உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்த குரு இப்பொழுது
பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் விடு, அதாவது சிம்மத்திற்கு மாறுகிறார். உங்களுடைய
ராசி, பிதா,பக்கியஷ்தானம் மற்றும் லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.
இந்த 5ஆம் இடம் என்பது, குருவுக்கு அதிர்ஷ்டமான இடம்.
அதோடு, அவர் நல்ல இடங்களைப் பார்ப்பதால் உங்களுக்கு யோகமாக அமையும்.
“ஐந்தில் குருதான் வந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும்,
பைதனில் பணமும் சேரும், பாராளும் யோகம் வாய்க்கும், வையகம் போற்றும் வண்ணம்
வாழ்க்கையும் அமையும், செய்தொழில் வளர்ச்சியாகும், செல்வாக்கும் அதிகரிக்கும்”
என்று ஜோதிடம் சொல்கிறது.
குடும்பத்திற்காக முக்கியத் தேவைகள் நிறைவேறும், சகல
சௌபாக்கிய வசதிகளையும் பெறுவீர்கள். வீடு, வாகன அபிவிருத்தி உண்டாகும், கையில்
பணம் புரளும், கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.
திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் வரும்.
புதுமணத்தம்பதிகளுக்கு குழந்தை யோகம் உண்டு. தேக ஆரோக்கியம் கூடும். தாயார் தாய்
வழி உறவினர்களுடன் சுமூக நிலை உண்டாகும்.
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள்
மூலம் அனுகூலம் உண்டு. வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிட்டும். தந்தையாரருடன்
உறவு வலுபெறும்.
வியாபாரிகள் கூடுதல் மூலதனம் கொண்டு தொழிலை விரிவு
படுத்துவார்கள். லாபம் இரு மடங்காக வரும்.
உத்தியோகத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். உங்கள்
விருப்பங்கள் நிறைவேறும். பங்குதாரர்களிடம் கவனம் தேவை.
வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய
உயர்வு, அரசு வழிச் சலுகை கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டு.
கவுரவ பதவிகள் தேடி வரும். வெளிநாடு பயணம், வெளிநாடு தொழில் மற்றும் வெளிநாடு
தொடர்பு மூலம் உங்கள் முயற்சிகள் கைகூடும்.
No comments:
Post a Comment