நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று
நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.
புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய
அந்தஸ்து அடைவாள்.
காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.
மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.
உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள்.
உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.
நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.
தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.
கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.
மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.
மார்பகத்தில் சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில்
திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.
மார்பகத்தில் கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என
சாஸ்திரம் சொல்கிறது.
உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச
சாஸ்திரத்தின் ஜோதிடம்.
முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.
வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.
தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.
பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.
பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.
பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.
பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும்
பிறக்கும்.
வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.
இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.
வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.
இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.
பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.
மச்சங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்!
அறிவியல் அறிஞர்கள், இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்.
ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு
மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும்.
மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல
கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில
ஆபத்துக்களையும் உருவாக்கும்.
சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு
உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது.
மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால்
கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும்.
நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது,
உண்ணா நோன்பு
இருந்து இறப்பது போன்றவை ஏற்படும்.
ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி
நெறியை மீறுதல், குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மனசாட்சிக்கு
அப்பார்பட்ட செயல்களை செய்வார்கள்.
குரு மேட்டில் மச்சம் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள், திடீரென தூக்கி எறியப்படுவார்கள்.
சுண்டு விரலுக்குக் கீழே இருப்பது புதன் மேடு. அதற்குக் கீழே இருப்பது
செவ்வாய் மேடு. செவ்வாய் மேட்டில், உள் செவ்வாய் மேடு, வெளிச் செவ்வாய் மேடு என்று இரண்டு வகைப்படும்.
உள்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் அதனை
அனுபவிக்க துணைவியர் இல்லை என்று புலம்ப வைக்கும்.
வெளிச் செவ்வாயில் கரும்புள்ளி இருந்தால் அரசு வழியிலோ அல்லது வழக்குகளிலோ
நமது சொத்துகள் பறிபோகும். அதாவது சாலை அமைக்க நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல்,
வழக்கில்
எதிராளிக்குச் சாதகமாக தீர்ப்பு அமைந்து சொத்து கைவிட்டுப் போதல் போன்றவை
ஏற்படும்.
கட்டை விரலுக்குக் கீழே இருக்கும் மேடு சுக்கிரன் மேடு. ரொம்ப முக்கியமான
மேடு. சுக்கிர மேட்டில் மெல்லிய கோடுகள் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
புள்ளிகள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது.
புள்ளி இருந்தால் அது ஒழுக்கக் கேடு. பலருடன் செல்வது, பல பெண்களிடம் செல்வது
போன்றவை ஏற்படும். உடலுறவில் பல்வேறு தவறான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள்.
சுக்கிரன் மேட்டிற்கும், வெளிச் செவ்வாய் மேட்டிற்கும் கீழே நடுவே இருப்பது சந்திரன் மேடு. அதாவது
உள்ளங்கையின் சுண்டு விரலுக்குக் கீழே கடைசியான மூலைப் பகுதிதான் சந்திரன் மேடு.
சந்திரன் மேட்டில் புள்ளிகள் இருந்தால் மனநலம் குன்றியக் குழந்தைகள், நரம்புக் கோளாறு போன்றவை
ஏற்படும்.
No comments:
Post a Comment