குரு இப்பொது உங்கள் இராசிக்கு எட்டாம் இடம் பார்க்கிறார்.
எட்டாம் இடம் அஷ்டம ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீண் சந்தேகம், மன அழுத்தம், கோபம்
ஏற்பட்டு நீங்கும். உடல் நலனில் கவனம் தேவை பணவரவு நன்றாக இருக்கும். இருந்தாலும்
கவனம் தேவை.
தம்பதிகள் ஒற்றுமையோடு குடும்பம் நடத்தி பாராட்டு
பெறுவீர்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். குழந்தைகள் திருமணம், படிப்பு செலவு
போன்ற சுப செலவு உண்டு.
சொந்த வீடு, வாகனம் யோகம் உள்ளது. வேலையில் மாற்றம்
ஏற்படலாம். வெளியூர் பயணம் நன்மை தரும். வெளிநாடு செல்லும் வாய்புகள் வரலாம்.
வழக்கு சாதகமாக முடியும். பூர்வீக சொத்தில் நல்ல பங்கு கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், புதிய வீடு, வாகனம்
வாங்கும் யோகம் உண்டு. பணிசுமை அதிகமாகும். வியாபார இடத்தை மாற்ற வேண்டி வரும்.
தீவிர முயற்ச்சியில் வெற்றி கிட்டும். நிர்வாக செலவு அதிகரிக்கும், கூட்டாளிகள்
விழகி செல்லலாம். விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டிவரும்.
வேலையிடத்தில் சிரமம் குறுக்கிடும். சக பணியாளர்களை
அனுசரித்து செல்வது நல்லது. இடமாற்றம் வாய்ப்புண்டு.
No comments:
Post a Comment