நீங்கள் செக்ஸ் அடிமையா
இந்த உலகில் அடிமைகள் பல விதம். அதிலொரு பிரிவு செக்ஸ் அடிமை. உலக மக்கள் தொகையில் 72 சதவிகி
தத்தினர் செக்ஸ் அடிமைகள் என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல். அதில் நீங்களும் ஒருவரா?
செக்ஸ் அடிமைத்
தனத்தை எப்படிக் கண்டு பிடிப்பது, அதிலிருந்து வெளியே வருவது எப்படி? இனிவரும் தகவல்கள்
உங்களுக்காக....
உங்களுடைய செக்ஸ்
நடவடிக்கைகள் சாதாரண மானவையாக இல்லை என உணர்கிறீர்கள். ஆனாலும் அது செக்ஸ்
அடிமைத்தனமா என்பதில் சந்தேகமா? கீழ்க்கண்ட கேள்விகளை உங்களுக்கு
நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
1. செக்ஸ் தொடர்பான
புத்தகங்கள், நாவல்கள், போன்றவற்றை அடிக்கடி வாங்கிப் படிப்பவரா?
2. பகல் கனவு, அதிலும் சதா செக்ஸ்
பற்றிய கனவே காண்பவரா நீங்கள்?
3. உங்களது அசாதாரண
செக்ஸ் நடவடிக்கைகள் உங்கள் குடும்பத்தினர், நெருங்கிய தோழிகள்
போன்றவர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறதா?
4. செக்ஸ் பற்றிப்
பேசுவதில் அதிகக் கிளர்ச்சியடைபவரா?
5. சாதாரணத்
தலைவலியாகட்டும், தலையே
போகிற பெரிய பிரச்சினையாகட்டும், அதற்கான உடனடி வடிகால் உங்களுக்கு
செக்ஸா?
6. மாமூலான மற்ற
வேலைகளைச் செய்ய விடாமல் தடுக்கும் அளவுக்கு உங்களது செக்ஸ் ஆர்வம் விஸ்வரூபம்
எடுக்கிறதா?
7. அளவுக்கதிக செக்ஸ்
ஆர்வத்திலிருந்து விடுபட நீங்கள் ஏதேனும் முயற்சி மேற்கொண்டு, அது
தோல்வியடைந்திருக்கிறதா?
மேற்சொன்ன
கேள்விகளில் ஒன்றுக்கு உங்களது பதில் ஆமாம் என்றிருந்தாலும் நீங்கள் செக்ஸ் அடிமை
என்பதில் சந்தேகமே இல்லை.
செக்ஸ் அடிமைப்
பெண்களிடம் எப்படிப் பட்ட அறிகுறிகள் காணப்படும்?
எதிலும் ஒரு நிதானம்
இருக்காது. குடும்பம், வேலை, குழந்தைகள், நட்பு என
எல்லாவற்றிலும் விட்டேத்தியான ஒட்டுதலுடன் இருப்பார்கள். பொழுதுபோக்கு, கலை என மிகப்பிடித்த
பல விஷயங்களிலிருந்து விலகியே இருப்பார்கள்.
அடிக்கடி படபடப்பு, சோர்வு, மன உளைச்சல், டென்ஷன், பொறுமையின்மை போன்றவை
ஏற்படும்.
செக்ஸ் அடிமையாகக்
காரணம் என்ன?
சிறு வயதில் பாலியல்
பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படும் பெண்களே பெரும்பாலும் இப்படி ஆகிறார்கள்
என்கிறது ஒரு ஆராய்ச்சித் தகவல். அப்படி ஏற்படுகிற அனுபவத்தை உடனடியாக வெளியே
சொல்லி, குடும்பத்தாரால்
அரவணைத்து, ஊக்கப்
படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிற பெண்கள் சில நாட்களில் சகஜமாகி விடுகிறார்கள்.
மற்றவரிடம் சொல்ல பயந்து, அதைத்
தனக் குள்ளேயே ரகசியமாகப் பாதுகாக்கிற பெண்கள், பின்னாளில் அதீத
செக்ஸ் ஆர்வமுள்ளவர்களாக மாறு கிறார்கள் என்கிறது அந்த ஆராய்ச்சி. முள்ளை முள்ளால்
எடுக்கிற டெக்னிக் மாதிரிதான் இதுவும்.
அதீத செக்ஸ்
ஆர்வமுள்ள பெண்கள் அதற்கு வடிகாலாகத் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் சுயஇன்பம்.
ஆபாசப் படங்களைப் பார்ப்பது, புகைப் படங்களை ரசிப்பது என
ஆண்கள் நாடும் விஷயங்கள் இவர்களை ஈர்ப்பதில்லை. 60 சதவிகிதப்
பெண்களுக்கு வாரத்துக்கு இரண்டு முதல் நான்கு முறை சுய இன்பம் காண்கிற பழக்கம்
இருப்பதாகவும் மேற் சொன்ன ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆபத்தில்லாத, செலவில்லாத வடிகால்
இது என்றாலும், இது
அளவை மிஞ்சும் போது வேறு விதங்களில் தன் விளைவுகளைக் காட்டுகிறது.
தீர்வுகள்
போதை, குடி மாதிரியான எல்லா
அடிமைத் தனங்களுக்கும் அடிப்படை மனசு. எனவே முதலில் சிகிச்சை தர வேண்டியது
மனதுக்கு. செக்ஸ் ஆர்வம் உங்களைக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதாக உணர்கிறீர்களா? மனநல மருத்துவரை
அணுகுங்கள். அவர் சொல்கிற மனப் பயிற்சிகள் உங்களை மாற்றும். யோகா, தியானம் போன்றவை
கட்டாயம் பலன் தரும்.
கடவுள் நம்பிக்கை
உள்ளவரானால், ஆன்மீக
விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்துங்கள்.
மனசு கொஞ்சம் மாறுகிற
வரை ஆண்-பெண் சந்திப்புகள் அதிகம் இருக்கிற இடங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.
இன்டர்நெட்
உபயோகிக்கிற, பிரவுஸ்
செய்கிற பழக்கமிருந்தால், தற்காலிகமாக
நிறுத்துங்கள்.
உடற்பயிற்சி
செய்யுங்கள். ஜாகிங் இப்பிரச்சினைக்கான மிக அருமையான பயிற்சி என்கிறார்கள்
அனுபவஸ்தர்கள்.
செக்ஸ் ஆர்வம்
தலைதூக்கும் போதும், சுய
இன்பம் செய்ய நினைக்கிற போதும் சட்டென மனத்தை உங்களுக்குப் பிடித்த வேறு
விஷயத்தில் திருப்புங்கள். சிகரெட் பிடிப்பதை
நிறுத்த வேண்டும் என உண்மையிலேயே நினைப் பவர்களுக்கு அந்முடிவெடுக்க ஒரு நிமிடம்
போதும். ஆனால் அதில் உறுதியில்லாதவர்கள்தான் பலமுறை அப்பழக்கத்தை விட்டவர்களாக
இருப்பார்கள். அது மாதிரிதான் அதீத செக்ஸ் ஆர்வமும். முடிவில் உறுதியிருந்தால்
இப்பழக்கத்திலிருந்து வெளியே வருவது சுலபம். முடிந்தவரை உங்களை பிஸியாக
வைத்திருங்கள். மனசுக்கு வேலையில்லாமல் போகிற போதுதான் இப்படிப்பட்ட விஷயங்களைப்
பற்றி சிந்திக்கிறது.
சுற்றுலா தளங்களைப் பற்றிய பதிவுகளுக்கு
உதவிகரமான மருத்துவ பதிவுகளுக்கு
For more helpful medical related posts, please click this
link
எண்கணித முறைப்படி உங்கள் குணநலன் பதிவுகளுக்கு
சினிமா நட்ச்சத்திர நடிகைகள் புகைப்படங்கள் பதிவுகளுக்கு
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 – 2017 வரை பதிவுகளுக்கு
Sex பாலியல் பதிவுகளுக்கு
No comments:
Post a Comment