இந்த நீர்விழ்ச்சி தேனி
மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கிறது. பெரியகுளதிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கே செல்ல போதிய பேருந்து வசதி இல்லை. ஒரே ஒரு
நகரப் பேருந்து மட்டுமே இருக்கிறது.
எங்கள் பயணம் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் மதியம் 2 மணிக்குத் தொடங்கியது.
அன்று ஞாயிறு விடுமுறை தினமே பேருந்தில் மூன்று பேர் மட்டுமே, ஓட்டுனர், நடத்துனர்
சேர்த்து 5 பேர் மட்டுமே பேருந்தில் பயணம் செய்தோம். எங்களுக்குப் பயணச்சீட்டு
தரும்போதே “ரெண்டு பேத்துக்கு ஒரு பஸ்” என்று முனுமுனுத்தப்படியே கடந்துசென்றார்
நடத்துனர். ரூபாய் 7 பயணக்கட்டணம். பெரியகுளத்தில் இருந்து மதுரை நெடுஞ்சாலையில்
2வது கி.மீ தொலைவில் பேருந்து இடதுப்பக்கம் திரும்பித்தன் பயணத்தைத் தொடங்கியதும்
இயற்கையும் நம்மை சூழ, பயணம் இனிமையாக இருந்தது. சாலையில் பெரிதாக வாகன
நடமாட்டங்கள் இல்லை.
கொடைக்கானல் மலை அடிவாரம் நெருங்க நெருங்க பச்சை பசேலென்று பார்க்கவே ரம்யமாக
இருந்ததது. கொடைக்கானல் மலையில் மழை பெய்யும் காட்சி, அட இயற்கையின் அழகே தனிதான்.
பேருந்தில் இருந்து இறங்கி நுழைவாயில் அடைந்தோம் அங்கே ஒரு நபருக்கு ரூபாய் 10
கட்டணமாக வாங்கினார்கள். மதுபானம் உள்ளே அனுமதி இல்லை, அதை சோதிக்க ஒருவர்
இருக்கிறார். எங்களுக்கு முன் சென்றவரிடம் “பாட்டல் ஏதும் இருக்கா?” என்று
கேட்டார், அதற்கு அவர் “வடை இருக்கிறது” என்றார். பையை சோதித்தார். கோட்டர்
மாட்டியது, அது பஞ்சயத்து ஆனது வேறுக்கதை. அருவிக்கு செல்ல 200 மிட்டர் நடக்க
வேண்டும். கார் பேருந்தில் வந்தவர்கள் நேராக உள்ளே சென்றுவிடலாம். அதனால் நீங்கள்
காரிலோ பேருந்திலோ மதுபானவகையறாக்களை உள்ளே கொண்டுசெல்ல பெரிதாகத் தடை இருக்காது.
ஆனால் தயவுசெய்து கொண்டுசெல்லதிர்கள்.
வானகங்கள் நிறுத்துமிடத்திற்கு சற்று அருகிலேயே சுற்றுலாப்பயணிகள் ஆண்கள்
மற்றும் பெண்கள் குழந்தைகள் தனித்தனியாக ஆனந்தமாக குளித்தனர். சற்று கீழே
இறங்கினால் இரும்பு தடுப்பு அமைத்து குளிக்க இடம் அமைக்கப்பட்டுள்ளது
அதிலேயும் குளிக்கலாம். இளைஞர்கள் இன்னும்
சற்று மேலே போய் குளித்துகொன்டிருதனர். அதைத்தாண்டி சிலபேர், அதையும் தாண்டி
சிலபேர் என்று மேலே மேலே சென்றுள்ளனர். நங்கள் ஒரு தோதான இடத்தில் குளிக்க
ஆரம்பித்தோம்.
தண்ணீர் சில்லென்று இருந்தது. தூய்மையான குடிதண்ணீர் முக்கியகமாக
நல்லத்தண்ணிர். ஆனால் குடிக்கவேண்டாம் மீறிக் குடித்தால் வயிற்றுவலி,
வயிற்றுப்போக்கு நிச்சயம் வரும் எச்சரிக்கை தேவை. தண்ணிரில் நிறைய நீர் வாள்
உயிரினங்கள் இருந்ததைக் காணமுடியும், பாறை புழுக்கலும் இருக்கிறது எச்சரிக்கை
தேவை, கண்டிப்பாக இது உங்கள் இரத்தம் உரிஞ்சிவிடும், குழந்தைகளை அவ்வப்போது
கவனிக்கத்தவராதிர்கள். நங்கள் குளித்துவிட்டு கிளம்பலாம் என்று நினைக்கும்போது
இன்னும் மேலே இளைஞர்களின் சதத்தம் கேட்டது. அங்கேப்போய் பார்த்தால் 50 பேர்
இருப்பார்கள் குளிக்கவும் அந்த இடம் மிகவும் நன்றாக இருந்தது. பெண்கள் குழந்தைகளை
இங்கே அழைத்துச் செல்லவேண்டாம், செல்லவும் கூடாது.
இந்த அருவிக்கு சொல்லும் அளவிற்கு சோப்பு ஷாம்பூ போன்றவற்றால் இன்னும் அழிவு
வரவில்லை. இங்கே செல்பவர்கள் தயவுசெய்து சோப்பு ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம். இந்த
நீரை நிறைய கிராமம்கள் குடிநீருக்காக நம்பியிருக்கிறார்கள். தயவுசெய்து அசுத்தம்
செய்யாதீர்... அசுத்தம் செய்யாதீர்... அசுத்தம் செய்யாதீர்...
ஆனால் கடைசியாக சோதனையாக முடிந்தது இந்தப்பயணம், ஆம் இங்கே இருந்து
கடைசிப்பெருந்து மாலை 4.15 மணிக்கு. இப்போதுதான் நகரப்பேருந்தில் இங்கே வந்து மிகப்பெரிய தவறைச்
செய்ததது புரிந்தது. ஆம் அந்தப் பேருந்து வரவில்லை, இப்போது எனக்கு சமிபத்தில்
திரைக்கு வந்த நவீன சரஸ்வதி சபதம் திரைப்படம்தான் என் நினைவுக்கு வந்தது.
எங்களிடம் இரண்டு வழிகள் மட்டுமே இருந்தது ஒன்று பெரியகுளம் வரை நடந்து
செல்லவேண்டும், ஆனால் இதுதான் அதிகமாக நடக்கும். இல்லயேல் ஏதாவது ஆட்டோ வரவேண்டும்
அதில் செல்லலாம் ஆனால் வரவேண்டுமே...!. வேறுவழி அங்கிருந்து நடந்தே பெரியகுளம்
வந்தோம் ஆனால் ஒரு குறுக்குவழி தேடிக்கண்டுபிடித்து வந்தோம், ஆம் பெரியகுளம்
பழையப்பேருந்து நிலையத்தில் இருந்து சற்று தூரம் வந்தால் ஒரு பெட்ரோல் நிலையம்
இடது பக்கம் இருக்கும், இன்னும் கொஞ்சம் சென்றால் இடதுபக்கம் சிரியசாலை பிரியும்
அதில் சென்றால் 5 கி.மீ தொலைவுதான் வரும்.
குறிப்பு :
- ஆண்டு முழுவதும் தண்ணிர் வரும், கொடைக்கானலில் மழை பெய்தால் நிறைய நீர்
வரும்.
- கண்டிப்பாக சுற்றுலா வாகனங்களில் வந்துவிடுங்கள்.
- இங்கே ஒரே ஒரு கடை மட்டும்தான் உள்ளது. ஆதலால் உணவுப்பொருள்கள்
கிடைக்காது.
- தயவுசெய்து மதுபானம் கொண்டுசெல்ல வேண்டாம். சோப்பு ஷாம்பூ பயன்படுத்த
வேண்டாம்.
நல்ல அனுபவமோ
ReplyDeleteநல்ல அனுபவமோ
ReplyDelete