Wednesday, 10 June 2015

குரு பெயர்ச்சி ரிஷபம் 2015 – 2016

உங்கள் ராசிக்கு தைரியஸ்தானத்திலிருந்து குரு பகவான் இப்போது சுகஷ்தானமான நான்காம் வீடான சிம்மத்திற்கு வருகிறார். உங்களுடைய ஆயுள் ஸ்தானம், தொழில், விரய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

“மன்னவன் நான்கில் நிற்க மலைபோல துயர் வந்தாலும் கண் எதிரில் பனியாய் மாறும் கல்வியில் வளர்ச்சி கூடும், நோய்கள் முற்றிலும் விலகி ஓடும். பொன்னான ஒப்பந்தங்கள் வந்து சேரும்” என்று ஜோதிடம் சொல்கிறது.

“குரு பார்க்க கோடி நன்மை” என்பதுபோல் யோகமான ஸ்தானங்களின் துணையால் உங்களுக்கு நற்பலன்கள் கிட்டும். இழப்பகளை ஈடுகட்டும் வாய்ப்பு உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

பூர்வபுண்ணியம், பாக்கியம், தொழில் யோகம், வாழ்கை அமைப்பு, ஆகியவை சிறப்படையும். வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் நல்ல விஷேசங்கள் நடக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சுப செலவுகள் கூடும், சுப நிகழ்ச்சிகளால் அலைச்சலும் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் பெருகும். எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கும்’. சிலர் புதிய தொழில் தொடங்கலாம். பங்குதாரர்களிடம் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் துறையிலேயே வேறு நல்ல வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சிலருக்கு ஊர் அல்லது அலுவலகம் இடமாற்றம் உண்டாகலாம். சிலருக்கு வெளிநாடு வேலை அமையும். உங்கள் வாகனம் செலவு வைக்கலாம்.


பூமி, கட்டடம், வீடு, ரியல் எஸ்டேட் மற்றும் வாகனத் துறையில் உள்ளோருக்கு நன்மை உண்டாகும்.   

No comments:

Post a Comment