Wednesday, 10 June 2015

குரு பெயர்ச்சி மீனம் 2015 – 2016

குரு இப்பொது உங்கள் இராசியில் 6ஆம் இடத்தைப் பார்கிறார். இந்த 6ஆம் இடம் கடன், வியாதி, எதிரி, போட்டி ஆகியவற்றை குறிக்கும். ஆரோக்கிய பாதிப்பும், சிறு சிறு தொல்லைகளும், விரயங்களும் உருவாகலாம்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பணம் வந்துகொண்டே இருக்கும். கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.

குடும்பத்தில் தேவை நிறைவேறும். இருந்தாலும் மனதளவில் பிரச்சினைக்கு உள்ளாவீர்கள். 

வீடு, வாகனத்தில் புதிய மாற்றத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும். சகோதிரிகள், சகோதரர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும். தாயின் உடல்நிலை பாதிக்கலாம்.

வியாபாரம் நன்றாக நடக்கும், கடன் தீரும். பயணங்கள் அதிகரிக்கும், தொழில் அதிபர்களுக்கு அலைச்சல் கூடும். விற்பனையில் சுமாரான இலக்கை அடைவீர்கள்.

வேலையிடத்தில் பனிச்சுமைக்கு ஆளாவீர்கள், சலுகை, பதவி உயர்வு, இடமாற்றம் தாமதம் ஆகலாம். சொந்த தொழில் எண்ணம் ஈடேறும்.


No comments:

Post a Comment