Wednesday, 10 June 2015

குரு பெயர்ச்சி விருச்சிகம் 2015 – 2016

இப்பொழுது குரு உங்கள் இராசியின் 10ஆம் இடத்தைப் பார்க்கிறார். “பத்தில் குரு பதவிக்கு இடர்” என்று ஜோதிடம் சொல்கிறது. அதாவது மாற்று வேலை அல்லது தொழில் அமையும்.

பத்தாம் இடத்தில குரு அமர்வதால் கஜகேசரி யோக பலனைத் தரும். நன்மையையும் சற்று சிரமமும் தரும், தாரள பணப்புழக்கம் இருப்பதால் வந்த சிரமங்கள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை. எதிரிகள் தொல்லை குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக கிடைக்கும்.

“இரண்டினை குரு பார்த்தால் இல்லத்தில் அமைதி, நான்கினை பார்த்தால் நல்ல சுகம் கிடைக்கும், ஆறினை பார்த்தால் கடன் குறையும்” என்று ஜோதிடம் சொல்கிறது. நோய்கள் பறந்து ஆரோக்கியம் மலரும். உங்கள் செல்வாக்கு உயரும், சொந்த பந்தங்கள் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். குடும்பத்தில் சுபகாரியம் உண்டு. இருந்தாலும் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம்.

உங்கள் தொழில் மாற்றம் ஏற்படும் நேரம், புது வாகனம் யோகம் உண்டு, தொழில் சார்ந்த பயணம் அதிகமாகும்.

வியாபாரம் லாபகரமாக நடக்கும், புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் கடன் தீரும்.

வேலையில் பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும், வேலை செய்யும் இடத்தில நல்ல பெயர் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பனி மாற்றம் கிடைக்கும். வெளிநாடு வேலையும் அமையலாம்.


6ஆம் இடத்தில குரு பார்ப்பதால் சில சமயம் இடையூறுகள் வந்தாலும் முடிவில் ஜெயம், கடன் நிவர்த்தி, பீடைநிவர்த்தி போன்ற நன்மையே கிடைக்கும். 

No comments:

Post a Comment