பனிரெண்டாம் வகுப்பு முடிந்து பொறியியல் சேரும் மாணவர்கள்
நான்கில் மூன்று சதவிதம் பேர் இந்த கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பைத் தேர்வு
செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் வேலைவாய்ப்பு உடனடியாகவும் கிடைக்கிறது. ஆனால்
யாருக்கு உடனே கிடைக்கும் என்பதில்தான் சங்கதியே இருக்கிறது.
BSc Computer Science, BCA, MCA, BE.IT, BE.Computer
Science போன்ற படிப்புகளை படித்தாலே போதும் கணினி நிறுவனங்கள் நம்மை வேலைக்கு
சேர்த்துக்கொண்டு ஆயிரக்கணக்கான ரூபாய்யை சம்பளமாக கொட்டுவார்கள் என்று பகல் கனவு
காணாதீர்கள், அது பெரும்பாலும் காணல்நீர்தான்.
மேற்கண்ட படிப்புகளை நீங்கள் எந்த கல்லூரியில்
படிக்கிறீர்கள்? எப்படி படித்தீர்கள்? என்பது மிகவும் முக்கியம். நிதர்சன
உலகிற்க்கு வந்து உங்கள் கண்ணைத் திறந்து பாருங்கள். உங்கள் அருகிலேயே 85% மேல் மதிப்பெண் எடுத்தவர்கூட சரியான வேலை கிடைக்காமல் அலைந்துகொண்டு
இருப்பார். அதேசமயம் 5 பாடங்களில் தேர்ச்சி பெறாதவர் கணினி நிறுவனத்தில் வேலை
கிடைத்து ஒய்யாரமாக சுற்றிக்கொண்டு இருப்பார்.
இந்த முரண்பாடுகள் எப்படி உருவாகிறது? வெறும் தேர்வில்
தேர்ச்சி பெற்றால் போதும் என்று மாங்கு மாங்கென்று படித்து மதிப்பெண்
பெற்றுவிட்டால் மட்டும் போதாது. நமக்கு உண்மையில் தரமாகவும் விரைவாகவும்
நிரல்களை(Programs) எழுதத் தெரியவேண்டும். இல்லையென்றால் அதிக மதிப்பெண்
பெற்றுவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் வீட்டிலேயே படுத்து உறங்கலாம். வேலை கணினி
நிறுவனத்தில் கிடைக்க வாய்ப்பே இல்லை, எச்சரிக்கை தேவை. நிரல்களை எழுதும் திறமையை
வளர்த்துக்கொண்டு முயற்சித்தால் வேலை கிடைக்கும் இல்லையேல் சிக்கல்தான். உங்கள்
எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும்.
நீங்கள் படிக்கும்போதே C, C++, Java, C#, PHP, Pythan,
Android போன்றவற்றை தேர்ந்தெடுத்து முழு ஈடுபாடு செலுத்தி கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறகு அதற்கு தகுந்தற்போல வேலை கிடைக்கும் நிறுவனங்களை தொடர்புகொண்டு முயற்சி
செய்யலாம். மிக விரைவில் வேலை கிடைக்க வாய்புகள் இருக்கிறது. முக்கியமாக
படிக்கும்போதே இதை செய்யவேண்டும் இல்லையேல் படிப்பு முடிந்து மீண்டும் இதைப்பற்றி
படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் பணம் ஒதுக்க வேண்டும்.
இன்று இணையம் எல்லோர் கைகளிளும் தவழ்கிறது ஆனால்
உருப்படியாக பயன்படுத்துகிறோமா என்றால் நிச்சியமாக இல்லை. இணையம் வழியாகவே நீங்கள்
கற்றுகொள்ளலாம். வறிக்கு வறி சொல்லிக்கொடுக்கும் இணையதளங்கள் எராளமாக இருக்கிறது.
கணினித்துறையில் கணினியில் திறைமைசாலி, புத்திசாலிகளுக்கு மட்டும்தான் வேலை
படிப்பாளிகளுக்கு கணினி நிறுவனத்தில் வேலையில்லை மனதில் வைத்துக்கொண்டால் நீங்கள்
கணினித்துறையில் உங்கள் வெற்றிக்கொடி பறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த பதிவின் தொடர்ச்சிகள்...
ஹார்ட்வேர் நெட்வொர்க்கிங் (Hardware
Networking)
சாப்ட்வேர் டெஸ்டிங் (Software
Testing)
http://onlinearasan.blogspot.com/2015/04/computer-science-software-testing.html
சாப்ட்வேர் டெவலப்பர் (Software
Developer)
டெக் சபோர்ட் (Tech Support)
டேட்டாபேஸ் அட்மின் (Database
Admin)
இந்த பதிவுகளை +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மற்றும்
பெற்றோருக்கு பகிருங்கள்.
நன்றி
G.ராஜேஸ் ராவ் MCA.
Sir na +2 biology group yaduthu padichan next computer sains yaducalamnu erukan ana yanaku atha pathi avalava thariyathu atha pathi koingam detiyala soluinga sar
ReplyDeleteMore jobs information s please
DeleteSir வணக்கம் என் மகள் +2 வில் கம்ப்யூட்டர் சயின்ஸில் 80% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மேல்படிப்பில் எதை தேர்வு செய்தால் வேலைவாய்ப்பு அதிகம்? மேலும் MCA போன்ற படிப்புகள் படித்தால் அரசு வேலைவாய்ப்பு குறைவு என்பது உண்மையா? Kindly reply me sir
ReplyDeleteஎனது மகன் +2 மார்க் 326 கம்யூட்டர்சயின்ஸ்.என்ன படிக்கலாம்?கேமராவில் ஆர்வமாக உள்ளான். viscom படிக்க விரும்புகிறான். அதில் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும்? நன்றியுடன்......
ReplyDeleteSir computer science group படிச்சால் வேலைகள் கிடைக்குமா?. Programming சம்பந்தப்பட்ட வேலைகள் தவிர்த்து வேறு வேலைகள் கிடைக்குமா ? Please reply me back (plz plz plz)
ReplyDeletePlease give me answer for my question
ReplyDelete