(Image Courtesy jobsamerica)
“வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாரிக்கலாம்
வாங்க”
என்ன பாஸ் இந்த வார்த்தையைக் கேட்டு கேட்டு உங்கள் காதுகள்
புளித்துவிட்டதா? சரி கவலையே வேண்டாம் நாங்கள் உண்மையிலேயே நீங்கள் உங்கள்
வீட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்து எப்படி சம்பாரிக்கலாம் என்று நாங்கள்
சொல்கிறோம். ஆனால் கண்டிப்பாக சில திறமைகள் வேண்டும்.
இணையத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது, ஆனால் சரியான கதவுகளை நாம்
தட்டுகிரோமா என்பதில்தான் நமது வெற்றி இருக்கிறது. சரி இணையத்தில் எப்படி பதில்
யோசனைகளை கூறுவதின் மூலமாக பணம் சம்பாரிக்க முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
நம்மிடம் இயற்கையாகவே சில திறமைகள் இருக்கும் ஆனால் நாம்தான் அதை பெரிதாக
கண்டுபிடித்து பயன்படுத்திக்கொள்வதில்லை, இதனால் நஷ்டம் நமக்குத்தான். சரி
உங்களிடம் யாராவது “உன்னிடம் யார் பேசுவார்கள் என்ன கேட்டாலும் அதற்கு ஒரு பதிலை
வைத்திருபாய்” என்று சொல்வார்களா?, உங்களுக்கு தெரிந்தவர்கள் யோசனை(Idea) கேட்க
தேடும் நபர் நீங்களா? இந்த இரண்டு கேள்விகளில் ஒரு கேள்விக்கு ஆம் என்று உங்கள்
பதில் இருந்தால் உங்கள் முதுகை நீங்களே தட்டிகொடுங்கள் ஏனென்றால் நீங்கள் இந்த
வேலைக்கு தகுதியானவர்! சந்தேகமேயில்லை உங்களை நம்புங்கள்.
சிறப்பு தகுதிகள் என்ன வேண்டும்?
1.
புதிய தொழில்நுட்பதைப்(New Technology) பற்றி
நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும்.
2.
தற்போதைய நிலவரங்களைப்(Trending) பற்றி நல்ல
புரிதல் இருக்கவேண்டும்.
3.
வித்தியாசமான முறையில்
சிந்திக்கத்தெரிந்திருக்கவேண்டும்.
4.
கேட்கும் கேள்விகளுக்கு நாகரீகமாக பதில்
கூறவேண்டும்.
5.
முக்கியகமாக ஆங்கில மொழியில் நல்ல இலக்கணம்,
பிழையின்றி எழுதுதுதல் வேண்டும்.
6.
முத்தாய்ப்பாக நேர்மறை எண்ணம் மற்றும்
விடாமுயற்சி.
மேற்சொன்னவை சில விஷயங்கள் கொஞ்சம் பின்தங்கிய நிலையில் நீங்கள் இருப்பதாக
நினைத்தால் கொஞ்சம்கூட யோசிக்காமல் அதற்க்குண்டான பயிற்சியில் இறங்கி
ஆரம்பியுங்கள்.
சரி இனிமேல் எந்தெந்த இணையதளங்கள் உங்கள் பதிலுக்கும், யோசனைகளுக்கும் பணம் தர
காத்திருக்கிறது என்று பார்ப்போம்.
இந்த தளத்திற்கு சென்று உங்களைப் பற்றிய விபரங்களை பதிந்துகொள்ளுங்கள். பின்பு
யோசனை தேவையான நபருக்கு நீங்கள் கூறலாம் நீங்கள் விருப்படும் நேரத்தில் அதற்கு
விலையை நிர்ணயம் செய்யலாம்.
இந்த தளத்தின் மூலம் தேவையான நபருக்கு நீங்கள் மின்அஞ்சல்(Email) மற்றும்
தொலைபேசியில் யோசனைகளை கூறலாம், இதற்கு நீங்களே விலையும் நிர்ணயம் செய்யலாம்.
இந்த தளத்தின் மூலமாக உங்கள் அனுபவங்கள், திறன்களை மற்றவர்களுடன்
பரிமாறிக்கொள்ளலாம் இதற்கு பணமும் கிடைக்கும் நீங்களும் நிறைய விஷயங்களைப்பற்றி
தெரிந்துகொள்ளாலாம்.
இந்த தளமானது facebook, twitter, போன்று செயல்படுகிறது. இங்கும் உங்கள் திறனை
மற்றவர்களுடன் பகிர்ந்து அதற்கு பணமும் பெறலாம் புதிய நட்பும் கிடைக்கும்.
முதலில் நீங்கள் Expert Contributor ஆக விண்ணப்பம் செய்து ஒரு எழுத்துத்
தேர்வை நிறைவு செய்யவேண்டும். உங்களை ஏற்றுக்கொண்டால் உங்கள் யோசனைகள், சிறிய
வேலைகளுக்கு பணமும் கிடைக்கும் முக்கியகமாக உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுத்து திறமை
வேண்டும்.
சமூக வலைதளமாக செயல்படும் இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய வல்லுனர்கள்,
மாணவர்கள் , என்று நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்களும் உங்களை பதிவு
செய்துகொண்டு உங்கள் கருத்துகளை தேவைபடுபவருக்கு கூறலாம்.
இந்த தளமானது நிறைய கேள்விகள் அடங்கியது, நீங்கள் உங்கள் துறையை
தேர்ந்தெடுத்து பதில் கூறலாம். அதற்கு பரிசுகளும் உண்டு.
நீங்கள் வியாபார துறையில் நிபுணர்கள் என்றால் உங்களுக்கான தளம் இது. வியாபார
அனுபவம், நுணுக்கம், கருத்துகூட பகிரலாம்.
இந்த தளமானது ஒரு தர நிறுவனம், முதலில் நீங்கள் உங்களை பதிவு செய்துகொண்டு
உங்கள் திறமையை தொகுத்து கூறவேண்டும் பின்பு அவர்கள் உங்களுக்கு ஏற்ற துறையில்
தங்களில் தர உறுதி குழுவின் உறுப்பினராக சேர்த்துக்கொள்வார்கள்.
மிகச்சிறந்த தளங்களில் இதுவும் ஒன்று, வாடிக்கையாளர்கள் உங்கள் பதிலை
ஏற்றுக்கொண்டால் குறைந்தபட்சம் $5 முதல் அதிகமாக $25 வரை கிடைக்கும். இந்த
தளத்தின் மூலமாக நிறையவே சம்பாரிக்கலாம்.
முயற்சி... பயிற்சி... வெற்றி... இதுதான் தாரகமந்திரம் முயற்சி செய்து
பயிற்சியின் துணைகொண்டு வெற்றி பெறுங்கள், OnlineArasan சார்பாக வாழ்த்துக்கள்.
குறிப்பு:
இந்த மேற்சொன்ன தளங்களில் இருந்து நீங்கள் அடையும் லாபம்
மற்றும் நஷ்டம் ஆகியவற்றிற்கு OnlineArasan குழு எந்த விதத்திலும் பொறுப்பேர்க்காது.
வாசகர்கள் விவேகத்துடன் செயல்ப்படுவது நல்லது.
No comments:
Post a Comment