Wednesday, 10 June 2015

குரு பெயர்ச்சி துலாம் 2015 – 2016

குரு உங்கள் இராசிக்கு 11ஆம் இடத்தில் அமரப்போகிறார். “பதினோராம் இடத்தில வந்து பார்த்திடும் குருதான் நின்றால், மதிப்பான வாழ்கை சேரும், மகிச்சியான நிலை வரும், துதிக்கின்ற தெய்வம் தன்னை, துணையாக்கி பார்த்தால், விதிகூட மாறிப்போகும், வெற்றிகள் வந்து சேரும்” என்று ஜோதிடம் சொல்கிறது.

உங்கள் செல்வாக்கு உயரும், பொருளாதாரம் உயரும், உங்கள் எதிரிகள் தோல்வி அடைவார்கள்.

குடும்பத்தில் தேவைகள் நிறைவேறும். திருமணத் தடை அகலும், சுப நிகழ்சிகள் நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை செய்வீர்கள். பொன் பொருள் சேரும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தந்தையார் உடல்நிலை முன்னேறும்.

வேலையில் ஊதிய உயர்வும், சலுகை கிடைக்கும், சிலருக்கு வெளிநாடு வேலை அமையும். வேலையில் இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரம் இரட்டிப்பு லாபம் தரும். நல்ல கூட்டாளிகள் கிட்டுவர். போட்டிகள் மறையும், பணத்தேவை பூர்த்தியாகும். தனியாகவும் தொழில் தொடங்க யோகம் உண்டு.


மாணவர்கள் கவனத்துடன் படித்து கல்வியில் வளர்ச்சி காண்பார்கள். வேலைவாய்ப்பு தேடியவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

No comments:

Post a Comment