Wednesday, 10 June 2015

குரு பெயர்ச்சி கும்பம் 2015 – 2016

குரு இப்பொது உங்கள் இராசியில் 7ஆம் வீட்டை பார்க்கிறார், அதாவது சிம்மத்திற்கு மாறுகிறார். நீங்கள் பண மழை, பாச மழை நனைவீர்கள். ஆதாயமும் பண வரவும் உண்டு. 

மனத் துணிவு, தெளிவான சிந்தனைத் திறன் கிட்டும். புகழ் பெறுவீர்கள். உடல்நலம் சிறந்து, புதிய திட்டங்கள் செயல்படுத்துவீர்கள்.

வருமானம் பன்மடங்கு பெருகும். திருமண முயற்சிகள் நிறைவேறும். வீடு வாங்கவோ அல்லது கட்டவோ வழி பிறக்கும். வாகன வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிட்டும். சகோதர பிணக்குகள் அகலும் திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் நடைபெறும். தாயின் ஆரோக்கியம் சீர்பெறும்.

தம்பதியர் ஒற்றுமையோடு இருப்பார்கள். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்து சேரும்.

தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும், பயணங்கள் பயன் தரும்.

பனியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும், பதவி உயர்வு, புதிய பொறுப்பு சலுகை பெறுவீர்கள். சிலருக்கு இடமாற்றம் கிட்டும். 

வாழ்கை துணையின் சம்பாத்தியம் கூடும். வாரிசுகள் சம்பாத்தியமும் சேரும். உதிரி வருமானம் பெருகும். 

No comments:

Post a Comment