்பி செய்ய வேண்டிய Disk எண்னினை குறித்து வைத்துக்கொள்ளவும். என்னுடைய கணினியில் பெண்ட்ரைவானது, Disk 1. என உள்ளது.
பின்பு select disk 1 என்று உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தவும். அடுத்ததாக பின் வரும் கட்டளைகளை வரிசையாக உள்ளிடவும்.
No comments:
Post a Comment