Thursday, 20 November 2014

மறைந்திருக்கும் கேமெராக்கள்


தொழில்நுட்ப வளர்ச்சி சில விதங்களில் மக்களுக்கு நன்மையை விளைவித்தாலும், பல வழிகளில் தீமைகளையும் விளைவிக்கின்றது. ஆரம்பத்தில் சில தொழில்நுட்பங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பயன்பாடு அதிகரித்தவுடன் அதன் பின் விளைவுகள் வெளிப்படுகின்றன. அந்த வகையில் கேமரா தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அதன் பயன்பாடு அனைவரையும் கவர்ந்ததோடு, அதன் தேவையும் அதிகரித்து. 

தற்போது இருக்கும் விஞ்ஞான உலகில் கேமராக்களில் பல முன்னேற்றங்களை நாம் கடந்து வந்து விட்டோம். ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் இருந்து தற்போது கடுகளவு வரை கேமராக்களின் அளவு குறைந்துவிட்ட நிலையில் அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கின்றது. கேமரா அச்சுறுத்தல்கள் ஒரு பக்கம் அதிகரித்தாலும் அதை எதிர்கொள்வது எப்படி என்றும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம்.

உங்கள் அறையில் இருக்கும் வினோதமான பொருட்களை கூர்ந்து கவனிக்கவும்
.

தேடுதலின் போது கவனமாக இருக்க வேண்டும், சில கேமராக்கள் செயல்படும் போது குறைந்த அளவு சப்தம் கொடுக்கும்
அல்லது சப்தமே வராது.

அறையில் இருக்கும் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விளக்குகள் இருக்கும், இதன் மூலம் கேமராக்களை கண்டறிவது சுலபமாகிறது.

இப்போ டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண்னாடிகளில் பார்க்கவும்
.

பின்ஹோல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அதனால் டார்ச் லைட் கொண்டு தேடும் போது எங்காவது வெளிச்சம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கும்
.

செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறிய உங்க செல்போனையும் பயன்படுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், க்ளிக் சத்தம் உங்களுக்கு கேட்டால் அங்கு கேமரா இருப்பதாக அர்த்தம்
.

உங்க அறையில் இருக்கும் சிறிய ஓட்டைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கலாம்
.

பொது இடங்களான சில பெரிய கட்டிடங்களிலும் கேமராக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்
முக்கியமாக துணிக்கடை மற்றும் உடை மற்றும் இடத்திலும் இருக்கலாம்.

டிடெக்டர் இணையங்களில் தற்போது கிடைக்கும் வயர்லெஸ் கேமரா டிடெக்டர்களை பயன்படுத்தலாம், இதுவும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறியும்
.


No comments:

Post a Comment