Friday, 21 November 2014

வார ராசி பலன்கள் 20/11/14 - 26/11/14


மேஷ ராசி
தொலைதூரத் தொடர்பு மூலம் அனுகூலம் உண்டாகும். புதியவர்களது நட்பு கிடைக்கும். அதனால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கும் கலைத்துறையினருக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்ப நலம் சீராகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மக்கள் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. 22-ம் தேதி முதல் மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேர வழிபிறக்கும். எதிரிகள் பலவீனமாவார்கள். சட்டம், காவல், இராணுவத் துறையினர் சாதனைகள் செய்வார்கள்.

ரிஷப ராசி 
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பிறருக்கு உதவி புரிய முன்வருவீர்கள். எதிர்ப்புக்கள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். நல்ல நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போகவும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. வேகம் கூடாது. நிதானம் தேவை. 22-ம் தேதி முதல் சகோதர நலம் சீர்பெறும். சுபச் செலவுகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்டவற்றில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. மக்கள் நலனில் கவனம் தேவை.

மிதுன ராசி
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 6-ல் சூரியன், புதன் ஆகியோரும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் ஈடுபட்டுப் பயன் பெறுவீர்கள். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும்.அதனால் அனுகூலமும் உண்டாகும்.
எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 22-ம் தேதி முதல் ஆரோக்கியம் பாதிக்கும்.  கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.

கடக ராசி 
மன உற்சாகம் பெருகும். எதிர்ப்புக்கள் விலகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். கலைத்துறையினர் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 4-ல் சனி இருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். நல்லவர்களது தொடர்பு நலம் தரும். அரசாங்கத்தாரால் அளவோடு நலம் உண்டாகும்.

சிம்ம ராசி 
வெற்றி வாய்ப்புக்கள் கூடும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்கள் சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும்.
புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி இருந்துவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்களது திறமை பளிச்சிடும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டுகள், வழக்குகளிலும் வெற்றிகாணலாம். இயந்திரப்பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை உதயமாகும். சொத்துக்கள் சேரும்.

கன்னி ராசி 
உடன்பிறந்தவர்களால் பரஸ்பரம் அனுகூலம் உண்டாகும் . முயற்சி வீண்போகாது. தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு லாபம் தரும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும்.
கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பொன் நிறப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வீண்வம்பு வேண்டாம். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

துலாம் ராசி 
எதிர்ப்புக்கள் விலகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வருவீர்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.

விருச்சிக ராசி 
வார ஆரம்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். அதன்பிறகு அழகு அம்சம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது நிலை உயரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள்,வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
பண நடமாட்டம் கூடும். கடன் தொல்லை குறையும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். 22-ஆம் தேதி முதல் வீர, தீர, பராக்கிரமம் கூடும். செயற்கரிய காரியங்களையும் கூட சுலபமாக நிறைவேற்றுவீர்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் சாதகமான போக்கு தென்படும்.

தனுசு ராசி 
பொருளாதார நிலை உயரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். வார நடுப்பகுதியில் சந்திரன் பன்னிரெண்டாம் இடத்திற்கு மாறி, சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோருடன் கூடுவதால் உடல்நலம் பாதிக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. கண் உபத்திரவம் உண்டாகும். வியாபாரிகள் பண விஷயத்தில் விழிப்புடன் செயல்படவும். மாணவர்கள் படிப்பில் முழு அக்கறை செலுத்தவும். எக்காரியத்திலும் அவசரம் கூடாது. நிதானம் மிகவும் தேவை. 22-ம் தேதி முதல் உடன்பிறந்தவர்களால் அதிக நன்மை ஏற்படும். தர்ம சிந்தனை உண்டாகும்.

மகர ராசி 
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். வியாபாரம் பெருகும்.
தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். வாரக் கடைசியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபட்டால் வெற்றி வாய்ப்புக்கள் கூடவே செய்யும்.

கும்ப ராசி 
தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். காரியத்தில் வெற்றி கிட்டும். அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
தந்தையால் அனுகூலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் சேரும். 22-ம் தேதி முதல்  தொழிலில் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. அக்கம்பக்கம் உள்ளவர்களால் தொல்லைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

மீன ராசி
எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். மன அமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண்விவகாரங்கள் வேண்டாம். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். இயந்திரப்பணியாளர்களுக்கு சுபிட்சம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். 22-ம் தேதி முதல் செல்வாக்கும் மதிப்பும் உயருவதுடன் பொருளாதார நிலையிலும் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.


No comments:

Post a Comment