பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 2 முதல் 5ம் தேதி வரை மண்டலங்கள் வாரியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய வங்கி ஊரியர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் இதனை அறிவித்துள்ளார். 23% ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்பட உள்ளனர். டிசம்பர் 2ல் தமிழகம், புதுவை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
டிசம்பர் 3ல் வடக்கு மண்டலம், டிசம்பர் 4ல் கிழக்கு மண்டலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 5ம் தேதி மேற்கு மண்டல வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக சி.பி. கிருஷ்ணன் அறிவித்துள்ளார். இந்த வேலைநிறுத்தத்தால் ரூ.10 ஆயிரம் கோடி பண பரிவர்த்தணை பாதிக்கப்படும்.
No comments:
Post a Comment