வார
ராசிபலன்: 7-11-2014 முதல் 13-11-2014 வரை
மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு உலவுவதால் புதியவர்களின்
தொடர்பால் நலம் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால்
அனுகூலம் உண்டாகும். பயணம் பயன்படும். குரு 4-ல் அமர்ந்து 8,
10, 12-ஆம்
இடங்களையும் அஷ்டமச் சனியையும் பார்ப்பதால் சங்கடங்கள் குறையும். செய்து வரும்
தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் செலவுகள் குறையும். 7-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் இருப்பதால்
கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் இருந்து வரும். விட்டுக் கொடுத்துப் பழகுவது
நல்லது. வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நல்லவர்கள்
உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும்.
சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். பொருளாதார நிலையில் அளவோடு வளர்ச்சி
காணலாம். கூட்டாளிகளால் அதிகம் அனுகூலமிராது. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய
வேண்டிவரும்.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 9, 10, 12,
13.
திசைகள்:
தென்மேற்கு. வடமேற்கு..
எண்கள்: 2, 4, 9.
ரிஷபம்: கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது
சிறப்பாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் இப்போது நிறைவேறும். வியாபாரிகளுக்கு
லாபம் கூடும். தரகர்கள், கமிஷன்
ஏஜண்டுகள் ஆகியோருக்கு வருவாய் அதிகரிக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக
இல்லாததால் பொருளாதார நிலையில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது.
குடும்ப நலனில் அக்கறை தேவை. கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது.
கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். இயந்திரப்பணியாளர்களும்
விளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர்களும்
பாதுகாப்புடன் செயல்படவும். எரிபொருள், மின்சாரம், கூரிய ஆயுதம், ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும்.
பாதுகாப்புடன் செயல்படவும். எரிபொருள், மின்சாரம், கூரிய ஆயுதம், ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 9, 10, 12,
13.
திசைகள்: கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
திசைகள்: கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
எண்கள்: 1, 5, 7.
மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும்,
5-ல்
சுக்கிரனும் 6-ல்
சனியும், 10-ல் கேதுவும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும்.
குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பண
நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மக்களால் மன
மகிழ்ச்சி உண்டாகும். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். கலைத்துறைகளைச்
சேர்ந்தவர்களுக்குப் புகழும் மதிப்பும் உயரும். புதிய வாய்ப்புக்கள் தேடிவரும்.
ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். அலைச்சல் வீண்போகாது. வீண் செலவுகள்
குறையவே செய்யும். ஸ்பெகுலேஷன்ல் கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். வாரப்
பின்பகுதியில் விருந்து, உபசாரங்களில்
ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தாரால் அனுகூலம் ஏற்படும். ஜலப்பொருட்கள் லாபம்
தரும். கடல் வாணிபம் செய்வோர் ஆதாயம் கூடப் பெறுவார்கள். இனிமையான பேச்சால்
மற்றவர்களைக் கவருவீர்கள். சிந்தனையில் தெளிவு பிறக்கும். எழுத்தாளர்களுக்கும்
பத்திரிகையாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 10, 12, 13.
திசைகள்:
வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
எண்கள்: 3, 5, 6, 7,
8.
கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய.
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது
சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும்
உயரும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்
பயன்படும். கற்பனை வளம் கூடும். புதிய நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும்.
சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.
வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். கலைஞர்கள் செழிப்புப் பெறுவார்கள்.
மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும். மக்களால் சிறுசிறு
பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது.
நண்பர்கள், உறவினர்களால்
அனுகூலம் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. நிர்வாகம், அரசியல் போன்ற துறைகளைச்
சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 9, 13.
திசைகள்:
தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு, தெற்கு.
எண்கள்: 4, 5, 6, 9.
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும்
உலவுவதால் அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பு
பயன்படும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச்
சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது குறிக்கோள்
நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக
இல்லாததால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் முழுக்கவனம்
தேவை. நண்பர்கள், உறவினர்களால்
பிரச்னைகள் சூழும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம்
தேவை. எதிரிகள், போட்டியாளர்கள், பொறாமைக்காரர்களால் சங்கடங்கள்
ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத்
தேவை. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 9, 10, 12 (முற்பகல்).
திசைகள்:
தென்கிழக்கு, கிழக்கு,.
எண்கள்: 1, 6, 9.
கன்னி: உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும்,
3-ல்
சனியும், 11-ல் குருவும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில்
சுப காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் திருப்தி தரும். பல வழிகளில் ஆதாயம்
கிடைத்துவரும். நண்பர்கள், உறவினர்கள்
ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.
பேச்சில் இனிமையும் திறமையும் கூடும். வசீகரச் சக்தி அதிகரிக்கும். முயற்சி
வீண்போகாது. தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை
நிலவிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். பொன்
நிறப்பொருட்கள் லாபம் தரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வாரப்பின்பகுதியில்
முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். கடல் வாணிபம் லாபம் தரும். திரவப்பொருட்களால்
ஆதாயம் கிடைக்கும். ராகு, கேது, செவ்வாய் ஆகியோரது சஞ்சாரம்
சிறப்பாக இல்லாததால் அலைச்சல் கூடும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு
பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்ட
தேதிகள் : நவம்பர் 9, 10, 12,
13.
திசைகள்:
வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
எண்கள்: 3, 5, 6, 8.
துலாம்: சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய.
உங்கள் ஜன்ம ராசியில்
சுக்கிரனும் 3-ல்
செவ்வாயும் 6-ல்
கேதுவும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கலைஞானம் பளிச்சிடும்.
பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின்
சேர்க்கையோ, அவற்றால்
ஆதாயமோ கிடைக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும்
வெற்றி கிட்டும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள்.
இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், கட்டடப்பொருட்கள், செந்நிறப்பொருட்கள் ஆகியவை லாபம்
தரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால்
சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வாரப்பின்பகுதியில் புனிதமான காரியங்களில்
ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழிலில்
அபிவிருத்தி காணலாம். பண வரவு சற்று அதிகரிக்கும். முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 10, 12, 13.
திசைகள்:
தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
எண்கள்: 6, 7, 9.
விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும்,
11-ல்
ராகுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்கள் குறையும். பண
நடமாட்டம் கூடும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள். தெய்வப்
பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத்தொடர்பு ஆக்கம் தரும்.
பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால்
ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், கலைஞர்கள் ஆகியோர் தங்கள் நிலை
உயரப் பெறுவார்கள். இதர கிரகநிலைகள் சிறப்பாக இல்லாததால் வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம்.
பேச்சில் நிதானம் தேவை. அரசியல், நிர்வாகம், வியாபாரம், கணிதம் போன்ற துறைகளைச்
சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவை.
இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள்
ஏற்படும். என்றாலும் ஜன்ம ராசியைக் குரு பார்ப்பதால் உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 9, 13.
திசைகள்:
வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு..
எண்கள்: 3, 4, 6.
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும்,
11-ல்
சூரியனும்,புதனும்
சுக்கிரனும் உலவுவதால் வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். புதியவர்களது தொடர்பு
பயன்படும். அரசியல், நிர்வாகம்
போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு
லாபம் கூடும் நேரமிது. வியாபார அபிவிருத்தி திட்டங்களும் நிறைவேறும். கணவன் மனைவி
உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். கலைத்துறை ஆக்கம் தரும்.
மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம்
உண்டாகும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். குடும்பத்தை விட்டுச்
சிலர் வெளியூர், வெளிநாடு
செல்ல வேண்டிவரும். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். தாய் நலனில்
கவனம் செலுத்த வேண்டிவரும். ஜன்ம ராசியில் செவ்வாயும் 4-ல் கேதுவும்,
12-ல்
சனியும் இருப்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.
வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 9, 10, 12 (முற்பகல்).
திசைகள்:
தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு..
எண்கள்: 1, 4, 5, 6.
மகரம்: உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும்
7-ல்
குருவும் 10-ல்
சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரும் 11-ல் சனியும் உலவுவதால்
வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். சுகம் கூடும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பால் நலம் உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது. தெய்வப் பணிகள் நிறைவேறும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். 12-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் உண்டாகும். இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.
வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். சுகம் கூடும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பால் நலம் உண்டாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும் நேரமிது. தெய்வப் பணிகள் நிறைவேறும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சிறக்கும். 12-ல் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு பிரச்னைகள் உண்டாகும். இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 9, 10, 12,
13.
திசைகள்:
வடகிழக்கு, வடமேற்கு, வடக்கு, மேற்கு,தென்கிழக்கு.
எண்கள்: 1, 3, 5, 6,
7, 8..
கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும்,
10-ல்
சனியும், 11-ல் செவ்வாயும் உலவுவது விசேடமாகும். முக்கியமான காரியங்கள் இப்போது
நிறைவேறும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின்
சேர்க்கையோ, அவற்றால்
ஆதாயமோ கிடைத்துவரும். நண்பர்கள் நலம் புரிவார்கள். மக்களால் அளவோடு அனுகூலம்
உண்டாகும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச்
சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும்.
விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும்.
சூரியன், குரு, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக
இல்லாததால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்கள்
பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பிற மொழி, மத, இனக்காரர்களிடம் அதிகம்
நெருக்கம் வேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்ப நலனில்
அக்கறை செலுத்தவும்.
அதிர்ஷ்டத்தேதிகள்: நவம்பர் 9, 10, 12,
13.
திசைகள்:
வடக்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
எண்கள்: 5, 6, 8, 9.
மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய.
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும்,
8-ல்
புதனும் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.
முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக
இருப்பார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பண வரவு கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள்
லாபம் தரும். புத்திசாலித்தனமும் செயல்திறமையும் வெளிப்படும். எடுத்த காரியங்களில்
வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும். கலைத்துறையினருக்கு
வரவேற்பு கூடும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச்
சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள்.
ஜலப்பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் ஆதாயம் கொண்டுவரும். ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள், விஞ்ஞானிகள், பொருள் நடமாட்டமுள்ள இனங்களில்
ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தந்தை
நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட
தேதிகள்: நவம்பர் 9, 10, 12,
13.
திசைகள்:
வடகிழக்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு..
எண்கள்: 3, 5, 6, 9.
No comments:
Post a Comment